Current Affairs • Tue Jul 29 2025
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-07-2025
மாநிலச் செய்திகள்
திருச்சி பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அதிநவீன பரிசோதனை மையம்
திருச்சியில் அதிநவீன பரிசோதனை மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இந்த மையம், பாதுகாப்புத் துறைக்கான அதிநவீன பரிசோதனை உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தின் (டிடிஜெஎஸ்) கீழ் அமையும். பாதுகாப்பு அமைச்சகமும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், அரசு மற்றும் தனியார் தொழில்துறைகளுக்கு அதிநவீன பரிசோதனை கருவிகள் மற்றும் சேவைகள் கிடைக்கும். இது பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்பு அடைய மேலும் ஊக்கம் அளிக்கும்.