TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 01-08-2025
தேசியச் செய்திகள்
பிஎம் கிசான் சம்பதா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அமைச்சரவை அதிகரித்துள்ளது
மத்திய அமைச்சரவை, முதன்மைத் திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (PMKSY) திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ₹1,920 கோடி உயர்த்தி, மொத்த ஒதுக்கீட்டை ₹6,520 கோடியாக அதிகரித்துள்ளது. உணவு பதப்படுத்தும் துறையை மேம்படுத்துவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிதியாண்டில் வழங்கப்படும் இந்த கூடுதல் நிதி, 50 பல-பொருள் உணவு கதிர்வீச்சு மையங்கள் மற்றும் 100 உணவுப் பரிசோதனை ஆய்வகங்களுக்காகப் பயன்படுத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் உணவு, அமைதிக்கான சர்வதேச விருது
வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில் அவரது பெயரில் உணவு மற்றும் அமைதிக்கான சர்வதேச விருதை பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார். டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவை பிரதமர் நரேந்திர மோடி தில்லி பூசாவில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். ‘இயற்கையோடு இயைந்த நல்வாழ்வு’ என்ற கருப்பொருளில் 3 நாள்கள் (ஆக. 7-9) எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழா நடைபெறும். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், ஜிதேந்தர் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.எஸ்.சுவாமிநாதன் மகாபாரத அரசு, தமிரிசா அரசு, கொலம்பியா அரசு, தில்லி நிகழ்வில் மத்திய அரசு அவரை கௌரவித்து தபால் தலை, ரூ.1000 நாணயம் ஆகியவற்றை வெளியிடுகிறது. பிரதமர் மோடி வெளியிடுகிறார்.
பொருளாதாரச் செய்திகள்
இத்தாலி நிறுவனத்தைக் கைப்பற்றும் டாடா மோட்டார்ஸ்
இத்தாலியைச் சேர்ந்த சொகுசு வாகனத் தயாரிப்பு நிறுவனமான இவெகோவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றுகிறது. 380 கோடி யூரோவுக்கு (சுமார் ரூ.38,240 கோடி) மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தம், நிறுவனத்தின் மிகப் பெரிய கைப்பற்றுதல் ஆகும். இதற்கு முன்னர் பிரிட்டனின் ஜாகுவார், லேண்ட்ரோவர் நிறுவனத்தை 230 கோடி டாலருக்கு வாங்கியதே மிகப் பெரிய கைப்பற்றுதலாக இருந்தது. இது குறித்து நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இவெகோ குழுமத்தின் 100 சதவீத பொதுப் பங்குகளை (பாதுகாப்புத் துறை தவிர) முழுமையாக டாடா யூனிட் பன்னாட்டுப் பரிவர்த்தனைகள் மூலம் கைப்பற்றுவதற்கு நிறுவனம் ஒப்பந்தம் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் அனைத்து ஒழுங்குமுறை சட்டரீதியான மற்றும் தேவையான ஒப்புதல்களுக்கும் உட்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
சீனா: விண்ணில் செலுத்தப்பட்ட பாகிஸ்தான் செயற்கைக்கோள்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிச்சாங் விண்வெளி மையத்தில் இருந்து தனது புதிய தொலைவுணர்வு செயற்கைக்கோளை (பிஆர்எஸ்எஸ்-1) பாகிஸ்தான் வியாழக்கிழமை வெற்றிகரமாக ஏவியது. அந்த செயற்கைக்கோள், காலநிலை மாற்றத் தகவல்களைக் கண்காணிக்க உதவும். சீனாவின் குவைஜோ-1ஏ ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள், பாகிஸ்தானின் விண்வெளி ஆய்வு மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் புவி சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசச் செய்திகள்
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: கனடாவும் அறிவிப்பு
பாலஸ்தீனம் என்ற நாட்டைத் தனி நாடாக அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி சில நாடுகள் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்போவதாக அறிவித்த நிலையில், தங்களின் சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் வரும் ஒரு மாதத்தில் பாலஸ்தீனத்துக்குத் தனி நாடு அந்தஸ்து அளித்து ஆதரிப்பதாக பிரிட்டனும் கூறி யிருந்தது. இந்தச் சூழலில், குழுவில் புதிதாகச் சேர்ந்துள்ள நாடுகளின் ஆதரவுடன் பொதுச் சபையில் பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்புரிமை அந்தஸ்து கொடுக்கும் தீர்மானத்துக்கு கனடா ஆதரவு தெரிவித்திருந்தது.
விளையாட்டுச் செய்திகள்
மெக்கின்டாஷுக்கு 3-ஆவது தங்கம்
சிங்கப்பூரில் பெறும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில், கனடாவின் சம்மர் மெக்கின்டாஷ், மகளிருக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் வியாழக்கிழமை தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் அவர் 2 நிமிஷம், 1.99 விநாடிகளில் முதலாவதாக இலக்கை அடைந்தார். அமெரிக்காவின் ரீகன் ஸ்மித் வெள்ளியும் (2:04.99), ஆஸ்திரேலியாவின் டெக்கர்ஸ் வெண்கலமும் (2:06.12) வென்றனர். மெக்கின்டாஷுக்கு இப்போட்டியில் இது 3-ஆவது தங்கப் பதக்கமாகும். இதனிடையே, வியாழக்கிழமை நடைபெற்ற இதர பந்தயங்களில், ஆடவர் 200 மீ மெட்லியில் பிரான்ஸின் லியோன் மார்சண்ட், ஆடவர் 100 மீ ஃப்ரீஸ்டைலில் ருமேனியாவின் டேவிட் போபோவிசி, மகளிருக்கான 50 மீ பேக்ஸ்ட்ரோக்கில் அமெரிக்காவின் கேத்ரின் பெர்காஃப் ஆகியோர் தங்கம் வென்று அசத்தினர்.
மாநிலச் செய்திகள்
தமிழ்நாடு மாநில திருநங்கை கொள்கை - 2025
திருநங்கையருக்கு தங்களது அடையாளங்கள் மற்றும் உடலமைப்பில் சுய-நிர்ணயத்துடன், பாதுகாப்பான, வன்முறை இல்லாதவர்களாக வாழவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு நியாயமான, சமமான, வளமான சமூகத்தை அவர்களுக்காக உருவாக்குவதே கொள்கையின் இலக்காகும். தமிழ்நாட்டில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடையிலை பாலித்தவர்கள் முழுமையான சமூக ஒருங்கிணைப்பு, கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதை இக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கிய அம்சங்கள் என்ன?: சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை திருநங்கைகளுக்கான கொள்கைகள் கொண்டுள்ளன. குறிப்பாக, அடிப்படை உரிமைகளுக்கு முன்னுரிமை, சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு, அடையாள அட்டைகளின் தேவை, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, கல்வியில் சமத்துவ அணுகுமுறை, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, சமூக நீதி மற்றும் பிரித்தெடுத்தல், குறைதீர்ப்பு முறைகள் மற்றும் விழிப்புணர்வு, செயல்பாடு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பு ஆகியன முக்கிய அம்சங்களாக கொள்கையில் இடம்பெற்றுள்ளன. திருநங்கையருக்கான திட்டங்கள், சட்டங்களை உருவாக்குவது குறித்து ஆலோசனைகள் வழங்குதல், திட்டங்களின் தாக்கத்தைக் கண்காணித்தல், மதிப்பீடு செய்தல் போன்ற பணிகளுக்காக தலைமைச் செயலர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழு அனைத்துத் தொடர்புத் துறைகளையும் உள்ளடக்கி உருவாக்கப்படுவதுடன், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி விவாதிக்கும். இதேபோன்று, மாவட்ட ஆட்சித் தலைமையிலான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருநங்கைகளுக்கான சமூக, பொருளாதார அரசியல் வளர்ச்சிக்கான திட்டங்களைக் கண்காணிக்கும் என்று திருநங்கைகளுக்கான கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சேர்ந்த டி.வினோத்குமார் பதவி ஏற்பு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சேர்ந்த டி.வினோத்குமார் வியாழக்கிழமை பதவி ஏற்றார். அவருக்கு தலைமை நீதிபதி எம்.எஸ்.ஸ்ரீனிவாசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியானவரை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்று, அவரை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அதன்படி, டி.வினோத்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதிபதி டி.வினோத்குமாருக்கு தலைமை நீதிபதி எம்.எஸ்.ஸ்ரீனிவாசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY)
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டத்தின் அறிமுகம் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் நேரடி பணப் பலன் வழங்கும் அரசின் மைய திட்டம் ஆகும். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் (NFSA), 2013 இன் பிரிவு 4 இன் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. திட்டத்தின் நோக்கம்
தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்யம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் வேலை இழப்பிற்கான இழப்பீடு வழங்குதல் பெண்களில் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சனையை தீர்ப்பது
நிதி உதவி ரூ. 5,000/- மொத்த தொகை மூன்று தவணைகளாக நேரடியாக வங்கி/அஞ்சல் அலுவலக கணக்கில் வழங்கப்படுகிறது.