TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 13-07-2025
விளையாட்டுச் செய்திகள்
விம்பிள்டனில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி: தனது முதல் பட்டத்தை வென்றார் இகா ஸ்வியாடெக்
இகா ஸ்வியாடெக், தனது அபாரமான மற்றும் ஆதிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது முதல் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். சென்டர் கோர்ட்டில் நடந்த இறுதிப் போட்டியில், அமாண்டா அனிசிமோவாவை 6-0, 6-0 என்ற கணக்கில் 57 நிமிடங்களில் தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம், 114 ஆண்டுகளில் விம்பிள்டன் மகளிர் இறுதிப் போட்டியில் ஒரு கேம் கூட வெல்லாமல் ஒரு வீராங்கனை தோற்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த வெற்றியின் மூலம், 1992-ல் மோனிகா செலஸிற்குப் பிறகு தனது முதல் ஆறு கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை ஸ்வியாடெக் பெறுகிறார். மேலும், தற்போது விளையாடும் வீராங்கனைகளில் மூன்று விதமான ஆடுகளங்களிலும் (களிமண், ஹார்ட் கோர்ட், புல் தரை) பட்டங்களை வென்ற ஒரே வீராங்கனை இவர் மட்டுமே. ஓபன் எராவில் 6-0, 6-0 என்ற கணக்கில் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ஸ்டெஃபி கிராஃப்புடன் இவர் இணைந்துள்ளார்.
ஆடவர் இரட்டையர் சாம்பியன்
விம்பிள்டன் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருந்த பிரிட்டனின் ஜூலியன் கேஷ் - லாய்ட் கிளாஸ்பூல் கூட்டணி 6-2, 7-6 (7/3) என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடா - நெதர்லாந்தின் டேவிட் பெல் இணையை வீழ்த்தி சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.
விம்பிள்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் உள்நாட்டைச் சேர்ந்த இருவர் இணைந்து சாம்பியன் கோப்பை வென்றது, கடந்த 89 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
செஞ்சிக் கோடைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்
யுனெஸ்கோ அங்கீகாரத்தால், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சிக் கோட்டை உலகளவில் புகழ் பெற்றது. செஞ்சிக்கோட்டையை 13-ஆம் நூற்றாண்டில் சோழர் வம்சத்தினர் கட்டத் தொடங்கினர். அடுத்துவந்த பல மன்னர்கள் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். இங்குள்ள கோயில்கள் மண்டபங்கள் குளங்கள், சனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற்களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழி போன்றவை தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக்கலை இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இப்பகுதியில் சமணர்கள் வாழ்ந்தனர் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழர்கள் கி.பி 871 முதல் 907-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்திருந்தனர். கி.பி. 1014-1190 ஆண்டுகளில் பாண்டியர்கள் ஆளுகையில் இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. 13-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசுகளின் ஆளுகையில் இருந்தது. விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக் கோட்டை இருந்தபோது 1509-ஆம் ஆண்டு முதல் 1529-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர். பின்னர், மராத்தியர்களிடம் இருந்த கோட்டையை பிஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக்கோட்டையை கி.பி. 1677-ஆம் ஆண்டில் பீட்ட மராத்திய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஒளரங்கசீப்பின் தக்காண படையெடுப்பின் போது மராத்திய மன்னராக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பித்து செஞ்சிக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டார். முகலாயர்கள் கோட்டையை முற்றுகையிட்டு இருந்த போதும் ஏழு ஆண்டுகளாக இதைக் கைப்பற்ற முடியவில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் 10 மாதம் ராஜா தேசிங்கு என அழைக்கப்படும் தேஜஸ்விங் ஆட்சி புரிந்தார். 1698-க்கு பிறகு இக்கோட்டை கர்நாடக நவாபுகளின் கைக்கு வந்தது. அவர்கள் 1750-இல் இதை பிரெஞ்சுக்காரர்களிடம் இழந்தனர். இறுதியாக 1761 கிழக்கிந்திய கம்பெனி (ஆங்கிலேயர்கள்) செஞ்சிக் கோட்டையை கைப்பற்றிக் கொண்டது. அதன்பிறகு முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921-ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச்சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது
சர்வதேசச் செய்திகள்
ஒரே நாடு ஒரே தேர்தல் ஜூலை 30-ல் அடுத்த நாடாளுமன்றக் குழு கூட்டம்
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌத்ரி தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஆலோசனைக் கூட்டத்தின்போது ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா மற்றும் எஸ்.ஏ.போப்டே ஆகியோரிடம் கருத்து கேட்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசியலமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டத் திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் உருவாக்கப்பட்டன.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, இரு மசோதாக்களும் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத்தொடர்ந்து, இருமசோதாக்களும் நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவராக பி.பி.சௌத்ரி நியமிக்கப்பட்டார்.
இந்தக் குழு சட்ட நிபுணர்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகளிடம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பு: இந்தியாவில் ஒரே நேரத்தில் (சமகால) தேர்தல்கள், அதாவது மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட்ட காலம் 1951 முதல் 1967 வரை ஆகும்.
🏛 அரசியலமைப்பு சட்டம் (129வது திருத்த மசோதா), 2024: இந்த மசோதா, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை ஒரே நேரத்தில் முடிவுக்கு கொண்டு வருவதற்காக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, அரசியலமைப்பில் புதிய 82A(1) முதல் 82A(6) வரை விதிகளை சேர்க்கும்.
82A(1): முதல் அமர்வுக்குப் பிறகு, முதலாவது மக்களவை அமர்வு நடைபெறும் நாளை “நியமனத் தேதி” (Appointed Date) எனக் குறித்துப் புதிய ஒழுங்குகளை குடியரசுத் தலைவர் அறிவிப்பார்.
82A(2): நியமனத் தேதிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம், அந்த மக்களவை பதவிக்காலம் முடியும் நாளுடன் முடிவடையும்.
82A(3): இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மக்களவைக்கும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் பொதுத்தேர்தல்களை நடத்த வேண்டும்.
82A(4): “ஒரே நேரத்தில் நடைபெறும் தேர்தல்” என்பது, மக்களவையும் அனைத்து மாநில சட்டமன்றங்களையும் ஒன்றாக உருவாக்கும் பொதுத்தேர்தல்களாக வரையறுக்கப்படுகிறது.
82A(5): தேர்தல் ஆணையம், மக்களவை தேர்தலோடு ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டாம் என தீர்மானிக்கலாம். அது தொடர்பாக, அந்த மாநிலத்திற்கான தேர்தலை பிறிதொரு தேதியில் நடத்த குடியரசுத் தலைவரை ஆலோசனை செய்யலாம்.
82A(6): மாநில சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும், அதன் பதவிக்காலம் அந்த மக்களவையின் பதவிக்காலம் முடியும் நாளில் முடிவடையும்.
✍️ 83 மற்றும் 172வது பிரிவுகளில் திருத்தம்: 83வது பிரிவு: மக்களவை முழுமையான ஐந்தாண்டு காலம் முடிவடைவதற்குமுன் கலைக்கப்பட்டால், அடுத்த மக்களவை, கலைக்கப்பட்ட நாளில் இருந்து, முதல் அமர்வு நாளில் இருந்து ஐந்தாண்டுகள் முடிவடையும் வரை மீதமுள்ள காலத்திற்கு மட்டும் பதவியில் இருக்கும். இதனால், அதற்குள் நிலுவையிலிருக்கும் மசோதாக்கள் காலாவதியாகும்.
172வது பிரிவு: மாநில சட்டமன்றங்கள் தொடர்பானது. மாநில சட்டமன்றம் பதவிக்காலத்திற்கு முன் கலைக்கப்பட்டால், புதிய தேர்தல் முந்தைய சட்டமன்றத்தின் மீதமுள்ள பதவிக்காலத்திற்காக மட்டும் நடத்தப்படும்.
📜 327வது பிரிவில் திருத்தம்: “தொகுதி மறுவரையறைக்கு பின்” என்ற சொல்லுக்கு பின்னர் “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துதல்” என்ற சொல்லைச் சேர்த்து, மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.
இந்த திருத்தத்தில் உள்ளூர் நிர்வாக அமைப்புகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல்கள் சேர்க்கப்படவில்லை.
🗺️ கூட்டாட்சி பகுதி சட்ட திருத்த மசோதா, 2024: இந்த மசோதா கீழ்காணும் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்கிறது:
1962ஆம் ஆண்டின் “கூட்டாட்சி பகுதிகள் நிர்வாகச் சட்டம்” – பிரிவு 5
1991ஆம் ஆண்டின் “தில்லி தேசிய தலைநகர் பிராந்திய நிர்வாகச் சட்டம்” – பிரிவு 5
2019ஆம் ஆண்டின் “ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்” – பிரிவு 17
இந்த திருத்தங்கள், மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தலோடு கூட்டாட்சி பகுதிகளிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.

பூமிக்கு திரும்பும் பயணத்தை நாளை தொடங்கும் சுக்லா!
‘ஆக்ஸியம்-4’ திட்டத் தின்கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், இந்திய நேரப்படி திங்கட்கிழமை மாலை 4.35 மணியளவில் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குகின்றனர்.
அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்றடைந்தனர்.
‘ஆக்ஸியம்-4’ திட்டம் 14 நாள்கள் ஆய்வுப் பணியை உள்ளடக்கியதாகும். உயிரி மருத்துவ அறிவியல், நரம்பணுவியல், வேளாண்மை, விண்வெளித் தொழில்நுட்பம் என பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் மேற்கொண்டனர். இந்த வீரர்கள் வியாழக்கிழமையுடன் 14 நாள்களை நிறைவு செய்தனர்.
இந்நிலையில், அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை மாலை 4.35 மணிக்கு (இந்திய நேரப்படி) பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குகின்றனர். சுமார் 23 மணி நேர பயணத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்துக்கு அருகில் கடலில் பாராசூட்களின் உதவியுடன் வீரர்கள் தரையிறங்குவர்.
தேசியச் செய்திகள்
ரயில்வே பாதுகாப்புப் படைக்கு முதன்முறையாக பெண் தலைவர்
ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.
தற்போது ஆர்பிஎஃப் தலைமை இயக்குநராக உள்ள மனோஜ் யாதவாவின் பதவிக்காலம் ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், அந்தப் பதவிக்கு முதல் பெண் தலைமை இயக்குநராக சோனாலி மிஸ்ராவை நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. சோனாலி மிஸ்ரா 2026, அக். 31-ஆம் தேதிவரை அப்பதவியில் இருப்பார் என நியமன உத்தரவை மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டது.
1993, மத்திய பிரதேச பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சோனாலி மிஸ்ரா தற்போது மத்திய பிரதேச மாநில காவல் துறையின் (நியமனம்) கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார்.
சீனாவில் ஜூலை 15-ல் எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்
சீனாவின் ஜியான்ஜினில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்தியா, சீனா, ரஷியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 உறுப்பு நாடுகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கொண்டுள்ளது. அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம், சீனாவின் துறைமுக நகரான சிங்டோவில் கடந்த மாத இறுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். கூட்டத்தின் கூட்டறிக்கையில், பயங்கரவாதம் குறித்த தாகூர் மற்றும் பாகிஸ்தானின் நிலைப்பாடு ஆகியவை தனித்தனியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், அது கையொப்பமிடப்படாததால், அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார். இதனால் அந்தக் கூட்டம் கூட்டறிக்கை வெளியிடப்படாமல் முடிவுற்றது.
இதன் தொடர்ச்சியாக, அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அழைப்பின் பேரில், உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், அமைப்பின் பல்வேறு துறை ஒத்துழைப்பு குறித்தும், முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்தும் வெளியுறவு அமைச்சர்கள் தங்களின் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வார்கள்.
கிழக்கு லடாக் மோதுதலுக்குப் பிறகு, ஜெய்சங்கர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
2040-ல் நிலவில் இந்தியர்கள் தரையிறங்க திட்டம்
நிலவில் 2040-ஆம் ஆண்டில் இந்தியர்கள் தரையிறங்குவதற்கான திட்டப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
விண்வெளிக்கு இந்தியா மனிதரை பாதுகாப்பாக அனுப்பி, பத்திரமாக பின்னர் பாதுகாப்பாக திரும்பக் கொண்டுவரும் திட்டத்துக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இது 15.8.2018-ல் பிரதமர் மோடி அறிவித்த திட்டம். அப்போது இந்தத் திட்டத்துக்காக ரூ. 10,000 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது, ரூ. 20,000 கோடியில் அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தில் முதல் ராக்கெட் வரும் டிசம்பரில் ஆள் இல்லாமல் அனுப்பப்படவுள்ளது. 2-ஆவது ராக்கெட் அடுத்த ஆண்டு செலுத்தப்படும். 2027-ல் மனிதரை அனுப்பப் போகிறோம். முதல் விண்வெளி பயணி ராகேஷ் சர்மா 1984-ல் ரஷ்யா மூலம் மேற்கொண்டார். அதில், இந்தியாவுக்குப் பலன்கள் கிடைத்தன.
தற்போது சுபான்ஷு சுக்லாவை அமெரிக்காவிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளோம். அவர் திரும்பி வந்த பிறகு, அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு ஆள் அனுப்பும் திட்டத்துக்கு பேருதவியாக இருக்கும். 2040-ல் நிலவில் இந்தியர்கள் தரையிறங்கும் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.