TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 08-07-2026
தேசியச் செய்திகள்
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ‘உக்கிரம்’ துப்பாக்கி அனைத்து சோதனைகளிலும் வெற்றி
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ட்விப்பா (Dvippa) ஸ்டார்ட்அப் நிறுவனம் இணைந்து உருவாக்கிய 'உக்கிரம்' 7.62 × 51 மி.மீ. துப்பாக்கி, 100 நாட்களில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. இந்தத் துப்பாக்கி இந்திய ராணுவம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட அனைத்து தரச் சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதனை மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPFs) ஆன மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), இந்தோ-திபெத் எல்லை போலீஸ் (ITBP), சஷஸ்த்ர சீமா பால் (SSB) மற்றும் தேசிய பாதுகாப்புப் படை (NSG) ஆகியவற்றிற்காக கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ட்விப்பா நிறுவனம், 2021 ஆம் ஆண்டு உற்பத்தி உரிமம் பெற்று, இதுவரை 100-க்கும் மேற்பட்ட துப்பாக்கி வகைகளை உருவாக்கியுள்ளது. உக்கிரம் துப்பாக்கி 4 கிலோவிற்கும் குறைவான எடையுடன், 500 மீட்டர் தூரம் வரை துல்லியமாக சுடும் திறன் கொண்டது.
வாராந்திர & மாதாந்திர அப்டேட்களுடன் முழு TNPSC தயாரிப்பு
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 09-07-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 07-07-2026
சமகால இணைப்புகள்
Fri Oct 02 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 02-10-2026
Thu Oct 01 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 01-10-2026
Wed Sep 30 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 30-09-2026
Tue Sep 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 29-09-2026
Mon Sep 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் - 28-09-2026
Sun Sep 27 2026