Current Affairs Fri Sep 05 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 05-09-2025

சர்வதேசச் செய்திகள்

ஜமைக்கா: 3-வது முறையாக பிரதமராகும் ஹோல்னஸ்

ஜமைக்காவில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.

அங்கு புதன்கிழமை நடந்த தேர்தலில் ஹோல்னஸின் ஜமைக்கா தொழிலாளர் கட்சி 34 இடங்களையும், எதிர்க்கட்சியான மக்கள் தேசியக் கட்சி 29 இடங்களையும் பெற்றன. எதிர்க்கட்சித் தலைவர் மார்க் கோல்டிங் தோல்வியை ஒப்புக்கொண்டு, வெற்றி பெற்ற ஹோல்னஸை பாராட்டியதைத் தொடர்ந்து, அவர் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்பது உறுதியானது.

தேர்தலில் வாக்குப்பதிவு விகிதம் 38.8 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய 2020 தேர்தலை விடச் சற்று அதிகம்.

ஹோல்னஸின் ஆட்சியில், இந்த ஆண்டு கொலைகள் 43 சதவீதம் குறைந்தது போன்ற காரணங்களால் அவர் மீண்டும் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவை வலுப்படுத்த முடிவு

உலகளாவிய ஸ்திரமற்ற புவி-அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவு மற்றும் தந்தை அணுகுவை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் லாரன்ஸ் வாங் முடிவு செய்தனர்.

இருதரப்பு நல்லுறவை விரிவான வியூகக் கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயர்த்துவதற்கான செயல்திட்டத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.

5 ஒப்பந்தங்கள் கையொப்பம்: விமானப் போக்குவரத்து, திறன் மேம்பாடு, பசுமை-எண்ம சார் கடற்பயணத்துக்கான தொழில்நுட்பம், விண்வெளி, அடுத்த தலைமுறை நிதி உள்ளிட்டவைக்கான எண்மசார் தரவுப் புத்தகாக்கம் உள்ளிட்ட துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

சென்னையில் திறன் மேம்பாட்டு மையம்
‘சென்னையில் தேசிய திறன் மேம்பாட்டு மையத்தை கட்டமைப்பதில் சிங்கப்பூர் ஒத்துழைத்துள்ளது. நவீன உற்பத்தித் துறையில் திறன்மிக்க பணியாளர்களை உருவாக்குவதில் இந்த மையம் கவனம் செலுத்தும்’ என்றார் பிரதமர் மோடி.

தேசியச் செய்திகள்

விபத்தில் சிக்கியவர்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை - கர்நாடக அரசு உத்தரவு

விபத்தில் சிக்கியவர்களுக்கு எவ்வித முன்பணமும் பெறாமல் உடனடியாக அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக தனியார் மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 2007-இன் படி, விபத்தில் சிக்கியவர் என்பது சாலை விபத்தில் சிக்கியவர் என்பது மட்டுமல்ல, தீக்காயங்களால் பாதிக்கப்பட்டோர் அல்லது வழுக்கிவிழுந்ததால் பலத்த காயம் அடைந்தவர்கள் அல்லது சட்ட ரீதியாக அனுமதிக்கக் கூடிய மருந்துத் தேவையின்றி அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டவர்கள், தற்கொலைக்கு முயன்றவர்கள் என அனைத்து வகையினரும் அடங்குவார்கள்.

இப்படிப்பட்ட வகைகளில் விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சைகளை அளிக்க மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படும்போது அல்லது எதிர்கொள்ளும்போது எவ்வித முன்பணமும் கேட்காமல், அவர்களுக்கு அவசர சிகிச்சைகளை அளிக்க வேண்டும். இதை மீறும் நிலையில் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

கர்நாடக மனிதநேயர் மற்றும் மருத்துவ திறனாளர் சட்டம் 2016-இன்படி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சோதனைகள், முதலுதவி உள்ளிட்டவற்றை இலவசமாகச் செய்ய வேண்டும்.

குக்கி குழுக்கள் அமைதி ஒப்பந்தம்

மணிப்பூரில் வன்முறையைக் கைவிட்டு, அமைதித் தீர்வுக்குப் பணியாற்றவும், பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் ஒப்புக்கொண்டு, மத்திய-மணிப்பூர் அரசுகளுடன் இரு குக்கி-சோ பழங்குடியினக் குழுக்கள் வியாழக்கிழமை முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.

குக்கி தேசிய அமைப்பு (கேஎன்ஓ), ஐக்கிய மக்கள் முன்னணி (யுபிஎஃப்) ஆகிய அந்த இரு குழுக்களும், மாநிலத்தில் பதற்றத்துக்குரிய பகுதிகளில் இருந்து தங்கள் முகாம்களை வேறு இடத்துக்கு மாற்றவும் ஒப்புக்கொண்டுள்ளன. குக்கி தேசிய அமைப்பின்கீழ் 16 குழுக்களும், ஐக்கிய மக்கள் முன்னணியின்கீழ் 7 குழுக்களும் செயல்படுகின்றன. பிரதமர் மோடி அடுத்த வாரம் மணிப்பூர் பயணம் மேற்கொள்ளவார் என எதிர்பார்க்கப்படும் சூழலில், மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க வழிவகுக்கும் வகையில் இந்த முக்கிய ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

மணிப்பூரில் கடந்த 2023-இல் மைதேயி சமூகத்தினர் மற்றும் குக்கி பழங்குடியினர் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டு, வன்முறை தொடர்ந்தது. 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், வீடு களைவிட்டு வெளியேறிய லட்சக்கணக்கானோர் தொடர்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க அனைத்துத் தரப்புடனும் மத்திய உள்துறை அமைச்சர் சகம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. குக்கி தேசிய அமைப்பு (கேஎன்ஓ), ஐக்கிய மக்கள் முன்னணி (யுபிஎஃப்) ஆகிய 2 குக்கி-சோ பழங்குடியின குழுக்களுடன் பிரதிநிதிகள் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் திங்கள்கிழமை முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். இக்கூட்டத்தின் நிறைவாக, குக்கி-சோ குழுக்கள், மத்திய-மணிப்பூர் அரசுகள் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையொப்பமானது.

முக்கிய தினங்கள்

இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவை வலுப்படுத்த முடிவு

உலகளாவிய ஸ்திரமற்ற புவி-அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக உறவு மற்றும் தந்தை அணுகுவை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் லாரன்ஸ் வாங் முடிவு செய்தனர்.

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை வந்த சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், தில்லியில் பிரதமர் மோடியை புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

5 ஒப்பந்தங்கள் கையொப்பம்: பின்னர், விமானப் போக்குவரத்து, திறன் மேம்பாடு, பசுமை-எண்ம சார் கடற்பயணத்துக்கான தொழில்நுட்பம், விண்வெளி, அடுத்த தலைமுறை நிதி உள்ளிட்டவைக்கான எண்மசார் தரவுப் புத்தகாக்கம் உள்ளிட்ட துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

சிங்கப்பூர் உடனான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை குறித்த காலத்துக்குள் மறுஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. செமிகண்டக்டர் அமைப்பு முறை, ஆராய்ச்சி-மேம்பாடு உள்ளிட்டவை புதிய திசையைக் காட்டியுள்ளன.

‘சென்னையில் தேசிய திறன் மேம்பாட்டு மையத்தை கட்டமைப்பதில் சிங்கப்பூர் ஒத்துழைத்துள்ளது. நவீன உற்பத்தித் துறையில் திறன்மிக்க பணியாளர்களை உருவாக்குவதில் இந்த மையம் கவனம் செலுத்தும்’ என்றார் பிரதமர் மோடி.

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

என்ஐஆர்எஃப் தரவரிசை

தேசிய உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஐந்து விருதுகளை சென்னை ஐஐடி பெற்றுள்ளது.

நாட்டின் கல்வி நிறுவனங்களுக் கான பொறியியல் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 10 ஆண்டுகளாகவும், கல்வி நிறுவனங்களின் அனைத்து வகையான செயல்பாடுகளின் பிரிவில் தொடர்ந்து 7-ஆவது ஆண்டாகவும் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இவை உள்ளிட்ட நான்கு துறைகளுக்கான தரவரிசையில் முதலிடம், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பிரிவில் 2-ஆவது இடத்தை பெற்று மொத்தம் 5 தரவரிசை விருதுகளை சென்னை ஐஐடி பெற்றுள்ளது.

மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களுக்கான தர மதிப்பீட்டு நிறுவனம் (என்ஐ ஆர்எஃப்), நாட்டிலுள்ள கல்வி நிறுவ னங்கள் குறித்த தரப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்த வளர்ச்சிக்கான இலக்குகள் என்ற அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனம் 2023-இல் ஒரு நிலைத்தன்மை பள்ளியைத் தொடங்கியது.

அடுத்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பிரிவில் கடந்த ஆண்டைப் போன்றே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முன்னர் முதற் இடத்தில் இருந்த பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம், சென்னை ஐஐடி தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் 2-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இவ்வாறு சென்னை ஐஐடி 5 தரவரிசை விருதுகளைப் பெற்றுள்ளது.

சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள்

தேசிய அளவிலான சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் 100 இடங்களில் அதிகபட்சமாக 17 உயர் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்று தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 11 உயர் கல்வி நிறுவனங்களுடன் மகாராஷ்டிரம் இரண்டாம் இடத்திலும், 9 உயர் கல்வி நிறுவனங்களுடன் உத்தரப் பிரதேசம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

தேசிய அளவிலான சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்) வெளியிட்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டுக்குள் 10-ஆவது தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுவிடும்.

கற்றல்-கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் அதற்கான வளங்கள், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பொறியியல் கல்வி நிறுவனங்கள், மேலாண்மை கல்வி நிறுவனங்கள், மருத்துவம், மருந்தியல், பல் மருத்துவம், சட்டம், கட்டடக்கலை மற்றும் வேளாண்மை ஆகியவற்றுடன் பிரத்யேகமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தப் பிரிவில் முதல் 100 இடங்களைப் பிடித்த மாநிலங்கள்: (அடைப்புக்குறிக்குள் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை)

  • தமிழகம் (17)

  • மகாராஷ்டிரம் (11)

  • உத்தரப் பிரதேசம் (9)

  • தில்லி (8)

  • கர்நாடகம் (6)

  • பஞ்சாப் (6)

  • தெலங்கானா (5)

  • ஒடிஸா (5)

  • கேரளம் (4)

  • மேற்கு வங்கம் (4)

  • ராஜஸ்தான் (4)

  • உத்தராகண்ட் (4)

  • ஆந்திரப் பிரதேசம் (3)

  • ஜம்மு-காஷ்மீர் (3)

  • அஸ்ஸாம் (2)

  • மத்தியப் பிரதேசம் (2)

  • சண்டீகர் (2)

  • ஜார்க்கண்ட் (1)

  • பிகார் (1)

  • புதுச்சேரி (1)

  • ஹரியாணா (1)

  • குஜராத் (1)

தன், நீடித்த வளர்ச்சி இலக்கு கொண்ட கல்வி நிறுவனங்கள் என 17 பிரிவுகளின் கீழ் இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 17 தமிழக கல்வி நிறுவனங்கள் இதில் இடம்பிடித்துள்ளன. ஒட்டுமொத்தப் பிரிவில், முதல் 100 இடங்களில் 17 தமிழக உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழகத்தில் 17 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் (17), வேலூர் விஐடி (21), சென்னை எஸ்ஆர்எம் தொழில்நுட்ப நிறுவனம் (22), சென்னை அண்ணா பல்கலைக்கழகம் (23), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (29), திருச்சி என்ஐடி (30), காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (68), கோவை பாரதியார் பல்கலைக்கழகம் (76), தஞ்சாவூர் САSTRA (88), சென்னை பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (90) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மருத்துவம்: மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் முதல் 50 இடங்களில் 8 தமிழக மருத்துவக் கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தில்லி எய்ம்ஸ் முதலிடத்திலும், சண்டீகர் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டாம் இடத்திலும், வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி 3-ஆம் இடத்திலும் உள்ளன.

பொறியியல்: பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்திலும், தில்லி ஐஐடி இரண்டாம் இடத்திலும், மும்பை ஐஐடி மூன்றாம் இடத்திலும் உள்ளன. தரவரிசையில் முதல் 100 இடங்களில் மொத்தம் 14 தமிழக பொறியியல் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் திருச்சி என்ஐடி 9-ஆம் இடத்திலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 20-ஆம் இடத்திலும் பிடித்துள்ளன.

கல்லூரிகள்: சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த 33 கல்லூரிகள் முதல் 100 தரவரிசையில் இடம்பிடித்துள்ளன. இதில் சென்னை மாநிலக் கல்லூரி 15-ஆம் இடத்திலும், ராணி மேரி கல்லூரி 62-ஆவது இடத்திலும், சென்னை எத்திராஜ் கல்லூரி (64), லயோலா கல்லூரி (71), பிஷப் ஹீபர் கல்லூரி (76) ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு செய்திகள்

பூந்தமல்லி- சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரயில்

சென்னையில் பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.2,126 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது இரு வழித்தடங்களில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டுவரும் நிலையில், மேலும் நான்கு வழித்தடங்களாக அவை விரிவாக்கம் செய்யப்பட மத்திய, மாநில அரசுகளின் அனுமதியும் பெறப்பட்டுள்ளன.

ஏற்கெனவே சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் வரயிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு தமிழக அரசு ரூ.1,964 கோடிக்கு நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளது.

தற்போது சென்னை அருகேயுள்ள பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான 27.9 கி.மீ. நீளத்துக்கு ரூ.2,126 கோடி நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் பாதை திட்டத்துக்கு ஏற்கெனவே தமிழக அரசு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளன. அதன்படி, மேம்பாலம் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.8,779 கோடி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சமகால இணைப்புகள்