Current Affairs Sat Aug 23 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 23-08-2025

தேசியச் செய்திகள்

சென்னையில் பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையம்

சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்த மையத்தை மத்திய இணையமைச்சர் சஞ்சய் சேத்தி தொடங்கி வைத்துப் பேசியதாவது: தற்சார்பு இந்தியாவை நோக்கிய பயணத்தில், சென்னையில் தொடங்கப்பட்டுள்ள ட்ரோன் உற்பத்தி மையம் இணைந்துள்ளது. மேலும், தொழில்நுடபத்தில் உலகத் தரம் வாய்ந்த ட்ரோன் உற்பத்தி வசதி உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயம், பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் உள்ள பயன்பாடுகள் முக்கியம் மற்றும் கண்காணிப்பு, ராணுவ வீரர்களின் திட்டமிடல் நடவடிக்கை, போர்க்கள ஆயுத உதவி, பல்நோக்கு பயன்பாடு என 5 வகை ட்ரோன்களை அவர் வெளியிட்டார்.

சமகால இணைப்புகள்