TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16-07-2025
முக்கிய தினங்கள்
மாணவர்கள் படிப்பதற்கு உகந்த நகரங்கள்: சென்னைக்கு 128-ஆவது இடம்
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுதொடர்பாக பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள உலகளாவிய உயர்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான குவாக்கரெலி சிமண்ட்ஸ் (க்யூஎஸ் வெளிட்டரவராசிபன்படி), தென் கொரியா தலை நகர் சியோல் முதலிடம்பிடித்துள்ளது.
இந்தப்பட்டியலில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தலண்டன் மூன்றாவது இடத்துக்கு சரிந்தது.
இந்தப்பட்டியலில் மும்பை 15 இடங்கள் முன்னேறி 98-ஆவது இடமும், தில்லி 7 இடங்கள் முன்னேறி 104-ஆவது இடமும், பெங்களூரு 22 இடங்கள் முன்னேறி 108-ஆவது இடமும் பிடித்துள்ளன.
சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உகந்த முதல் 5 நகரங்கள் (க்யூஎஸ் தரவரிசைப்படி)
1 சியோல் (தென் கொரியா) 2 டோக்கியோ (ஜப்பான்) 3 லண்டன் (பிரிட்டன்) 4 முனிச் (ஜெர்மனி) 5 மெல்போர்ன் (ஆஸ்திரேலியா)
தேசியச் செய்திகள்
தெற்காசியா சாதனை தடுப்பூசி பாதுகாப்பை எட்டியது
இந்தியாவில் பூஜ்ஜிய-டோஸ் குழந்தைகள் — ஒரு தடுப்பூசிகூடப் பெறாதவர்கள் — எண்ணிக்கை 2023 இல் 1.6 மில்லியனில் இருந்து 2024 இல் 0.9 மில்லியனாக, 43% குறைந்துள்ளது.
தெற்காசியா குழந்தைகளுக்கான மிக உயர்ந்த தடுப்பூசி பாதுகாப்பை எட்டியுள்ளது, இந்தியா மற்றும் நேபாளத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன், 2024 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் UNICEF செவ்வாய்க்கிழமை (ஜூலை 15, 2025) வெளியிட்ட புதிய தரவுகளின்படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பூஜ்ஜிய-டோஸ் குழந்தைகள் — ஒரு தடுப்பூசிகூடப் பெறாதவர்கள் — எண்ணிக்கை 2023 இல் 1.6 மில்லியனில் இருந்து 2024 இல் 0.9 மில்லியனாக, 43% குறைந்துள்ளது. நேபாளம் 52% குறைப்பை எட்டியுள்ளது, அதாவது 23,000 இல் இருந்து 11,000 ஆக குறைந்துள்ளது என்று WHO அறிக்கை தெரிவிக்கிறது.
பாகிஸ்தான் தனது மிக உயர்ந்த DTP3 (டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டுசிஸ்) பாதுகாப்பை 87% ஆகப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் தொடர்ந்து போராடி வருகிறது, அப்பிராந்தியத்தில் மிகக் குறைந்த பாதுகாப்புடன், கடந்த ஆண்டிலிருந்து ஒரு சதவீத புள்ளி சரிவைச் சந்தித்துள்ளது என்று மேலும் கூறப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், தெற்காசியாவில் உள்ள 92% குழந்தைகள் DTP தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப் பெற்றுள்ளனர் — இது ஒரு முக்கியமான உலகளாவிய குறியீடாகும் — இது 2023 ஐ விட இரண்டு சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது. முதல் டோஸ் DTP பாதுகாப்பு 93 இல் இருந்து 95% ஆக உயர்ந்துள்ளது, இது கோவிட்-க்கு முந்தைய நிலைக்கு அப்பாற்பட்ட வலுவான மீட்சியை காட்டுகிறது.
விளையாட்டுச் செய்திகள்
2-ஆவது குறைந்தபட்ச ஸ்கோர் - மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் எடுத்த 27 ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட 2-ஆவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இதற்கு முன் 1955-ல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து தனது 2-ஆவது இன்னிங்ஸில் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே இன்றுவரை மோசமான சாதனையாக உள்ளது.
ஆகஸ்ட் 3-ல் மாமல்லபுரத்தில் ஆசிய சர்பிங் போட்டி தொடக்கம்
ஆசிய சர்பிங் போட்டி வரும் ஆக.3-ஆம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிய சர்பிங் கட்டமைப்பு, இந்திய சர்பிங் சம்மேளனம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆக. 3 முதல் 12 வரை மாமல்லபுரத்தில் சர்பிங் போட்டி நடைபெறவுள்ளது.
20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் இந்தத் தொடரில் கலந்துகொள்ளும் வீரர்கள் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதி இடங்களுக்கும் போட்டியிடுவார்கள்.
மாநிலச் செய்திகள்
பாம்புகளைப் பிடிக்க ‘நாகம்’ செயலியை அறிமுகம் செய்த தமிழக அரசு
வீடுகள், அலுவலகங்களில் பாம்பு புகுந்தால் அவற்றைப் பிடிக்க உதவும் ‘நாகம்’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்துலக பாம்பு தினத்தையொட்டி, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு இந்தச் செயலியை வெளியிட்டார்.
கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் கேரள அரசு ‘சர்ப்பா’ என்றொரு செயலியை அறிமுகப்படுத்தியது. அதனையடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் அம்மாநிலத்தில் பாம்புக்கடியால் நேர்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
அங்கு 2019ஆம் ஆண்டு பாம்புக்கடியால் 123 பேர் மாண்டுபோன நிலையில், 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 34ஆகக் குறைந்தது.
இதுவரை 34,700க்கும் மேற்பட்டோர் ‘சர்ப்பா’ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.