TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 24-07-2025
சர்வதேசச் செய்திகள்
5 ஆண்டுகளுக்குப் பிறகு சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கத் தொடங்கியது இந்தியா
ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு சீன நாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை வழங்க இந்தியா தொடங்கும் என்று பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் புதன்கிழமை அறிவித்தது. சீன வெளியுறவு அமைச்சகத்தால் “நேர்மறையானது” என்று அழைக்கப்பட்ட இந்த அறிவிப்பு, 2020 இல் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) மற்றும் கல்வான் மோதல்களால் சீர்குலைந்த அண்டை நாடுகளுக்கு இடையேயான உறவுகளை இயல்பாக்குவதற்கான மற்றொரு படியைக் குறிக்கிறது.
பிரதமர் மோடி பிரிட்டன் பயணம் - வர்த்தக ஒப்பந்தம் இன்று கையொப்பம்
பிரிட்டன், மலேசியா ஆகிய நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கினார்.
முதல்கட்டமாக, பிரிட்டனுக்குச் செல்லும் அவர், பிரதமர் கியர் ஸ்டார்மர், அரசர் மூன்றாம் சார்ல்ஸ் உள்ளிட்டோருடன் சந்திப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் இரண்டு நாள்கள் பங்கேற்கவுள்ளார். முந்தையத் திட்டப்படி, இருதரப்பு உறவுகள் குறித்து இன்று (வியாழக்கிழமை, ஜூலை 24) கையொப்பமாகவிருந்தது.
இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பிரதமர்கள் நரேந்திர மோடி, கியர் ஸ்டார்மர் ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை (ஜூலை 24) கையொப்பமாகவுள்ளது.
ஒப்பந்தம் கையொப்பமானாலும், அது நடைமுறைக்கு வர பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம். இந்தச் செயல்முறைக்கு சுமார் ஓராண்டு ஆகலாம்.
இந்தியாவில் இந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: இந்த ஒப்பந்தத்தின்மூலம், 2030-ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 12,000 கோடி டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில், இந்தியா-பிரிட்டன் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2,134 கோடி டாலராக உள்ளது. இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகும் 99 சதவீத பொருள்களுக்கு முழுமையான வரி விலக்கு கிடைக்கும். பிரிட்டனின் விஸ்கி, ஜின் போன்ற மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி முதல்கட்டமாக 150 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகவும், ஒப்பந்தத்தின் 10-ஆவது ஆண்டுக்குள் 40 சதவீதமாகவும் குறைக்கப்படும். வாகனங்களுக்கான சுங்க வரி 100 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், குறிப்பிட்ட ஒரு சில கார்களுக்கு 10 சதவீதமாகக் குறைக்கப்படும். அழகுசாதனப் பொருள்கள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் இயந்திரங்கள், சாக்லேட், பிஸ்கட் போன்ற பொருள்களுக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்படும். ஜவுளி, கடல்சார் பொருள்கள், தோல், காலணிகள், விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள், ரத்தினங்கள், ஆபரணங்கள், பெரிய இயந்திரப் பொருள்கள், வாகன உதிரிபாகங்கள், எஃகு உள்ளிட்ட பொருள்கள் போன்ற இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு சார்ந்த துறைகளுக்கு பிரிட்டன் சந்தையில் புதிய ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்த சேவை வழங்குநர்கள், வணிகர்கள், முதலீட்டாளர்கள், நிபுணர்கள், குறுகியகாலப் பணியாளர்கள், மாணவர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் சமையல் வல்லுநர்கள் போன்ற இந்திய நிபுணர்கள் பிரிட்டனுக்கு எளிதில் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரச் செய்திகள்
ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துடன் எல்ஐசி ஒப்பந்தம்
கிராமப்புறங்களில் தனது பீமா சகி திட்டத்தை ஊக்குவிப்பதற்காக எல்ஐசி நிறுவனம் இந்திய அரசின் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கிராமப்புற வாடிக்கையாளர்களிடையே நிறுவனத்தின் பீமா சகி திட்டத்தை ஊக்குவிப்பதற்காக, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் ஊரக மேம்பாட்டுப் பிரிவு டன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது.
கோவாவில் அண்மையில் மூன்று நாள்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அனுபவ்’ என்ற தேசிய அளவிலான மாநாட்டின் போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
காப்பீட்டு வணிகத்தில் பெண்கள் வலுவான இடத்தைப் பெற உதவும் வகையில் எல்ஐசியின் பீமா சகி திட்டம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மட்டுமேயான இத்திட்டத்தில் செயல்திறன் சார்ந்த உதவித்தொகை வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல் முகவர்களுக்கான மற்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன .
ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் அறிவிப்பு
ஜப்பானுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டுப் பொருள்களுக்கு இறக்குமதி வரி 15 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவில் ஜப்பான் 55,000 கோடி டாலர் முதலீடு செய்யும். அமெரிக்க வாகனப் பொருள்கள் மற்றும் அரிசிக்கு ஜப்பான் தனது சந்தையைத் திறக்கும். ஜப்பான் பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத இறக்குமதி வரி ஆகஸ்ட் 1 முதல் 15 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தேசியச் செய்திகள்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைமுறைகள் தொடக்கம்
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் வரும் 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடைய இருந்த நிலையில், அவர் தனது பதவியை திங்கள்கிழமை (ஜூலை 21) ராஜிநாமா செய்தது குடியரசுத் தலை வருக்கு கடிதம் அனுப்பினார். அவ ரின் ராஜிநாமா அறிக்கையை மத் திய உள்துறை அமைச்சகம் செவ் வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த அறிக்கைக்காக குறித்த தகவல் மாநிலங் களவையிலும் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் முன்னேற்பாடுகள் நிறை வடைந்தவுடன், தேர்தல் வாக்காளர் (எம்.பி.க்கள்) குழுவை வாக்களிக்க அழைப்பு விடுக்கும் அறிவிப்பை வெளியிடும் நாளிலிருந்து வாக்களிக்கும் நாள் வரை 30 நாள்கள் கால அவ காசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, அறிவிப்பு வெளியான 30 நாள்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் என்பது அரச மைப்புச் சட்டத்தின் பிரிவு 66 (1)-இன் கீழ், விகிதாசார பிரதிநிதித்துவ முறைப்படி ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும். அதன்படி, வேட்பாளரின் பெயருக்கு எதிரே தனது விருப்பத் தேர்வை வாக்காளர் குறிக்க வேண்டும்.
விதிகளின்படி, குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், இந்தியராகவும், 35 வயதுப் பூர்த்தி செய்தவராகவும், மாநிலங் களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி உடையவராகவும் இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் இல்லாத நபரை குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடியாது.
அத்துடன், மத்திய அரசு, மாநில அரசு அல்லது எந்தவொரு துணை உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் ஆதாயப் பதவியை வகிக்கும் நபரும் குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட தகுதியற்றவராகக் கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் செப். 22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு
கர்நாடகத்தில் செப். 22-ஆம் தேதி முதல் புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான முன்மொழிவை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாநில அரசிடம் அளித்துள்ளது. இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ள மாநில அரசு, கர்நாடகத்தில் வாழும் 7 கோடி மக்களின் விவரங்களை ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் பெறத் திட்டமிட்டுள்ளது. ஜாதிரீதியான பாகுபாட்டைக் களைவதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம்.
இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு செப். 22 முதல் அக். 7 வரை 15 நாள்களுக்கு நடத்தப்படும். கணக்கெடுப்பு விவரங்கள் அடங்கிய அறிக்கையை அக்டோபர் மாத இறுதிக்குள் மாநில அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம்.
2015-இல் காந்தராஜ் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஏற்கெனவே 54 கேள்விகளுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இம்முறை மேலும் சில கேள்விகள் சேர்க்கப்படும் என்றார்.