TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 27-03-2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 27-03-2026
சர்வதேசச் செய்திகள்
பிரான்ஸ் ஜி7 உச்சி மாநாடு 2026
ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டில் ஜூன் 15 முதல் 17, 2026 வரை நடைபெற உள்ளது, இதில் இந்த ஆண்டிற்கான தலைமை நாடாக பிரான்ஸ் செயல்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா, தென்கொரியா, பிரேசில், கென்யா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சீனா இந்த அழைப்பை நிராகரித்து மாநாட்டில் பங்கேற்க மறுத்துள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தடுப்பது மாநாட்டின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது
வடகொரியா–பெலாரஸ் நட்பு ஒப்பந்தம் 2026
வடகொரியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையே நட்பு ஒப்பந்தம் மார்ச் 26, 2026 அன்று பியாங்யாங் நகரில் கையொப்பமானது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தனது சுமார் 33 ஆண்டு ஆட்சி காலத்தில் முதல்முறையாக வடகொரியாக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் உடன் சந்திப்பு நடத்தினார். சர்வதேச தடைகள் எதிர்கொண்டு வரும் இவ்விரு நாடுகளும் ராணுவம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
தேசியச் செய்திகள்
இந்தியாவில் சுகாதார காப்பீட்டு வளர்ச்சி 2024–25
இந்தியாவின் சுகாதார காப்பீட்டு துறை 2024–25 நிதியாண்டில் சுமார் 9% வளர்ச்சி பதிவு செய்து, மொத்த பிரீமியம் வசூல் ₹1.2 லட்சம் கோடி என்ற அளவைத் தாண்டியுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்கள் காப்பீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, அதிக காப்பீட்டு தொகை, மற்றும் மேம்பட்ட வசதிகள் காரணமாக பிரீமியம் உயர்ந்துள்ளது. காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ‘ரொக்கமில்லா சிகிச்சை’ நடைமுறைக்கான காலக்கெடுவை நிர்ணயித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1 மணி நேரத்திற்குள் முன் அனுமதி மற்றும் டிஸ்சார்ஜ் நேரத்தில் 3 மணி நேரத்திற்குள் இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. 2024–25 நிதியாண்டில் காப்பீடு தொடர்பாக 1,37,361 புகார்கள் பெறப்பட்டதில், 1,27,755 (93%) புகார்கள் அதே ஆண்டில் தீர்க்கப்பட்டுள்ளன. IRDAI காப்பீட்டு நிறுவனங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்து, காப்பீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
IRDAI – காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
IRDAI என்பது இந்தியாவின் காப்பீட்டு துறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பு
1999 ஆம் ஆண்டு, IRDA சட்டம், 1999 மூலம் நிறுவப்பட்டது
தலைமையகம்: ஹைதராபாத்
இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது
காப்பீட்டு நிறுவனங்களை பதிவு செய்து கண்காணிக்கும்
இன்ஃபோசிஸ் – அமெரிக்க நிறுவனங்கள் கையகப்படுத்தல் 2026
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனம் இன்ஃபோசிஸ், மார்ச் 26, 2026 அன்று அமெரிக்காவைச் சேர்ந்த Optimum Healthcare IT மற்றும் Stratas நிறுவனங்களை மொத்தம் ₹5,260 கோடி மதிப்பில் கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதில் Optimum Healthcare IT நிறுவனம் 46.5 கோடி டாலர் மற்றும் Stratas நிறுவனம் 9.5 கோடி டாலர் மதிப்பில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. Optimum Healthcare IT நிறுவனம் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு எண்ம தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஆகும்; Stratas நிறுவனம் காப்பீட்டு தொழில்நுட்ப துறையில், குறிப்பாக சொத்து மற்றும் விபத்து காப்பீடு பிரிவில் செயல்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் இன்ஃபோசிஸ் சிஇஓ சலில் பரேக் முக்கியமானவர், மேலும் இந்த கையகப்படுத்தல் ஜூன் 2026க்குள் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் சைபர் அச்சுறுத்தல்கள் 2025
சைபர் பாதுகாப்பு நிறுவனம் Kaspersky வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு இந்தியாவில் மூன்றில் ஒரு கணினி பயனர் இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் (ஆஃப்லைன்) சைபர் தாக்குதல்களை சந்தித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டு, இந்தியாவில் சுமார் 6.46 கோடி ஆஃப்லைன் அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன; இதனால் 29.8% பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் USB டிரைவ், போர்ட்டபிள் ஹார்ட் டிஸ்க், CD மற்றும் பிற சேமிப்பு சாதனங்கள் மூலம் நடைபெற்று, தரவு திருட்டு அதிகரித்துள்ளது. உலகளவில் கடவுச்சொல் திருடும் மென்பொருள்கள் 59% மற்றும் ஸ்பைவேர் மென்பொருள்கள் 51% அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி 2026: 5 நாடுகளுக்கு அனுமதி
பிப்ரவரி 28, 2026 முதல் ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப்படைகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி வழங்கியது. இந்த மோதலால் சர்வதேச கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கப்பல்களுக்கு மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையில், மார்ச் 23, 2026 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 5 நாள் போர் நிறுத்தம் மற்றும் 15 அம்ச திட்டம் அறிவித்தார்; இதை ஈரான் ஒருதலைப்பட்சமானது என்று விமர்சித்தது. சமரச முயற்சிகளில் துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளன. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியின் பொறுப்பாளர் ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டாங்க்சிரி, பந்தர் அப்பாஸ் அருகே நடைபெற்ற இஸ்ரேல் விமானத் தாக்குதலில் உயிரிழந்தார்.
உள்நாட்டு தொழில்நுட்பத்திற்கான இந்திய ராணுவம்–ஐஐடி மெட்ராஸ் - புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய ராணுவத்தின் மின்னணு மற்றும் இயந்திரப் பொறியியல் படைப்பிரிவு (EME), ஐஐடி மெட்ராஸ் (IIT-M) பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை உடன் சென்னையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டு உள்நாட்டு ராணுவ தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த இணைந்துள்ளது. இந்த கூட்டாண்மையின் முக்கிய அம்சமாக ஆவடியில் ‘நோடல் உள்நாட்டு மையம்’ (Nodal Indigenisation Centre) அமைக்கப்பட உள்ளது, இது பாதுகாப்புத் துறை உற்பத்தி மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும். இந்த ஒத்துழைப்பு உணர்திறன் அமைப்புகள், சைபர்-இயற்பியல் அமைப்புகள், தன்னாட்சி தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் கவனம் செலுத்துகிறது; இதில் EME செயல்பாட்டு தேவைகளை வழங்க, பிரவர்தக் அறக்கட்டளை ஸ்டார்ட்அப்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து களத்தில் பயன்படுத்தக்கூடிய தீர்வுகளை உருவாக்குகிறது.
பாதுகாப்பு விதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியம்–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்
ஐரோப்பிய நாடாளுமன்றம், பிரஸ்ஸல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை பாதுகாப்பு அம்சங்களுடன் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஜூலை மாதம், ஸ்காட்லாந்தின் டர்ன்பெரி நகரில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரால் பேச்சுவார்த்தை செய்யப்பட்டதாகும்; இதில் பெரும்பாலான பொருட்களுக்கு 15% வரி விதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய விதிகளின்படி, அமெரிக்கா ஒப்பந்த நோக்கங்களை பாதித்தாலோ, EU பொருளாதார அமைப்புகளுக்கு பாகுபாடு காட்டினாலோ, உறுப்பு நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு, வெளியுறவு அல்லது பாதுகாப்பு கொள்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, அல்லது பொருளாதார வற்புறுத்தல் (economic coercion) மேற்கொண்டாலோ, இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். இந்த பாதுகாப்பு விதிகள் டென்மார்க்கின் அரை-தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்து தொடர்பான பதற்றத்துடன் தொடர்புடையது. மேலும், இந்த ஒப்பந்தம் குறித்து EU வர்த்தக பிரதிநிதி மாரோஸ் செஃப்சோவிக் மற்றும் அமெரிக்க பிரதிநிதி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
விளையாட்டுச் செய்திகள்
திருநங்கை வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் தடை – IOC முடிவு
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC), பாலின பரிசோதனையை கட்டாயமாக்கி, திருநங்கை பெண்கள் வீராங்கனைகள் பெண்கள் பிரிவில் பங்கேற்க முடியாது என்று அறிவித்துள்ளது. இந்த விதி 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் முதல் அமலுக்கு வரும். பெண்கள் பிரிவில் பங்கேற்பு உயிரியல் ரீதியான பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்றும், இது ஒருமுறை செய்யப்படும் SRY மரபணு பரிசோதனை அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றும் IOC தெரிவித்துள்ளது. SRY மரபணு வாழ்நாள் முழுவதும் நிலையானது மற்றும் ஆண் பாலின வளர்ச்சியை காட்டும் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது; இதற்கான பரிசோதனை எச்சில் மாதிரி மூலம் எளிதாக செய்யப்படும். இந்த முடிவு, 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு செப்டம்பர் 2024 முதல் தொடங்கிய ஆய்வு அடிப்படையில் எடுக்கப்பட்டது. பெண்கள் பிரிவுக்கான தகுதி விதிகளை மறுசீரமைக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை தொடங்கியவர் IOC-ன் முதல் பெண் தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி ஆவார்.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
QS தரவரிசை 2026
குவாக்கவெரெல்லி சைமண்ட்ஸ் (QS) வெளியிட்ட QS உலக பல்கலைக்கழகங்களின் பாடப்பிரிவு தரவரிசை 2026 பட்டியலில், வேலூர் விஐடி பல்கலைக்கழகம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகளவில் 119-ம் இடம் பெற்று, கடந்த ஆண்டை விட 23 இடங்கள் முன்னேறியுள்ளது மற்றும் இந்திய அளவில் 6-ம் இடம் பெற்றுள்ளது. இந்த பல்கலைக்கழகம் 17 பாடப்பிரிவுகளில் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது. இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் (86) மற்றும் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் (87) ஆகியவை முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன. மேலும், கணிதவியல் (104), தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (101–200), மெட்டீரியல் சயின்ஸ் (137), மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல் மற்றும் மேனுபேக்சரிங் (148) ஆகிய பிரிவுகளிலும் இடம் பெற்றுள்ளது. இதற்கு மேலாக, ஆர்ட் மற்றும் டிசைன் (201–300), சிவில் என்ஜினீயரிங் (201–275), கெமிக்கல் என்ஜினீயரிங் (201–250), வேதியியல், இயற்பியல் மற்றும் வானியல் (251–300), புள்ளியியல் மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சி (251–275), பயாலஜிக்கல் சயின்ஸ் (301–350), சுற்றுச்சூழல் அறிவியல் (351–400) மற்றும் மருத்துவம் (551–600) ஆகிய பாடப்பிரிவுகளிலும் தரவரிசையில் இடம்பெற்றுள்ளது.
முதல் பெண்மணிகள் மாநாட்டில் ‘Figure 3’ மனித ரோபோ அறிமுகம்
வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் பெண்மணிகள் மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் தலைமையில், ‘Figure 3’ எனப்படும் மனித ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோவை அமெரிக்க ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ‘Figure’ உருவாக்கியுள்ளது. இந்த மாநாட்டில் 45 நாடுகளின் முதல் பெண்மணிகள் பங்கேற்றனர். வெள்ளை மாளிகையின் முதல் ரோபோ விருந்தினராக இந்த ரோபோ அறிமுகமானது. இது ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், அரபிக், ஜப்பானீஸ், ஹிந்தி, ஸ்லோவேனி, உக்ரேனியன், ஜார்ஜியன் மற்றும் வங்காளம் உள்ளிட்ட 11 மொழிகளில் பேசும் திறன் கொண்டது. இந்த மனித ரோபோ வீட்டு வேலைகளைச் செய்ய உருவாக்கப்பட்டதுடன், இதில் கேமராக்கள் மற்றும் உணர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஸ்பெயின் பேட்மிண்டன் வீராங்கனை கரோலினா மரின் ஓய்வு
ஸ்பெயின் பேட்மிண்டன் வீராங்கனை கரோலினா மரின், 32 வயதில், மூன்று முறை உலக சாம்பியன் (2014, 2015, 2018) மற்றும் 2016 ரியோ ஒலிம்பிக் தங்கப் பதக்க வென்றவர், பாரிஸ் ஒலிம்பிக் 2024 அரையிறுதியில் ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவர் தனது பிறந்த இடமான ஸ்பெயினின் ஹுவெல்வா நகரில் நடைபெறவிருந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் விளையாடத் திட்டமிட்டிருந்தார். 2016 ஒலிம்பிக் இறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்துவை வீழ்த்தி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் ஆசியர் அல்லாத வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
தினசரி TNPSC நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா மூலம் ரேங்க் உயர்த்துங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்மேலும் படிக்க
புதிய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-03-2026
முந்தைய பதிவு
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 26-03-2026
சமகால இணைப்புகள்
Wed Jul 29 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-07-2026
Tue Jul 28 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 28-07-2026
Wed Jul 22 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 22-07-2026
Tue Jul 21 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-07-2026
Sat Jul 18 2026
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 18-07-2026
Thu Jul 16 2026