Current Affairs Mon Aug 25 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 25-08-2025

தேசியச் செய்திகள்

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியமனம்

மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) மற்றும் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் (ஐடிபிபி) முன்னாள் இயக்குநர் அனிஷ் தயாள் சிங்கை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்திய காவல் பணியின் (ஐபிஎஸ்) 1988-ஆண்டு பிரிவு அதிகாரியான தயாள் சிங், உளவத் துறையில் (ஐ.பி.) சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றியவர். இதைத் தொடர்ந்து, ஐடிபிபி மற்றும் சிஆர்பிஎப் இயக்குநராகப் பொறுப்பு வகித்த அவர், கடந்த ஆண்டு டிசம்பரில் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக ஜம்மு-காஷ்மீர், நக்ஸல் மற்றும் வடகிழக்கு கிளர்ச்சி ஆகிய உள்நாட்டு விவகாரங்களை அவர் கையாளுவார்

பெண் கமாண்டோ பிரிவை உருவாக்க சிஐஎஸ்எஃப் முடிவு

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளைக் கொண்ட தனிப்பிரிவை உருவாக்க மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) திட்டமிட்டுள்ளது.

முதலாவதாக, விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 100 பெண் வீராங்கனைகளுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

நாட்டில் உள்ள 69 சிவில் விமான நிலையங்கள், தில்லி மெட்ரோ, மத்திய அரசின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளின் பாதுகாப்புப் பணிகளில் மொத்தம் 1.70 லட்சம் சிஐஎஸ்எஃப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப்பபடையில் தற்போது 12,491 பெண் வீராங்கனைகள் உள்ளனர். இது மொத்தப் பணியாளர்களில் 8 சதவீதமாகும்.
அடுத்த ஆண்டில் 2,400-க்கும் அதிகமான பெண் வீராங்கனைகள் சிஐஎஸ்எஃப்-க்கு தேர்வு செய்யப்படுவர் என்றும் மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக 10 சதவீத பெண்கள் படைகளில் சேர்க்கப்படுவர்.

தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் 11.19% பொருளாதார வளர்ச்சி: சட்டப்பேரவை துணைத் தலைவர்

தமிழ்நாடு 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளதாக தமிழக சட்டப் பேரவையின் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி தெரிவித்தார்.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 2024-25-ஆம் ஆண்டில் 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.

சர்வதேசச் செய்திகள்

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகம்: சீனா பூர்வாங்க ஒப்புதல்

 கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயுள்ள எல்லை தாண்டிய வர்த்தகம், ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஷிப்-கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
அண்மையில் இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யி உடனான பேச்சுவார்த்தையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹிமாசல பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
ஹிமாசல பிரதேசத்தின் ஷிப் கி லா, உத்தரகாண்டின் லிப்-லெக், சிக்கி மின் நாதுலா ஆகிய மூன்று எல்லை வழித்தடங்கள் வழியாக வர்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண் டும் என மத்திய அரசு சீனாவிடம் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.

1. ஷிப் கி லா (Shipki La) – ஹிமாசலப் பிரதேசம்

ஹிமாசலப் பிரதேசத்தின் கின்னௌர் மாவட்டத்தில் அமைந்துள்ள, இந்தியா–சீனா எல்லை வழி.

பழமையான சில்க் ரோட் (Silk Route) வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

2. லிப் லெக் (Lipulekh Pass) – உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோரகார் மாவட்டத்தில் அமைந்துள்ள எல்லைப்பகுதி.

இந்தியா – நேபாளம் – சீனா (திபெத்) ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் முக்கிய எல்லைப் பகுதி.

இந்த வழியே கைலாச–மனசரோவர் யாத்திரைக்கு (Kailash Mansarovar Yatra) செல்லும் முக்கியமான பாதையாக உள்ளது.

3. நாதுலா (Nathu La) – சிக்கிம்

சிக்கிம் மாநிலத்தில், இந்தியா–சீனா எல்லையில் உள்ள முக்கிய மலைவழி.

லா” என்பதற்கு திபெத்திய மொழியில் “வழி” என்று பொருள்.

இது வரலாற்று சிறப்புமிக்க சில்க் ரோட் வழிகளில் ஒன்று.

1962 இந்தியா–சீனா போர் காலத்தில் மூடப்பட்டது; பின்னர் 2006 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது.

புலி இனங்களை பாதுகாக்கும் கூட்டணியில் இந்தியா தலைமையில் இணைந்தது நேபாளம்!

புலி, சிங்கம் உட்பட 7 பெரிய பூனை இனங்களை பாதுகாக்கும் இந்திய தலைமையிலான சர்வதேச பெரிய பூனைகள் கூட்டணியில் (ஐபிசிஏ) அண்டை நாடான நேபாளம் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளது.
இதற்கான செயல்திட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் மூலம் இந்தக் கூட்டணியில்
நேபாளம் இணைந்திருப்பதாக ஐபிசிஏ சனிக்கிழமை அறிவித்தது.
நேபாளத்தில் கடந்த 2009-இல் வெறும் 121 புலிகள் இருந்த நிலையில், இறுதியாக 2022-இல் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி அவற்றின் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது.
ஐபிசிஏ என்பது புலி, சிங்கம், சிறுத்தை, பனி சிறுத்தை, ஜாகுவார், சிவிங்கி புலி, பூமா ஆகிய 7 பெரிய புலி இனங்களைப் பாதுகாக்க 90-க்கும் மேற்பட்ட நாடுகள், பாதுகாப்பு அமைப்புகள் அங்கம் வகிக்கும் கூட்டணியாகும்.
பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் மைசூரில் கடந்த 2023, ஏப்.9-இல் இந்தக் கூட்டணியைத் தொடங்கி வைத்தார்.

விளையாட்டுச் செய்திகள்

மார்ட்டின் புஸ்கோவிஸ் சாம்பியன்

விஸ்டன் சலேன் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற ஹங்கேரியின் மார்ட்டின் புஸ்கோவிஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில்
ஹங்கேரியின் மார்ட்டின் புஸ்கோவிஸ், நெதர்லாந்தின் டேனிக் வேன் டி லான்டலைம் மோதினர்.
இறுதி ஆட்டத்தில் 6-3, 7-6 என்ற செட்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்
புஸ்கோவிஸ்.

டியானா யினைடெட்க்கு சாம்பியன் பட்டம்

மாண்டேரே ஓபன் டபிள்யுடிஏ 500 டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டியானா யினைடெக் சாம்பியன் பட்டம் வென்றார். சக வீராங்கனை அலெக்சாண்ட்ரோவாவை 6-3, 4-6, 6-4 என வீழ்த்தினார் டியானா.
மெக்ஸிகோவின் மாண்டேரே நகரில் நடைபெற்ற இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் ரஷ்யாவின் டியானா யினைடெக், சக வீராங்கனை அலெக்சாண்ட்ரோவாவும் மோதினர்.
முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய டியானா அந்த செட்டை எளிதாக வென்றார்.
எனினும் இரண்டாவது செட்டில் திறமுடன் ஆடிய அலெக்சாண்ட்ரோவா யினைடெட் இரண்டு சர்வீஸ்களை முறியடித்துக் கைப்பற்றினார். முடிவை நிர்ணயித்த மூன்றாவது செட்டில் யினைடெட் சுதாரித்து ஆடி 6-4 என கைப்பற்றி னார். இது டியானாவுக்கு 5-ஆவது டபிள்யுடிஏ பட்டம் ஆகும்.

ஆசிய துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்ற ஐஸ்வரி பிரதாப்

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கம் வென்றார்.

கஜகஸ்தானின் விஷம்கேட் நகரில் 16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் 50 மீ ரைபிள் பிரிவில் 462.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று ஐஸ்வரி பிரதாப் தங்கம் வென்றார். சீனாவின் ஷென்யு லாவோ வெள்ளியும், ஜப்பானின் நோபுயா ஒகடா வெண்கலமும் வென்றனர். இந்த பிரிவில் ஐஸ்வரி முழு ஆதிக்கம் செலுத்தி தங்கம் வென்றார்.
ஏனைய இந்திய வீரர்கள் சென் சிங் நான்ச்காம் எட்டாம் இடமும், அகில் ஷெரான் ஐந்தாம் இடமும் பெற்றனர். ஏற்கெனவே 2023-இல் ஐஸ்வரி இதே பிரிவில் தங்கம் வென்றிருந்தார். 2024-இல் ஷெரானிடம் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

கிரிக்கெட் வீரர் புஜாரா - ஓய்வு

இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதன் மூலம் அவரது 10 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுக்கு வருகிறது.

குஜராத் மாநிலம் சௌராஷ்டிராபைச் சேர்ந்த புஜாரா, கடந்த 2010-இல் இந்திய அணியில் இடம் பெற்றார். 37 வயதான அவர் 103 டெஸ்ட், 5 ஒரு நாள் ஆட்டங்களில் ஆடி உள்ளார்.
டெஸ்ட் ஆட்டங்களில் 19 சதம், 35 அரைசதங்களுடன் சராசரி 43.60 என மொத்தம் 7,195 ரன்கள் குவித்துள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

புதிய வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு

இந்திய விண்வெளி பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, உள்நாட்டுத் தேவயை உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு (ஏ.டி.டி.ஏ.டீ.எஸ்.), ஒடிசா கடற்கரையில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இந்த ஏ.டி.டி.ஏ.டீ.எஸ். அமைப்பில் வழக்கப்பட்ட மற்றும் எதிரி விமானங்களையும் தாழ்வான மட்டத்திலும் தாழ்வான தொலைவில் வான் பாதுகாப்பு அமைப்புகள் (வி.எல்.எஸ்.ஆர்.எஸ்.ஏ.எம்), உயர்வும் தொலைவுள்ளோர் ஆயுதங்கள் (டி.டி.டீ.பி.ஐ.) ஆகியவை ஒரு கிணைந்து சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நவீன ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) மற்றும் தப்பப்பட் ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் நிர்வ கிக்கப்படுகின்றன.
இந்த மையம் அனைத்து ஆயுத அமைப்புகளையும் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் செயல்பட அனுமதிக்கிறது.
ஒடிசா, சண்டிப்பூர் சோதனை தளத்தில் சனிக்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் சோதனை நடைபெற்றது.
சோதனையின் போது ஆகஸ்ட் 21 அன்று மூன்று வெவ்வேறு இலக்குகளான விமானங்கள் மற்றும் ஒரு மல்டி-காப்டர் ட்ரோன் ஆகியவற்றை குறிவைத்துத் தாக்கப்பட்டது.

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனை வெற்றி

ககன்யான்’ திட்டத்தில் விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அவர்களை பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு முக்கியமான பாராசூட் அமைப்பின் முதல் கட்ட சோதனை (ஓஏ-01)வெற்றிகரமாகத் நடத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் செயல்பாடு ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவுத் திட்ட மாகும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படையின் சாகன், பிரஷாந்த், அஜித் கிருஷ்ணன், அங்ஷ் பிர்ராய் ஆகிய 4 குழு கேப்டன்கள் விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் மூவர் 400 கி.மீ. உயரத்தில் புவியின் தாழ்வான கீழ் வட்டப்பாதைக்கு அனுப்பி வைக்கப்படுவர். அவர்கள் அங்கு மூன்று நாள்கள் தங்கி, பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள் வர். பின்னர், மீண்டும் பூமிக்குத் பாதுகாப்பாகத் திரும்புவார்கள்.
இதன் மூலம், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த தேசமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் உலகின் முதல்
நாடாக இந்தியா உருவாவதும், ககன்யான் வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.

ககன்யான் வீரர்கள் ஒருவரான சுபாணவ் சுக்லா, அனுபவப் பயிற்சிக்கு ‘அக்னி யு-4’ திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அண்மையில் வெற்றிகரமாக சென்று திரும்பி வந்திருப்பதும், ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா சோதனை பயணம் நிகழாண்டு இறுதியில் திட்ட மிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ககன்யான் விண்கலத்தின் பாராசூட் அமைப்பின் முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டது.


விண்கலம் விண்வெளியில் இருந்து மீண்டும் பூமிக்குள் நுழையும்போது அதன் வேகம்
ஆயிரம் கிலோமீட்டராக இருக்கும். அதை சில விநாடிகளில் குறைப்பது என்பது ஒரு சவாலான பணி. பாராசூட் அமைப்பு இந்த சவாலை சமாளிக்கும் முக்கிய தொழில்நுட்பமாகும்.
ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹ ரிகோட்டாவில் ஞாயிற்றுக்கி ழமை நடைபெற்ற சோதனையின் போது, ககன்யான் விண்கலத்தின் பாராசூட் அமைப்பின் செயல் பாடுகள் முழுமையாக சோதிக் கப்பட்டன. விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து வெளியிடப்பட்ட சோதனைப் பொருள், இந்த பாராசூட் அமைப் பின் உதவியுடன் படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு, பாதுகாப் பாகத் தரையிறங்கியது.

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

பெரியார் விருது

திமுக கட்சியின் துணைப் பொதுச்செயலர்வும், நாடாளுன்றக் குழுத் தலைவருமான கனிமொழிக்கு ‘பெரியார் விருது’ வழங்கப்பட உள்ளது.

பெரியார் விருது – கனிமொழி

அண்ணா விருது – திமுக தனிக்கைச் குழு உறுப்பினரும், பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சு. ப. நதிராஜ்மன்

கலைஞர் விருது – சென்னை அண்ணா நகர் பகுதி முன்னாள் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோ. மா. இராமச்சந்திரன்

பாவேந்தர் விருது – தலைமைச் செயற்குழு உறுப்பினரும், குளித்தலை ஒன்றியக் குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமன்

பேராசிரியர் விருது – ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான மருதூர் ராமலிங்கம்

மு.க. ஸ்டாலின் விருது – முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி

சமகால இணைப்புகள்