TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 04-08-2025
மாநிலச் செய்திகள்
காவல்துறை மதிப்பீட்டுப் படிவங்களில் உள்ள சாதிப் பத்தியை நீக்க வேண்டும்: தமிழக காவல்துறை குழுமம்
மாநிலத்தில் சாதி மோதல்களை ஒழிக்கவும், காவல்துறையில் சீரான தன்மையைக் கொண்டுவரவும் பரிந்துரைக்கப்பட்ட பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, காவலர்களின் பணித்திறன் மதிப்பீட்டுப் படிவங்களிலிருந்து சாதி/சமூகப் பத்தியை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஐந்தாவது காவல்துறை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. செயல்திறன் மதிப்பீடு அல்லது வருடாந்திர ரகசிய அறிக்கை (ACR) என்பது ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பதக்கங்கள், குழு நியமனம், அயல்பணி போன்றவற்றைப் பொறுத்து காவல்துறையினரின் தொழில்முறை வளர்ச்சியை தீர்மானிக்கும் ஒரு முக்கிய ஆவணமாகும். தமிழ்நாடு காவல்துறையில், 1.25 லட்சம் பேர் கொண்ட படையில் கணிசமான பகுதியாக இருக்கும் தலைமைக் காவலர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கான ACR படிவங்களில், அவர்களின் சாதி/சமூகம் பற்றிய குறிப்பு உள்ளது. மேலும், மதிப்பீட்டுக் காலத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு சட்டப்பூர்வமாக உதவுவதில் அவர்களின் பங்களிப்பை அறிய முற்படும் ஒரு பத்தியும் உள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறுதானிய உற்பத்தி பெருக்க ரூ.52.44 கோடி
தமிழக அரசு அறிவித்துள்ள 2 சிறுதானிய சிறப்பு மண்டலங்களில் நிகழாண்டு (2025-2026) ரூ.52.44 கோடியில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, 10 லட்சம் ஹெக்டேரில் 39.28 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2024-25) இத்திட்டத்தில் ரூ.46 கோடி ஒதுக்கீடு செய்து 4.15 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அளவில் சிறுத்து, ஊட்டச்சத்தில் பெருத்து, உடலை உறுதியாக்குபவை சிறுதானியங்கள். இதற்கு வலு சேர்க் கும் வகையில் 2023-ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அதை தமிழக அரசு வழிமொழிந்து, தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் மூலம் 2023-2024 ஆம் ஆண்டில் ஐந்தாண்டு திட்டத்தை அறிவித்தது. இதன்படி, தமிழகத்தில் 2 சிறப்பு சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன். திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய 12 மாவட்டங்களைக் கொண்டு சிறப்பு மண்டலம்-1, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 13 மாவட்டங்களைக் கொண்டு சிறப்பு மண்டலம்-2 உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு மண்டலங்கள் மூலமாக, சிறுதானிய சாகுபடிக்கான பரப்பு மற்றும் உற்பத்தியை பெருக்கிட, தமிழக அரசானது ரூ.52.44 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், இரு சிறப்பு மண்டலங்களிலும் இடம்பெற்றுள்ள 25 மாவட்டங்களில் சிறுதானிய சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பயனடைய முடியும்.
ரூ.16 ஆயிரம் கோடியில் மின்சார வாகன உற்பத்தி ஆலை
ரூ.16 ஆயிரம் கோடியில் தமிழகத்தின் முதல் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திங்கள்கிழமை (ஆக.4) தொடங்கி வைக்கிறார். உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியத்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் தங்கள் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது. இதற்கான புரிந்தணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024 இல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப் பட்டது. இந்தத் தொழிற்சாலை தூத்துக்குடி டெல்லில் மதுரை புறவழிச் சாலையில் விலாங்குறிச்சி சிப்காட்டில் 408 ஏக்கர் பரப்பளவில் அமைக்கிறது. முதல் கட்டமாக ரூ. 1,119.67 கோடியில் 114 ஏக்கரில் 2 பணிமனைகள், 2 கிடங்குகள், வாகன பரிசோதனை மையம் உள்ளிட்ட வசதிகளுடன் தொழிற்சாலை அமைக்கிறது. இங்கு வி.எல்.-6, வி.எல்.-7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள் ளது. இந்தத் தொழிற்சாலை தமிழகத்தின் முதல் மின்சார வாகனம் உற்பத்தி தொழிற்சாலையாகும்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்
தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட விமான நிலையத்திலிருந்து விமானப் போக்குவரத்து சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக துறைமுகம், சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து ஆகிய போக்குவரத்து வசதிகளைக் கொண்ட மாவட்டமாக தூத்துக்குடி உள்ளது. இந்த மாவட்டத்தில் போக்குவரத்து கட்டமைப்புகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் 886 ஏக்கர் பரப்பளவில் ரூ. 452 கோடி மதிப்பில் உலக தரத்தில் விரிவாக்கப்பட்ட விமான நிலையம் அமைக்கப்பட்டது. பணிகள் முடிவுற்ற நிலையில் இந்த விமான நிலையத்தை கடந்த ஜூலை 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கின.
விளையாட்டுச் செய்திகள்
லெக்சிங்டன் சேலஞ்சர் பட்டத்தை அனிருத்-ராம்குமார் ஜோடி வென்றது
அமெரிக்காவின் லெக்சிங்டனில் நடைபெற்ற $100,000 சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில், இரண்டாவது நிலை வீரர்களான அனிருத் சந்திரசேகர் மற்றும் ராம்குமார் ராமநாதன் ஜோடி இரட்டையர் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் யு ஹ்சியோ ஹ்சு மற்றும் சுங்-ஹாவ் ஹுவாங் ஜோடியை 6-4, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தனர். இது ராம்குமாருக்கு 29வது இரட்டையர் பட்டமாகும். அனிருத்துக்கு இது 13வது இரட்டையர் பட்டமும், இந்த சீசனில் மூன்றாவது பட்டமும் ஆகும். அனிருத் தனது தொழில் வாழ்க்கையின் சிறந்த தரவரிசையான 87ஐ அடைந்தார்.
பிரேசில் டபிள்யூ.டி.டி.யில் இந்திய இரட்டையர் ஜோடிகள் இரண்டாம் இடம்
ஃபோஸ் டோ இகுவாகு (பிரேசில்) நகரில் நடந்த டபிள்யூ.டி.டி. ஸ்டார் கண்டெண்டர் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் முதலிடம் வகிக்கும் மனுஷ் ஷா மற்றும் தியா சிதாலே கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் ஜப்பானின் சதோஷி ஐடா மற்றும் ஹோனோகா ஹாஷிமோடோவிடம் 4-11, 11-8, 11-5, 5-11, 2-11 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தனர். முன்னதாக சனிக்கிழமை, இந்தியாவின் மனுஷ் மற்றும் மானவ் தக்கர் (முதலிடம்) அடங்கிய ஆடவர் இரட்டையர் ஜோடி, இறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீரர்களான பெனடிக்ட் டூடா மற்றும் டாங் குவி ஆகியோரிடம் 3-11, 11-7, 7-11, 15-13, 5-11 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.
பிரேசிலில் 9-வது முறையாக சாம்பியன் - மகளிருக்கான கோபா அமெரிக்கா ஃபுட்போல்னா
தென்னமெரிக்க கண்டத்தில் நடைபெறும் மகளிருக்கான கோபா அமெரிக்கா ஃபுட்போல்னா போட்டியில், பிரேசில்-பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
10-வது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியில் தற்போதுத் பிரேசில் 9-வது முறையாக கோபையை வென்று குறித்துப் பதித்தது. அதிலும், இந்த ஆண்டு நடக்கும் 5 முயற்சியில் அந்த அணியே தோல்வி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. போட்டியிலேயே அதிக கோல்கள் (6) அடித்தவர்களாக பிரேசில் விண் அமாண்டா குத்டெரஸ், பராகுவேயின் கிளாரியா மார்டி நேஸ் தேர்வாகினர்.
தடகளம்: முரளி ஸ்ரீசங்கருக்கு தங்கம்
கஜகஸ்தானில் நடைபெற்ற கொசானோவ் நினைவு தடகள போட்டியில், இந்தியாவின் நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். முதல் முறையாக இந்தியன் ஓபன் போட்டி மற்றும் வில்ல்னியஸ் போட்டிகளில் வென்ற அவர், தற்போது போட்டியில் நடப்பு போட்டியாளரை 7.75 மீட்டருடன் மிஞ்சியமை குறிப்பிடத்தக்கது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் லடாக் விதைகள் ஆய்வு
இந்தியாவின் கடும் குளிர்பிரதேசமான லடாக் பகுதியில் விளையும் முக்கியத்துவம் வாய்ந்த சீபக்தார்ன் மற்றும் பக்வீட் விதைகள், நாசாவின் ‘கிரு-11’ விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. விண்வெளியில் உள்ள நுண் ஈர்ப்பு விசையில் இந்த விதைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. அமெரிக்காவின் ‘ஜாகுவார் ஸ்பேஸ்’ என்ற விண்வெளி உயிரியல் நிறுவனம் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளது. உலகின் ஐந்து கண்டங்களில் இருந்து இந்தியா, மாலத்தீவு, அர்ஜென்டீனா, பிரேசில், கோஸ்டாரிகா, நைஜீரியா, எகிப்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளின் விதைகள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் சார்பில் லடாக்கில் விளையும் சீபக்தார்ன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பக்வீட் விதைகள் ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பெங்களூரைச் சேர்ந்த ‘புரோட்டோபிளானட்’ என்ற விண்வெளி புத்தாக்க நிறுவனம் இந்த விதைகளை வழங்கியுள்ளது. புரோட்டோபிளானட் நிறுவனத்தின் இயக்குநர் சித்தார்த் பாண்டே, ‘நீண்ட கால விண்வெளிப் பயணங்களின்போது இந்த விதைகள் உணவாகப் பயன்படுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்று தெரிவித்தார். விண்வெளி மையத்தில் ஒரு வாரம் நுண் ஈர்ப்பு விசையின் கீழ் வைக்கப்படும் இந்த விதைகள், பின்னர் ‘கிரு-10’ விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்ப கொண்டுவரப்படும். பூமிக்குத் திரும்பிய பின், இந்த விதைகள் இந்திய ஆராய்ச்சியாளர்களால் விரிவாக ஆய்வு செய்யப்படும். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட புதிய பயிர் வகைகளைக் கண்டறியவும், எதிர்கால விண்வெளி விவசாயத்துக்கும் இந்த ஆய்வு உதவும் என்று ஜாகுவார் ஸ்பேஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சர்வதேசச் செய்திகள்
சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை
சட்டவிரோதமாக குடியேறவும், போலி கடவுச்சீட்டுகளைப் பெற உதவுவதற்காகவும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் திட்டத்தை பிரிட்டன் அரசு கடுமையாக்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரிட்டன் அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. சிறு படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கையை பிரிட்டன் அரசு மேற்கொண்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறுவது, போலி கடவுச்சீட்டுகளைப் பெறப் பாதுகாப்பற்ற சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணைய வழித்தளங்கள் மூலம் விளம்பரம் செய்யும் மனித கடத்தல் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர்களுக்குக் கடுமையான அரசு கடும் தண்டனை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்பவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.