TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16-08-2025
தமிழ்நாடு செய்திகள்
களப் பணியாற்றிய அப்பர் நடுவக்கு பாராட்டு
{‘type’: ‘doc’, ‘content’: [{‘type’: ‘paragraph’, ‘attrs’: {‘align’: ”}, ‘content’: [{‘type’: ‘text’, ‘marks’: [{‘type’: ‘text_color’, ‘attrs’: {‘color’: ‘rgb(26, 28, 30)’}}, {‘type’: ‘text_background_color’, ‘attrs’: {‘backgroundColor’: ‘rgb(252, 252, 252)’}}], ‘text’: ‘ஊரக வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை ஊராட்சியில் தூய்மைக் காவலராகப் பணியாற்றி வருபவர் அப்பர் நடுவ. இவர், தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து, அதில் கிடைக்கும் மக்காத குப்பைகள் மூலம் கிடைக்கும் பணத்தில், அப்பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கி வருகிறார். இவரது தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி கவுரவித்தார்.’}]}]}
காதிர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர்’ - இஸ்ரோ தலைவருக்கு ‘கலாம்’ விருது
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதிர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங் கினார். இதேபோன்று, இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவனுக்கு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழினத்தின் பெருமைக்கும் பாடுபடுபவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டில் இவ்விருது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இஸ்ரோவில் 41 ஆண்டுகளாகப் பணியாற்றி இப்போது தலைவராக உயர்ந்துள்ள தொழில் நுட்பப் பங்களிப்பிற்காக இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
தேசியச் செய்திகள்
‘சுதர்சன சக்கரம்’ திட்டம் அறிவிப்பு
நாட்டின் ராணுவ தளங்கள் உட்பட வியூக முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களின் பாதுகாப்புக்கு உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புமுறையை உருவாக்கும் ‘சுதர்சன சக்கரம்’ திட்டத்தை பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்தார்.
‘ராணுவ தளவாடங்களுக்காக, இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க மத்திய அரசு உறுபூண்டுள்ளது. கடவுள் கிருஷ்ணரிடம் இருந்து உத்வேகம் பெற்று, எந்த அச்சுறுத்தலில் இருந்தும் நாட்டைப் பாதுகாக்க அடுத்த 10 ஆண்டுகளுக்கு ‘சுதர்சன சக்கரம்’ திட்டம் நிறைவேற்றப்படும். எதிரிகளின் தாக்குதலைத் தடுத்து, பதிலடி தாக்குதல் நடத்தும் வலுமிக்க ஆயுத அமைப்பாக இது உருவாகும்.
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
கல்பனா சாவ்லா விருது
துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி என்பவருக்கு வழங்கப்பட்டது. இவர், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை புரிந்துள்ளார். விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலை, தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம் மற்றும் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சர்வதேசச் செய்திகள்
அலாஸ்காவில் இந்த மாதம் இந்திய-அமெரிக்க ராணுவப் பயிற்சி
வர்த்தக நிச்சயமற்ற நிலைமைகளுக்கு மத்தியில், இந்தியாவும் அமெரிக்காவும் இந்த மாதம் அலாஸ்காவில் கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்த உள்ளன. வெளியுறவு அமைச்சகத்தின்படி, அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்களால் வலுப்படுத்தப்பட்ட இந்திய-அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மை, இருதரப்பு உறவுகளின் ஒரு முக்கிய தூணாக விளங்குகிறது. இந்த ஒத்துழைப்பு அனைத்து துறைகளிலும் வலுவடைந்துள்ளது. “ஒரு அமெரிக்க பாதுகாப்பு கொள்கைக் குழு ஆகஸ்ட் மாத மத்தியில் டெல்லிக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ‘யுத் அபியாஸ்’ எனப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின் 21வது பதிப்பு இந்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாத இறுதியில் செயற்குழு மட்டத்தில் 2+2 இடைக்கால கூட்டத்தை கூட்ட இரு தரப்பும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.