Current Affairs Mon Nov 10 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10-11-2025

தமிழ்நாடு செய்திகள்

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

அரியலூர் மாவட்டம் திருமனூர் அருகே அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில், இவ்வாண்டு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சி நிலவுகிறது. அரியலூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்தில், 454 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ள இந்தச் சரணாலயம், மத்திய ஆசியா, திபெத், லடாக், வட ரஷ்யா, சைபீரியா போன்ற பிரதேசங்களில் இருந்து பறவைகளை ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை வரவேற்கிறது.

இந்த ஆண்டு, வெளிநாட்டு பறவைகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. பகல் நேரங்களில் பறவைகள் அருகிலுள்ள அறுவடை செய்யப்பட்ட வயல்களில் நெல் தின்று தங்குகின்றன; மாலை நேரத்தில் அவை மீண்டும் சரணாலயத்துக்குத் திரும்பி வந்து, கண்ணைக் கவரும் காட்சியை உருவாக்குகின்றன. சீசன் காலத்தில் 100-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகள் மற்றும் 37 வகையான நிலப்பறவைகள் இங்கு காணப்படுகின்றன.

தற்போது காணப்படும் நீர்வாழ் பறவைகள்கூழைக்கடா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிரும் அரிவாள் மூக்கன், சாம்பல் கொக்கு, மைல் கால் கோழி, ஆலா, கரண்டி மூக்கன், தந்தை கொத்தி நாரை, பாம்பு நாரை, கொசு உல்லான், சிறிய கொக்கு, முக்குளிப்பான், வண்ண நாரை, மடையான், நாமக்கோழி, நீர்க்காகம் ஆகியவை அடங்கும். நிலவாழ் பறவைகளில், ஆள்காட்டி குருவி, பருந்து, சிட்டு, வேதவால் குருவி, மரங்கொத்தி, மைனா, புறா, காக்கா, மயில் போன்றவை முக்கியமானவை.

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், 2023 மே 24 அன்று சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலப் பகுதி (Wetland of International Importance) என ராம்சர் ஒப்பந்தத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது.

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனைக்கான நடமாடும் மருத்துவ சேவை விரைவில் தொடக்கம்

பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனையை எளிதாகவும் முழுமையாகவும் வழங்கும் நோக்கில், தமிழக அரசு விரைவில் மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் நடமாடும் மருத்துவ வாகன சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்தத் திட்டம், பெண்களின் முன்கூட்டிய புற்றுநோய் கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

சைதாப்பேட்டை அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 259 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 மதிப்பிலான அரசு சேமிப்புப் பத்திரங்களையும், 118 இளம் பெண்களுக்கு ரூ.50,000 வரையிலான காசோலைகளையும் வழங்கினார். மேலும், சிறுமிகளுக்கு சிறுவயதில் திருமணம் செய்து வைப்பதைத் தடுக்கும் கையேடு இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக அரசு பெண் சிசுக் கொலை, சிறுவர் திருமணத்தைத் தடுக்கும் வகையில் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகக் கூறினார். மேலும், இந்தத் திட்டத்தில் பலனடையக்கூடிய குடும்பங்களின் வருமான வரம்பு ரூ.72,000 இலிருந்து ரூ.1.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

பெண்களை புற்றுநோய் பாதிப்பிலிருந்து முழுமையாகக் காக்கும் நோக்கில், ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய் பரிசோதனைக்கான மருத்துவ வாகன சேவைகள் தொடங்கப்பட உள்ளன என்றும், 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் ரூ.36 கோடி மதிப்பிலான திட்டமும் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருச்சியில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கவிருக்கும் “அன்புச் சோலை” திட்டம்

மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும், அவர்களுக்கு மன உற்சாகம் அளிக்கவும் தமிழக அரசு உருவாக்கிய ‘அன்புச் சோலை’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திருச்சியில் தொடங்கி வைக்கிறார். வீடுகளில் உள்ள முதியோர்கள் தனிமை உணர்ச்சி அடையாமல் சமூகத் தொடர்பை வளர்க்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் ரூ.10 கோடி செலவில் 25 அன்புச் சோலை – மூத்த குடிமக்கள் மனமகிழ் மையங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு மையத்திலும் பொழுதுபோக்கு செயல்பாடுகள், யோகா, நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு சேவைகள் வழங்கப்படும். மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா 2 மையங்கள், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் தலா 1 மையம், சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 1 மையம் என மொத்தம் 25 மையங்கள் தொடங்கப்படுகின்றன. ஒவ்வொரு மையமும் குறைந்தது 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் தேவையான வசதிகளுடன் அமைக்கப்படும்.

விளையாட்டுச் செய்திகள்

ஏடிபி ஃபைனல்ஸில் இருந்து விலகிய நோவக் ஜோகோவிச்

செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச், முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதால் இந்த ஆண்டு நடைபெறும் ஆடவருக்கான ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டேவிஸ் கோப்பை இறுதியில் இத்தாலியின் லொரென்சோ முசட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சில மணி நேரங்களுக்குப் பிறகே இந்த முடிவை வெளியிட்டார்.

மூன்று மணி நேரம் நீடித்த கடினமான அந்தப் போட்டி காரணமாக முதுகு வலி மீண்டும் உருவாகி, ஜோகோவிச் ஏடிபி ஃபைனல்ஸில் பங்கேற்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதேபோல், அவர் கடந்த ஆண்டும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டபிள்யுடிஏ ஃபைனல்ஸில் வரலாறு படைத்த எலனா ரைபகினா – உலக நம்பர் 1 சபலென்காவை வீழ்த்தி சாம்பியன்

கஜகஸ்தானின் எலனா ரைபகினா, உலக நம்பர் 1 மற்றும் நடப்பு சாம்பியனான அரினா சபலென்காவை 6-3, 7-6 (7/0) என்ற செட்களில் வீழ்த்தி, முதல் முறையாக டபிள்யுடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், டபிள்யுடிஏ ஃபைனல்ஸில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் கஜகஸ்தான் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

மூன்றாவது முறையாக இந்தப் போட்டியில் பங்கேற்ற ரைபகினா, தொடக்க சுற்றிலிருந்து இறுதிச் சுற்று வரை தோல்வியில்லாமல் விளையாடி, ரூ.46.40 கோடி மதிப்பிலான பரிசுத் தொகையை பெற்றார். இது, பெண்கள் டென்னிஸில் இதுவரை வழங்கப்பட்ட மிக உயர்ந்த ரொக்கப் பரிசு ஆகும். சபலென்காவுடன் 14 முறை மோதிய ரைபகினா, இப்போது தனது 6-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இரட்டையர் பிரிவில், ரஷியாவின் வெரோனிகா குதர்மிடோவா மற்றும் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் இணை, ஸிம்பாப்வே வீராங்கனை கேப்ரியிலா டப்ரோவ்ஸ்கி மற்றும் நியூஸிலாந்தின் எரின் ரூட்லிஃப் இணையை 7-6 (7/4), 6-1 என்ற செட்களில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக சாம்பியன் கோப்பை கைப்பற்றினர். ஆண்டு முடிவில் நடைபெறும் டபிள்யுடிஏ ஃபைனல்ஸ் போட்டியில், உலக தரவரிசையில் முன்னணி 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் மரபு உள்ளது.

முதல்தர கிரிக்கெட்டில் 8 தொடர்ச்சியான சிக்ஸர்கள் — மேகாலய வீரர் ஆகாஷ் சௌத்ரியின் அதிரடி சாதனை

அருணாசல பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் மேகாலயாவின் ஆகாஷ் சௌத்ரி, முதல்தர கிரிக்கெட்டில் அடுத்தடுத்து 8 பந்துகளில் சிக்ஸர்கள் அடித்த முதல் வீரராக வரலாறு படைத்தார். இதன் மூலம், அவர் மொத்தம் 11 பந்துகளில் அரைசதம் அடித்து, இந்த ஃபார்மட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் பதிவு செய்தார்.

இதற்கு முன், இங்கிலாந்தின் வெய்ன் வைட் 2012 ஆம் ஆண்டு 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே முதல்தர கிரிக்கெட்டின் வேகமான சாதனையாக இருந்தது. இதோடு, ஆகாஷ், ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த உலகின் மூன்றாவது வீரராகவும் பெயர் பெற்றுள்ளார். முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகளின் சர் கார்பீல்டு சோபர்ஸ் (1968) மற்றும் இந்தியாவின் ரவி சாஸ்திரி (1984-85) மட்டுமே இதைச் செய்திருந்தனர்.

எகிப்தில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் அனிஷ் பன்வாலாவுக்கு வெள்ளி வெற்றி

எகிப்தில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், இந்திய வீரர் அனிஷ் பன்வாலா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆண்கள் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் 28 புள்ளிகளுடன் இறுதிச்சுற்றில் 2-ஆம் இடத்தை பிடித்தார். பிரான்ஸின் கிளமென்ட் பெசாகெட் 31 புள்ளிகளுடன் தங்கம் வென்றார்; உக்ரைனின் கிளமென்ட் ஹோராஷேனெட்ஸ் 25 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றார்.

இதர இந்திய வீரர்களில் ஆதர்ஷ் சிங் 575 புள்ளிகளுடன் 22-ஆம் இடத்தையும், சமீர் 571 புள்ளிகளுடன் 35-ஆம் இடத்தையும் பிடித்து தகுதிச்சுற்றில் வெளியேறினர். இதேவேளை, 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணி பிரிவில் இந்திய அணி தகுதிச்சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் கண்டது. இளவேனில் வாலறிவன் – அர்ஜுன் பபுதா இணை 632.3 புள்ளிகளுடன் 8-ஆம் இடம் பெற்றது; ஷ்ரேயா அகர்வால் – ருத்ராங்க்ஷ் பாட்டீல் இணை 628.8 புள்ளிகளுடன் 21-ஆம் இடம் பெற்றது.

போட்டியின் நான்காம் நாளின் முடிவில், இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ஆம் இடத்தில் இருந்தது. சீனா, தென் கொரியா மற்றும் ஜெர்மனி முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

தேசியச் செய்திகள்

நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை ஆய்வு செய்யும் இந்தியா

இந்திய நீதித்துறை தற்போது ஆராய்ச்சி, தரவு பகுப்பாய்வு மற்றும் வழக்கு செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கருவிகளின் பயன்பாட்டை ஆராயத் தொடங்கியுள்ளது என்று, விரைவில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.

புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச வணிக நீதிமன்ற சங்க மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நீதித்துறையின் மையமாக உள்ள மனிதநேயத்தை கைவிடாமல் தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது தான் எதிர்கால நீதியமைப்பின் முக்கிய திசை எனக் கூறினார்.

பல துறைகளில் இந்தியா–அங்கோலா உறவை வலுப்படுத்தும் புதிய ஒத்துழைப்பு

இந்தியா மற்றும் அங்கோலா இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில், மின்னணு தொழில்நுட்பம், நீர்வள மேலாண்மை, வணிகம், வேளாண்மை, சுகாதாரம், கடல் வளங்கள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகியுள்ளன.

அங்கோலாவிற்கு நான்கு நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இது அந்நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் பயணம் ஆகும். அவர் நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் அங்கோலாவின் 50-ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கிறார். மேலும், நவம்பர் 10-ஆம் தேதி அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

அங்கோலா அதிபர் மாளிகையில் குடியரசுத் தலைவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை மற்றும் ராணுவ அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவர் அங்கோலா அதிபர் ஜோ மௌவல் கோன்சல்வ்ஸ் லொரன்சோ உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

கூட்டறிக்கையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியா–அங்கோலா உறவு நட்பு, பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் இரு நாட்டு மக்களின் செழிப்பு என்ற பொதுவான இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் அங்கோலா முக்கிய பங்கு வகிப்பதாகவும், அங்கோலா சர்வதேச பெரும்பூசண இயக்கம் (IMM) மற்றும் உலக உயிர் எரிபொருள் கூட்டமைப்பு (GBA) ஆகியவற்றில் இணைய தீர்மானித்ததை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளும் இந்தி–ஆப்பிரிக்கா மன்றம் கட்டமைப்பின் கீழ் தங்களது ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், வணிகம், முதலீடு, தொழில்நுட்பம், வேளாண்மை, சுகாதாரம், கடல் வளங்கள் மற்றும் பாதுகாப்பு துறைகளில் மேலும் இணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டன

சர்வதேசச் செய்திகள்

பூடானுக்கு பிரதமர் நரேந்திர மோடி இருநாள் அரசு முறைப் பயணம்

இந்தியா மற்றும் பூடான் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் இருநாள் அரசு முறைப் பயணமாக பூடானுக்கு செல்லவுள்ளார். இப்பயணத்தின் போது, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெகாவாட் திறனுடைய பூடானின் மிகப்பெரிய நீர்மின் நிலையத்தை பூடான் மன்னருடன் இணைந்து திறந்து வைக்கிறார்.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியேல் வாங்சுக் மற்றும் பிரதமர் ஷெரிங் தோப்கே ஆகியோரை சந்தித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய மன்னரின் தந்தை மற்றும் முன்னாள் மன்னர் ஜிக்மே சிங்கியே வாங்சுக்கின் 70ஆவது பிறந்த நாள் விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்தியா அனுப்பிய புத்தரின் புனித நினைவுச் சின்னங்கள் (உடல் பாகங்கள், பொருட்கள்) பூடான் தலைநகர் திம்புவில் உள்ள தஷிச்சோ ட்சோங் மடாலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி இங்கு பிரார்த்தனை நிகழ்வில் பங்கேற்று, பூடான் அரசு நடத்தும் உலக அமைதி பிரார்த்தனை விழாவிலும் கலந்துகொள்வார். இந்த நிகழ்வுகள், இரு நாடுகளுக்குமிடையிலான ஆன்மீக மற்றும் பண்பாட்டு ஒற்றுமையை வலுப்படுத்துவதாகும்.

இந்தியா–பூடான் உறவு நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய வாய்ப்பாக மோடியின் இப்பயணம் அமையவுள்ளது. மேலும், இந்தியா–பூடான் இடையே ரூ. 4,000 கோடி மதிப்பிலான ரயில் பாதை அமைக்கும் திட்டம் கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமகால இணைப்புகள்