Current Affairs Thu Jul 10 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10-07-2025

சர்வதேசச் செய்திகள்

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உபொருள் கூட்டணியில் நமீபியா இணைதல் உள்ளிட்டவை தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையரை

விண்ட்ஹோக்கில் நமீபியாவின் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் மேலும் பேசுகையில், ‘இந்தியா, நமீபியா, ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவும், உலகளாவிய தெற்கின் நாடுகளும் ஒருங்கிணைந்து ஒரு வலுவான முன்னணியை உருவாக்க வேண்டும்’ என்றார்.

இந்தியா-நமீொப்பமிடப்பட்டன. இந் தியாவில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்வதற்கு நமீபியாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரலில் கையொப்பமான ஒப்பந்தபியா இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 800 மில்லியன் டாலரை (சுமார் ரூத் தின்படி, நமீபியாவிலிருந்து நடப்பு பாண்டில் இறுதியில் புலி சேவை தொடங்கப்படும் என்று அறிவி.6,850 கோடி) தாண்டியுள்ளது.

பிரதமருக்கு நமீபியாவின் மிக உயரிய குடிமை விருது வழங்கி கௌரவிப்பு

விருதின் பெயர்: ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்ஷியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ்

பிரதமர் திரு. நரேந்திர மோடி நமீபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிகழ்வின்போது, நமீபியாவின் அதிபர், மேதகு. நெடும்போ நந்தி-டைட்வா அவர்கள், பிரதமருக்கு நமீபியாவின் மிக உயரிய குடிமை விருதான ‘ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்ஷியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ்’ விருதை வழங்கிக் கௌரவித்தார்.

இந்த விருதைப் பெறும் முதல் இந்தியத் தலைவர் இவராவார். விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர், இந்த கௌரவத்தை 140 கோடி இந்திய மக்களுக்கும், இந்தியாவிற்கும் நமீபியாவிற்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் நீடித்த உறவுகளுக்கும் சமர்ப்பிப்பதாகக் கூறினார். இந்த உயரிய அங்கீகாரத்திற்காக அதிபர் நந்தி-டைட்வா அவர்களுக்கும் நமீபிய மக்களுக்கும் பிரதமர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

பிரதமருக்கு இந்த விருது வழங்கப்பட்டது, இந்தியாவிற்கும் நமீபியாவிற்கும் இடையேயான இருதரப்பு உறவுகளில் ஒரு மைல்கல்லாகும். மேலும், இந்த சிறப்புமிக்க இருதரப்பு கூட்டாண்மையை பெரும் உயரங்களுக்கு எடுத்துச் செல்ல, இரு நாடுகளின் இளம் தலைமுறையினருக்கும் இது ஒரு உத்வேக ஊற்றாக விளங்குகிறது.

சமகால இணைப்புகள்