Current Affairs Sat Jul 26 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 26-07-2025

விளையாட்டுச் செய்திகள்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அங்கோர் டைகர் எஃப்சியுடன் ஒப்பந்தத்தை நீட்டித்தது

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கம்போடியன் பிரீமியர் லீக் அணியான அங்கோர் டைகர் கால்பந்து கிளப்புடனான தனது கூட்டாண்மையை 2025-26 சீசனுக்கு நீட்டித்துள்ளது. இந்த ஆண்டு, டிவிஎஸ் மோட்டார் தனது டிவிஎஸ் கார்கோ கிங் 225சிசி ஆட்டோவை வழங்குவதன் மூலம் கிளப்புக்கான ஆதரவை அதிகரிக்கும். கிளப் இந்த வாகனத்தை அதன் செயல்பாட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும். அங்கோர் டைகர் எஃப்சி சியாம் ரீப் நகரில் அமைந்துள்ளது மற்றும் இந்திய நிறுவனமான ஸ்காஸ்போர்ட்ஸ் அதில் பங்குகளை வைத்துள்ளது.

அனுபவமிக்க இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி ஓய்வு

இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெள்ளிக்கிழமை ஓய்வு பெறுவதாக அறிவித்தார். விளையாட்டுடன் வேறு சில வழிகளில் தொடர்ந்து இணைந்திருப்பார் என அவர் சூசகமாகத் தெரிவித்தார். வேதா 48 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 829 ரன்கள் எடுத்தார். அவர் 76 டி20 போட்டிகளில் விளையாடி 875 ரன்கள் எடுத்தார். அவரது கடைசி டி20 போட்டி 2020-இல் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்றது. அவர் 2018-இல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

உலக ஜூனியர் ஸ்குவாஷ்: அனாஹத் சிங்குக்கு வெண்கலம்

எகிப்தில் நடைபெறும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் அனாஹத் சிங் 6-11, 12-14, 10-12 என்ற கணக்கில் இங்கிலாந்தின் வீராங்கனை எல்மான்டிலிடம் தோல்வியைத் தழுவினார். உலக சாம்பியன்ஷிப் அரையிறுதி வரை வந்து வெண்கலப் பதக்கம் கிடைத்தது. முன்னதாக 2010-இல் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா இதேபோட்டியில் அரையிறுதி வரை வந்து வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்த போட்டி, 2005-இல் ஜோஷ்னா சின்னப்பா இறுதிச்சுற்றுக்கு வந்ததற்குப் பிறகு இந்தியர் ஒருவர் இறுதிச்சுற்றுக்கு வந்த அதிகபட்ச சாதனையாகும்.

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

அனுராதா தாக்கூர் ரிசர்வ் வங்கி மத்திய வாரியத்தின் இயக்குநராக நியமனம்

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறைச் செயலர் அனுராதா தாக்கூர், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மத்திய வாரியத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அஜய் சேத்துக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் ஜூலை 24 முதல் அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.

தேசியச் செய்திகள்

பிரதமராக தொடர்ந்து 4,078 நாட்கள்: இந்திரா காந்தியை முந்தினார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக 4,078 நாட்களை நிறைவு செய்து, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் தொடர்ச்சியான பதவிக்கால சாதனையை முந்தினார். இந்திய வரலாற்றில் தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த இரண்டாவது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். இந்திரா காந்தி 1966 ஆகஸ்ட் 24 முதல் 1977 மார்ச் 24 வரை 4,077 நாட்கள் தொடர்ந்து பதவி வகித்திருந்தார். 2014-ஆம் ஆண்டு முதல் முறையாக பிரதமர் பதவியேற்ற மோடி, குஜராத் முதல்வராகவும் 2001-இல் இருந்து 2012 வரை பதவி வகித்திருந்தார். மோடி, சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்த முதல் பிரதமர், காங்கிரஸ் அல்லாத நாட்டின் நீண்டகால பிரதமர், மற்றும் பிரதமர் பதவியில் இரண்டு முழுப் பதவிக் காலங்களை நிறைவு செய்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் ஆகிய பெருமைகளுக்கும் சொந்தக்காரர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), 2019

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), 2019, ஏற்கனவே உள்ள 1955 குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்தது.

இது குறிப்பிட்ட ஆவணமற்ற குடியேற்றக்காரர்களுக்கு இந்தியக் குடியுரிமை பெற வழிவகை செய்கிறது.

யாருக்குப் பொருந்தும் :

மதச் சிறுபான்மையினர்: இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள்.

மூல நாடுகள்: ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான்.

நுழைந்த தேதி: 2014 டிசம்பர் 31 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள்.

துல்லியத் தாக்குதல் நடத்த உதவும் ரேடார்கள் கொள்முதல்

இலக்குகளைக் குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்த தகவல்களைப் பரிமாறும் வகையிலான வான் பாதுகாப்பு ரேடார்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ₹2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டது. குறைந்தபட்சம் 70 சதவீதம் உள்நாட்டுப் பொருட்களுடன் தயாரிக்கப்படும் இந்த ரேடார்கள், போர் விமானம், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் என அனைத்து விதமான வான் தாக்குதல்களையும் கண்டறியும் திறனுடையவை. பாதுகாப்புத் துறையை வலுவாக்கும் இந்த ஒப்பந்தம், இந்திய ராணுவத்தின் வலிமையை அதிகரிப்பதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

ட்ரோன் மூலம் ஏவுகணையை வீச: வெற்றிகரமாக சோதித்த டிஆர்டிஓ

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இலக்குகளைப் பின்தொடர்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. ஆந்திர மாநிலம், கர்நூலில் உள்ள ஏவுகணை சோதனை மையத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. டிஆர்டிஓ-வின் இந்த புதிய தலைமுறை ‘வி2’ ஏவுகணை பல இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. நிலத்திலிருந்தும், மிக உயரமான பகுதியிலிருந்தும் பகலிலும் இரவிலும் இந்த ஏவுகணைகளை ஏவ முடியும். இது தாக்கிய பிறகு மீண்டும் மாற்றக்கூடிய வகை உருகி மற்றும் தரவு இணைப்பு இதில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ள பாக்கிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவப்படையினர் இந்த தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா-பாக்கிஸ்தான் இடையே சண்டையுள்ள முன் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியப் படையினர் தனது மிக்-21 ரக விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய நிலையில், பாக்கிஸ்தான் தனது ‘ஜேஎஃப்-17’ ரக ட்ரோன்கள் மூலம் இந்திய எல்லைப் பகுதிகளில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த சண்டைக்குப் பிறகு, பாதுகாப்பு துறையில் ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

சர்வதேசச் செய்திகள்

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் அறிவிப்பு

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு செப்டம்பர் 2025-இல் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும். மனிதாபிமான நெருக்கடி மற்றும் போர் நிலவும் சூழலில், இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தனித்தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவது முன்னோக்கிச் செல்லும் வகையில் இந்த அங்கீகாரம் அமையும் என மேக்ரான் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

மாலத்தீவுக்கு ₹4,850 கோடி கடனுதவி - பிரதமர் மோடி அறிவிப்பு

மாலத்தீவுக்கு ₹4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்திய-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் விரைந்து இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது. மாலத்தீவு அதிபர் முகம்மது முயிஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தியப் படையினர் மாலத்தீவிலிருந்து முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என மாலத்தீவு அதிபர் முயிஸ் வலியுறுத்தியிருந்தார். மாலத்தீவுக்கு இந்தியா எப்போதுமே பாதுகாப்புத் துறையில் துணை நிற்கும். இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கைக்கான சான்றாகவும் உள்ளது. இரு நாடுகளும் அரசியல் உறவை அடுத்த 10 ஆண்டுகளில் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் என மோடி தெரிவித்தார். 2035-ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகள் தரப்பிலும் வர்த்தகம் முழுமையாக செயல்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிரிட்டன் பயணத்தை முடித்துக்கொண்டு மாலத்தீவு வந்த பிரதமர் மோடி, மாலத்தீவின் 60-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்றார்.

சமகால இணைப்புகள்