Current Affairs Fri Jul 11 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 11-07-2025

பொருளாதாரச் செய்திகள்

இந்தியாவின் யுபிஐ பணப்பரிமாற்ற முறைக்கு சர்வதேச நிதியம் பாராட்டு

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அதி வேகமான யுபிஐ பணப்பரிமாற்ற முறையை இந்தியா கொண்டுள் ளது என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டுத் தெரிவித்துள்ளது.

‘சில்லறை வர்த்தகத்தில் எண்மப் பணப்பரிமாற்ற முறையின் வளர்ச்சி’ என்ற தலைப்பில் சர்வதேச நிதியம் வெளியிட்ட ஆய்வுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் யுபிஐ பணப்பரிமாற்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மிக விரைவான வளர்ச்சி யைச் சந்தித்து வருகிறது. காகிதப் பணப்பரிமாற்ற முறை குறைந் துள்ளது. ஒரு மாதத்துக்கு 180 கோடி முறைக்கு மேல் இந்த முறை யில் பணப்பரிமாற்றம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதன் மூலம் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிவேகப் பணப்பரிமாற்ற முறையையும் இந்தியா கொண்டுள்ளது.

சிறிய அளவிலான தொகை முதல் பெரிய அளவிலான தொகை வரை இந்த எண்ம முறை பணப்பரிமாற்றத்தில் மேற்கொள்ளும் வசதி இருப்பதால் மக்கள் ஏடிஎம்களைப் பயன்படுத்துவது குறைந் துள்ளது. சிறிய கிராமங்களில் உள்ள சிறு வர்த்தகர்கள் கூட யுபிஐ பணப்பரிமாற்றத்தை ஏற்பதால் வங்கிச் சேவையும் சிறப்பாக விரிவுப டுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.4,000 கோடி திரட்ட ஐஓபி-க்கு ஒப்புதல்

ரூ.4,000 கோடி மூலதனம் திரட்ட, பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு (ஐஓபி) அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இது குறித்து வங்கி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கூடுதலாக ரூ.4,000 கோடி மூலதனம் திரட்ட வங்கிக்கு பங்குதாரர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். வங்கியின் 25-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தகுதியுடைய நிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கீடு (கியூஐபி), தற்போதைய பங்குதாரர்களுக்கு சலுகை விலையில் கூடுதல் பங்கு ஒதுக்கீடு (ரைட்ஸ் இஷ்யூ), பணியாளர்களுக்கான பங்கு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் இந்த மூலதனத்தைத் திரட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிப்ரவரி 10, 1937 அன்று திரு. எம். சி.டி. எம். சிதம்பரம் செட்டியார் அவர்களால் நிறுவப்பட்டது. தலைமையகம்: இது தமிழ்நாட்டின் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பொதுத்துறை வங்கியாகும். தேசியமயமாக்கல்: 1969-ல் இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட 14 முக்கிய வங்கிகளில் ஐஓபி-யும் ஒன்றாகும். மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (MD & CEO): திரு. அஜய் குமார் ஸ்ரீவாஸ்தவா

தேசியச் செய்திகள்

குடியுரிமை ஆவணமா ஆதார், குடும்ப அட்டை தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை

பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின்போது, வாக்காளர்களின் குடியுரிமையை சரிபார்க்க ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தும் செய்யும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில், ‘மாநிலத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளி யிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், எந்தவொரு ஆதார ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆனால், அப் பட்டியலில் இடம்பெறாத வாக் காளர்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையம் யம் தன்னிச்சையாக பிறப்பித்த இந்த உத்தரவு, லட்சக் கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை பறித்து, சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை சீர்குலைக்கும் முயற்சி என்று குற்றம்சாட்டின.

இந்தியத் தலைமை நீதிபதி: பி. ஆர். கவாய் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்: கியானேஷ் குமார் பிகார் முதல்வர்: நிதிஷ் குமார்

சமகால இணைப்புகள்