Current Affairs Mon Jul 07 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 07-07-2025

விளையாட்டுச் செய்திகள்

திருப்பூர் தமிழன்ஸ் சாம்பியன்

டிஎன்பிஎல் 2025 இறுதிப்போட்டி திண்டுக்கல் ராஜா அண்ணாமலை புரத்தில் இன்று நடைபெற்றது.

இதில் 118 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டியின் விருதுகள் (Tournament Awards): Necto ஸ்டைலிஷ் பிளேயர் ஆஃப் தி டூர்னமெண்ட்: வி.பி. அமித் சத்விக் (IDTT).

British Empire Packaged Drinking Water ஹை வோல்டேஜ் பிளேயர் ஆஃப் தி டூர்னமெண்ட்: ஆர். ராஜ்குமார் (TGC).

Kei Cables பர்பிள் காப் (இந்த சீசனில் அதிகமாக விக்கெட்டுகள் எடுத்தவர்): சோனு யாதவ் (NRK).

abhibus ஆரஞ்சு காப் (இந்த சீசனில் அதிகமாக ரன்கள் எடுத்தவர்): துஷார் ரஹேஜா (IDTT).

Surf Excel Matic போட்டியின் சிறந்த பிடிப்பு விருது: விமல் குமார் (DD).

Emerging Bowler of the Tournament (முன்னாள் தமிழ்நாடு ரஞ்சி வீரர் எம். கே. முருகேஷ் வழங்கிய விருது): ஏ. எசக்கிமுத்து (IDTT).

Shriram Capital போட்டியின் அதிக பவுண்டரிகள் அடித்தவர்: துஷார் ரஹேஜா (IDTT).

Sharon Ply போட்டியின் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்: துஷார் ரஹேஜா (IDTT).

IOB போட்டியின் நம்பிக்கைக்குரிய வீரர்: ஆர். அஸ்வின் (DD).

Shriram Capital போட்டியின் சிறந்த வீரர் விருது: துஷார் ரஹேஜா (IDTT).

சர்வதேசச் செய்திகள்

ரஷிய, சீன நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் நிதியமைச்சர்களை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். பரஸ்பர நலன்கள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக அவர் ஆலோசனை மேற்கொண்டார். 17-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் பிரிக்ஸ் நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது, ரஷிய நிதியமைச்சர் ஆன்டன் சிலுவானோவ், சீன நிதியமைச்சர் லான் ஃபோவான் ஆகியோரை நிர்மலா சீதாராமன் இரு தரப்பு ரீதியில் தனித்தனியாக சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆதரவளித்தமைக்காக அந்நாட்டு நிதியமைச்சரிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்தார். இருதரப்பு நீண்ட கால கூட்டாண்மை குறித்து இரு அமைச்சர்களும் விரிவாக விவாதித்தனர். இந்தியா-ரஷியா இடையிலான பரஸ்பர நம்பிக்கையும் பரஸ்பர நல்லுறவும் முன்மாதிரானம்; இத்தகைய சிறப்புமிக்க, தனித்துவமான வியூகக் கூட்டாண்மை தொடர்ந்து துடிப்பாகவும் உறுதியாகவும் விளங்குகிறது என்று மத்திய நிதியமைச்சர் குறிப்பிட்டார். நிதித் துறையில் ஒத்துழைப்பு, புதிய வளர்ச்சி வங்கி தொடர்புடைய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். சீன நிதியமைச்சர் லான் ஃபோவானுடன் உடனான சந்திப்பில், மனித மூலதனம், ஆழமான கலாசார-பொருளாதார தொடர்புகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. உலகின் மிகப் பெரிய மற்றும் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமான இந்தியாவும் உலகின் வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை முன்னெடுப்பதில் தனித்துவமான நிலைப்பாட்டை கொண்டுள்ளன. வளரும் பொருளாதாரங்களின் குரலை எதிரொலிக்கவும், தெற்குகளின் முன்னுரிமைகள் மற்றும் விருப்பங்களுக்கு வடிவமைக்கவும் இரு நாடுகளுக்கு இடையே நெருங்கிய தொடர்பு அவசியம் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்தோனேசியா, பிரேசில்… இந்தோனேசிய துணை நிதியமைச்சர் சாம்ஸ் ஜீன்டோனோவை சந்தித்து பேசிய அவர், பஹ்ரைன் தாக்குதலுக்கு இந்தியாவுக்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தார். யுபிஐ, ரூபே பயன்பாடு, இரு தரப்பு வர்த்தகம், சுற்றுலா, நிதிச் சந்தைகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர். பிரேசில் நிதியமைச்சர் ஃபெர்னாண்டோ ஹடாட் உடனான பேச்சுவார்த்தையில், தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு குறித்தும் ஜி-20, பிரிக்ஸ், உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட பிராந்திய-சர்வதேச தளங்களில் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாகவும் அவர் விவாதித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பேற்கும் இந்தியா

இந்தியா அடுத்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது. உலகின் மக்கள் தொகையில் 49.5 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் கூட்டமைப்பு, உலகின் மொத்த உற்பத்தியில் 40 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 26 சதவீதத்தையும் பங்களிக்கிறது. பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய பத்து நாடுகளை உள்ளடக்கிய ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நிறுவன உறுப்பு நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அர்ஜென்டீனா ஆகிய புதிய உறுப்பு நாடுகள் மற்றும் 17-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்ற 17-ஆவது உச்சிமாநாடு, பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது. பிரான்ஸ் மீதான இஸ்ரேலின் தாக்குதல், காலாவதியில் நிலவும் மனிதாபிமானப் பிரச்னை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக வரிக் கொள்கைகள் போன்ற முக்கிய விவகாரங்களின் பின்னணியில் நடைபெறும் இந்த மாநாடு உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை: இந்தியாவின் கண்ணியம், அடையாளத்தின் மீதான நேரடித் தாக்குதல்களின் கோழைத்தனமான வடிவம்தான் பயங்கரவாதம். இது இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல, மனிதகுலத்துக்கே எதிரானது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைப், பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களையும் நாம் ஒரே மாதிரி பார்க்கக்கூடாது. பயங்கரவாதத்துக்குக் கண்டனம் தெரிவிப்பதில் இரட்டை வேடம் கூடாது. பயங்கரவாதத்தின் பல கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். பயங்கரவாதத்தின் நிதி விநியோகத்தின் மீது தடை விதிப்பதில் உலக நாடுகள் எந்தத் தயக்கமும் காட்டக் கூடாது. அமைதி, பாதுகாப்பான சூழலில் தான் மனிதகுலம் மேம்படும். இதை நிலைநாட்டுவதில் பிரிக்ஸ் அமைப்புக்கு முக்கியப் பங்குள்ளது. மேற்கு ஆசியா பகுதி அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மிகுந்த கவலையளிக்கிறது. மேலும், காலாவதியில் நிலவும் மனிதாபிமான நிலையும் பெரும் கவலை அளிக்கிறது என்றார் பிரதமர் மோடி.

பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் குறிக்கிறது.

இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சமநிலையான உலக ஒழுங்கை ஊக்குவிக்கிறது.

உலக மக்கள் தொகையில் 42% மற்றும் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25%-க்கு மேல் பங்கு பெறுகிறது.

முக்கிய முயற்சிகளில் புதிய வளர்ச்சி வங்கி (NDB) மற்றும் அவசர நிதி ஏற்பாடு (CRA) அடங்கும்.

வர்த்தகம், வளர்ச்சி மற்றும் மேலைநாடுகளின் சார்பை குறைப்பது எனும் நோக்கங்களைக் கொண்டுள்ளது.

சமகால இணைப்புகள்