Current Affairs Sun Aug 03 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 03-08-2025

தேசியச் செய்திகள்

இந்திய தபால் நிலையங்களில் விரைவில் டிஜிட்டல் பரிவர்த்தனை

இந்தியா போஸ்ட் தனது “பதிவு தபால்” சேவையை படிப்படியாக நீக்கி, அதை ஸ்பீட் போஸ்டுடன் இணைக்கும் நிலையில், தபால் துறை அதன் தளவாடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. ஒரு முக்கிய முயற்சியாக, ஸ்பீட் போஸ்ட் முன்பதிவு செய்யும் போது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) ஒருங்கிணைக்கப்படுகிறது, இது தனிப்பட்ட தபால் நிலையங்கள் டிஜிட்டல் பணம் செலுத்துவதை நிராகரிப்பதைத் தடுக்கும். உள்நாட்டு தபால் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, இந்தியா முழுவதும் உள்ள விமானங்களில் தபால் பைகளுக்கு போதுமான இடத்தை உறுதிசெய்ய, பயணிகள் விமானங்களில் “ஹார்டு பிளாக்ஸ்” (ஒதுக்கப்பட்ட இடம்) முறையை இந்தியா போஸ்ட் கொண்டுவருகிறது. இதற்கான டெண்டர் ஜூலை 17 அன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் தங்களது தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை படிப்படியாக மேம்படுத்தி வருகின்றன. ஒரு புதிய மேம்பட்ட தபால் தொழில்நுட்பம் (APT) அமைப்பு டெல்லி மற்றும் சென்னை போன்ற முக்கிய மெட்ரோ நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மும்பை ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்த முறைக்கு மாறும். இதுவரை, இந்தியாவில் உள்ள தபால் நெட்வொர்க்கில் பாதிக்கும் மேற்பட்ட, அதாவது 86,000 தபால் நிலையங்கள் புதிய அமைப்புகளுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. APT செயலியானது மேம்பட்ட பயனர் அனுபவம், வேகமான சேவை, நிகழ்நேர கண்காணிப்பு, மின்னணு டெலிவரி சான்று, OTP அடிப்படையிலான அங்கீகாரம் மற்றும் திறந்த API ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முகவரிதாரர்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றும்போது, கடிதங்களை தடையின்றி திருப்பி அனுப்ப மின்னஞ்சல் போன்ற ஒரு அமைப்பை துறை உருவாக்கி வருகிறது. ஒரு பின்கோடில் மிகவும் துல்லியமான அட்சரேகை-தீர்க்கரேகை தரவை அனுமதிக்கும் டிஜிபின் (DIGIPIN) முயற்சியும் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.

மீன் உற்பத்தியில் 103% வளர்ச்சி

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தார். ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீர்வளங்களை அதிகம் கொண்ட மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள், இத்துறையில் தங்களின் திறனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மீன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக உள்ள இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியில் 103 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொருத்தவரை, மீன் உற்பத்தியில் 143 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. உள்நாட்டு நீர்வளங்களை அதிகம் கொண்ட மாநிலங்கள், இத்துறையில் தங்களின் திறனை முழுமையாக பயன்படுத்த வேண்டும். கிராமங்களில் சிறு மீன் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும், தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தரவும் மாநிலங்கள் தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பொருளாதாரச் செய்திகள்

நேபாளம்: சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்களுக்கு முதலிடம்

நேபாளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியர்கள் முதலிடம் வகிக்கின்றனர். இது குறித்து அந்த நாட்டு சுற்றுலாத் துறையின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த ஜூலை மாதம் நேபாளத்துக்கு 70,193 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அவர்களில் இந்தியர்கள் 38.7 சதவீதம் பங்கு வகித்து முதலிடம் பிடித்துள்ளனர். மொத்தம் 27,152 பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவில் இருந்து 6,890 பயணிகள் (9.8 சதவீதம்) சுற்றுலா வந்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து 6,626 பேர் (9.4 சதவீதம்), வங்கதேசத்தில் இருந்து 4,413 பேர் (6.3 சதவீதம்), பிரிட்டனில் இருந்து 3,547 பேர் (5.1 சதவீதம்) சுற்றுலா வந்துள்ளனர். 2025-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்தம் 6,47,882 சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் வருகை தந்துள்ளனர். இது கரோனா நெருக்கடிக்குப் பிந்தைய காலத்தில் மிக உயர்ந்த எண்ணிக்கை என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

சர்வதேசச் செய்திகள்

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானம் பெறப்பட்டதாக இந்திய தூதரகம் சனிக்கிழமை தெரிவித்தது. இதுவே ஸ்பெயினிடமிருந்து இந்தியா பெறும் இறுதி சி-295 ரக விமானமாகும். இந்திய விமானப் படையின் அவ்ரோ போர் விமானத்துக்கு மாற்றாக களமிறக்கப்பட்டுள்ள சி-295 ரக ராணுவ விமானம் 5 முதல் 10 டன் எடையுடைய பொருள்களை சுமந்து செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை செவில் நகரில் உள்ள பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனமான ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதர் தினேஷ் கே பட்நாயக் மற்றும் இந்திய விமானப் படை மூத்த அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தியா-ஸ்பெயின் ஒப்பந்தத்தின்படி, இந்திய விமானப் படைக்கு 56 சி-295 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை முதல் செய்வதற்காக ஸ்பெயினில் உள்ள விமான பாதுகாப்பு மற்றும் விண்வெளி மையத்துடன் இந்தியா கடந்த 2021, செப்டம்பரில் ஒப்பந்தமிட்டது. இந்த ஒப்பந்தத்தின்கீழ் 16 சி-295 ரக ராணுவ விமானங்களை இந்தியாவட்டம் ஸ்பெயின் நேரடியாக விநியோகிக்க ஒப்புக்கொண்டது. தற்போது 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை இந்தியாவிடம் ஸ்பெயின் வழங்கியுள்ளது. மீதமுள்ள 40 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா ஒப்புக்கொண்டது. அதை செயல்படுத்தும் வகையில் கடந்த அக்டோபரில் குஜராத்தின் வதோதராவில் உள்ள டாடா மேம்படுத்தப்பட்ட அமைப்புகள் நிறுவன (டிஏஎஸ்எல்) வளாகத்தில் சி-295 ரக விமானத் தயாரிப்புக்காக டாடா நிறுவன மையம் நிறுவப்பட்டது. இந்த மையத்தை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இணைந்து தொடங்கிவைத்தனர். இது இந்தியாவில் ராணுவ விமானத்தின் இறுதி கட்டமைப்பை மேற்கொள்ளும் முதல் தனியார் நிறுவன மையம் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

இந்தியாவில் தமிழகம் முதலிடம்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டதில் நாட்டிலேயே முதன் மையான மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் அதற்கான விருதை தமிழக உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர் என்.கோபாலகிருஷ்ணனிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வழங்கினார். தமிழகத்தின் வருடத்தில் மற்றும் ஒரு வைரைக்கல் லாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் தெரிவித்தார்.

மாநிலச் செய்திகள்

நலம் காக்கும் ஸ்டாலின்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1,256 முகாம்கள் நடைபெற உள்ளன. இதற்காக ஒரு முகாமுக்கு தலா ரூ.1,08,173 வீதம் மொத்தம் ரூ.13.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 17 உயர் சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயனாளிகளின் பரிசோதனை முடிவுகளை வாட்ஸ்-ஆப் அல்லது குறுஞ்செய்தியாகப் பெற முடியும். அதுதொடர்பான தரவுத் தொகுப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் ஆகியவை சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை மூலம் கண்காணிக்கப்படுகிறது.

சமகால இணைப்புகள்