TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 04-09-2025
தமிழ்நாடு செய்திகள்
மின்மாற்றி உற்பத்தி - ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு
உலகின் முன்னணி விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயிற்சி மையம் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை விரிவாக்கவும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: பிரிட்டனில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. லாயிட்ஸ் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதன்மூலம், சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையமானது விரிவுபடுத்தப்படும். இந்த மையத்தின் மூலமாக, அடுத்த ஐந்தாண்டுகளில் 200 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
கடசார் உள்கட்டமைப்பு, எரிசக்தி, கப்பல் கட்டுதல், துறைசார் தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டின் திறன்களை கணினிசார்ந்த மென்பொருள்மூலம் மேம்படுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
வில்ட்ஸ்ட்ரீம் பவர் மற்றும் ஸ்டெல்ஃப்ளை நிறுவனம், தமிழ்நாட்டில் ஒரு புதிய மின்சார மின்மாற்றி உற்பத்தி மையத்தை நிறுவ உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக ரூ.300 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன், 543 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரிட்டானியா கார்டென்ட் நிறுவனத்தின் துணை நிறுவனம், திருப்பூர் மற்றும் நாமக்கல்லில் உற்பத்திப் பிரிவை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், ஜவுளித் துறையில் ரூ.520 கோடி முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், 550 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
கோவையில் வடிவமைப்ப சார்ந்த உயர்கல்வி நிறுவனத்தைத் தொடங்க இகோல் இன்ட்யூட் (Ecole intuit) நிறுவனம், சக்சஸ் எனேபிள்ஸ் அகாதெமியுடன் இணைந்து புதிய முயற்சியை உருவாக்கியுள்ளது.
தேசியச் செய்திகள்
இந்தியாவுக்கு 2024 வரை வந்த அண்டை நாட்டு சிறுபான்மையினர் ஆவணமின்றி தங்க அனுமதி: மத்திய அரசு
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக, அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2024-ஆம் ஆண்டு வரை வந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமண மதத்தினர் உள்ளிட்டோர் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) அல்லது வேறெந்த பயண ஆவணங்களும் இன்றி தங்க அனுமதிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்த சிறுபான்மையினரான ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமண மதத்தினர், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தத் சட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, இந்தியாவில் 2014, டிசம்பர் 31-ஆம் தேதி வரை தஞ்சம் அடைந்த இப்பிரிவினருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.
அதேநேரம், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தவர்களின் நிலை குறித்து கேள்வி நிலவியது. அவர்களின் கவலைகளுக்கு தீர்வளிக்கும் வகையில், அண்மையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025-இன்கீழ் மேற்கண்ட உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி அல்லது துன்புறுத்தலுக்கு அஞ்சி இந்தியாவுக்கு 2024, டிசம்பர் 31-ஆம் தேதி வரை வந்த சிறுபான்மையினர் (ஹிந்து, சீக்கியர், சமணர், பார்சி, கிறிஸ்தவர்), செல்லத்தக்க கடவுச் சீட்டு அல்லது வேறெந்த பயண ஆவணமும் வைத்திருக்காமல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் அவர்கள் ஆவணமின்றி தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, அண்டை நாடுகளில் இருந்து 2014-24 காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்த மத சிறுபான்மையினர் ஏராளமானோருக்கு நிம்மதி அளித்துள்ளது.