Current Affairs Sun Jul 06 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06-07-2025

பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்

விஜயா வாசகர் வட்டத்தின் மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிப்பு

கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான கே.எஸ்.சுப்ரமணியன் மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான கே.எஸ்.சுப்ரமணியன் நினைவாக விஜயா வாசகர் வட்டம் சார்பில் ஆண்டுதோறும் இரண்டு மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன. தொழிலதிபர் பி.எல்.சுப்ரமணியன் இந்த விருதுகளுக்கான புரவலராக இருந்து வருகிறார். தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு தலா ரூ.50 ஆயிரம், பரிசுக் கேடயம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2025 -ஆம் ஆண்டுக்கான விருதுக்கு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாக்கம் செய்ததற்காக மதுரை கல்லூரி பேராசிரியர் கார்த்திகைப்பாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிமாக்கம் செய்த வகையில், கேரளத்தைச் சேர்ந்த மருத்துவப் பேராசிரியர் டி.எம்.ரகுராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘பெட்ரோ பாரமோ’ என்ற நூலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார் கார்த்திகைப்பாண்டியன், இரண்டு சிறுகதை தொகுப்புகளையும், 9 மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார். நாஞ்சில் நாடனின் ‘சூடிய பூ சூடற்க’ நூலை மலையாளத்தில் மொழிபெயர்த்ததற்காகவும், சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் பிரியாணி என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்ததற்காகவும் விருது பெறும் டி.எம்.ரகுராம், கேரள மாநிலம் திலச்சேரியைச் சேர்ந்தவர். தனியார் கல்லூரியில் மனநல மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், மலப்புரம் மாவட்டம், மஞ்சேரியில் கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவப் பணியாற்றி வருகிறார். கே.எஸ்.சுப்ரமணியன் விருது வழங்கும் விழா கோவையில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், கேரள அரசின் வருவாய்த் துறைச் செயலர் எம்.ஜி.ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.

பொருளாதாரச் செய்திகள்

மகாராஷ்டிர வங்கி கடனளிப்பு 15% உயர்வு

பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் கடனளிப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 15.36 சதவீதம் உயர்ந்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் 30-ஆம் தேதி இறுதியில் நிலுவையில் உள்ள வங்கியின் கடனளிப்பு ரூ.2.41 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு இறுதி நிலுவையோடு ஒப்பிடுகையில் இது 15.36 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் கடனளிப்பு நிலுவை ரூ.2.09 லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டு இறுதியில் ரூ.2.67 லட்சம் கோடியாக இருந்த வங்கியின் வைப்பு நிதி நிலுவை, நடப்பு நிதியாண்டின் அதே நாளில் 14.08 சதவீதம் அதிகரித்து ரூ.3.09 லட்சம் கோடியாக உள்ளது. மதிப்பீட்டுக் காலாண்டில், மொத்த வைப்பு நிதி நிலுவையில் நடப்புக் கணக்குகள் மற்றும் சேமிப்புக் கணக்குகளின் பங்களிப்பு 47.86 சதவீதத்திலிருந்து 50.07 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

யு19: சூரியவன்ஷி சாதனை

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி இரு புதிய சாதனைகள் படைத்தார். இந்த ஆட்டத்தில் 52 பந்துகளில் சதம் அடித்த அவர், யூத் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்தவராக சாதனை புரிந்தார். இதற்கு முன், 2013-இல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானின் கம்ரான் குலாம் 53 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதை சூரியவன்ஷி முறியடித்திருக்கிறார். அதேபோல், யூத் ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்த மிக இளம் வீரர் (14 வயது, 100 நாள்கள்) என்ற சாதனையையும் அவர் படைத்தார். முன்னதாக அந்த சாதனை, வங்கதேசத்தின் நஜ்முல் ஹுசைன் ஷான்டோவிடம் (14 வயது, 241 நாள்கள்) இருந்தது.

ஆசிய கால்பந்து: இந்தியா தகுதி

மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் 2-1 கோல் கணக்கில் தாய்லாந்தை சனிக்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக, தகுதிச்சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் (4) வென்று குரூப் ‘பி’-யில் முதலிடத்தை உறுதி செய்த இந்தியா, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றது. தகுதிச்சுற்று மூலமாக இந்தப் போட்டிக்கு இந்தியா தகுதிபெறுவது இதுவே முதல் முறை. 2022-க்குப் பிறகு இந்தியா இப்போட்டிக்குத் தகுதிபெற்றதும் இதுவே முதல் முறை. முன்னதாக சனிக்கிழமை ஆட்டத்தில் இந்தியாவுக்காக சஞ்சுதா பாஸ்போட் (28’, 74’) கோலடிக்க, தாய்லாந்து தரப்பில் சஞ்சாவன் ராட்டோங் (47’) ஸ்கோர் செய்தார்.

நீரஜ் சோப்ரா சாம்பியன்

ந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா, தாம் முதல் முறையாக நடத்திய நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் ஆனார். பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், நீரஜ் சோப்ரா தனது 3-வது முயற்சியில் 86.18 மீட்டரை எட்டி முதலிடத்தை உறுதி செய்தார். கென்ய வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான ஜூலியஸ் யெகோ சிறந்த முயற்சியாக 84.51 மீட்டருடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இலங்கையின் ருமேஷ் பத்திரகே 84.34 மீட்டருடன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்திய தடகள சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன், நீரஜ் சோப்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் ஆகியோர் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் 12 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் 7 பேர் சர்வதேச போட்டியாளர்களும், 5 பேர் நீரஜ் சோப்ரா உள்பட இந்தியர்களும் ஆவர். இந்தப் போட்டிக்கு உலக தடகள அமைப்பு, ‘ஏ’ அந்தஸ்து வழங்கியுள்ளது. பாரிஸ் டைமண்ட் லீக், போலந்தின் கோல்டன் ஸ்பைக் ஆகிய போட்டிகளில் சாம்பியனான நீரஜ் சோப்ராவுக்கு, நடப்பு சீசனில் இது 3-வது பட்டம்.

சர்வதேசச் செய்திகள்

இந்தியா, டிரினிடாட்-டொபேகோ இடையே 6 ஒப்பந்தங்கள்

இந்தியா மற்றும் டிரினிடாட்-டொபேகோ இடையே உள் கட்டமைப்பு, மருத்துவ தயாரிப்பு உள் ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. பிரதமர் நரேந்திர மோடி மற் றும் டிரினிடாட் - டொபேகோ நாட்டின் பிரதமர் கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசர் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. ஐந்து நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை கடந்த புதன்கிழமை தொடங்கிய பிரதமர் மோடி, முதலாவதாக ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு பயணத்தார். அங்கிருந்து, கரீபியன் தீராட்டை தீவு நாடான டிரினிடாட்-டொ பேகோ தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினுக்கு வியாழக்கிழமை வந்த அவர், இந்திய வம்சாவளியின ரின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். டிரினிடாட்-டொபேகோ பிரதமரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசருடன் பிரதமர் மோடி, வெள்ளிக் கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டார். பாதுகாப்பு, வேளாண்மை, சுகாதாரம், எண்டம மேம்பாடு, டிஜிடல் பரிவர்த்தனை தளப் பயன்பாடு, திறன் கட்டமைப்பு, இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடர்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் விரிவாக விவா தித்தனர். பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவ காரங்கள் குறித்தும், பருவநிலை மாறுபாடு, பேரிடர் மேலாண்மை, இணைய பாதுகாப்பு போன்ற சவால்கள் குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: இதைத் தொடர்ந்து, மருத்துவ தயாரிப்பு, வளர்ச்சித் திட்டங்களுக்கான மானிய உதவி, கலாசார பரிமாற்றத் திட்டம், விளையாட்டுத் துறை ஒத்துழைப்பு, டிரீனிடாட்-டொபேகோவில் உள்ள மேற்கிந்திய பல்கலைக்கழகத்தில் இந்தி ஆய்வுப் பீடத்தில் ஓராண்டுக்கு இருமுறை இந்தி பயிற்றுநருக்கான இருக் கைகளை மீண்டும் நிறுவுதல் என இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானதாக வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. ‘டிரினிடாட்-டொபேகோ வில் 6-ஆம் தலைமுறை வரையிலான இந்திய வம்சாவளியினருக்கு வெளிநாடுவாழ் இந்திய குடியு ரிமை (ஓசிஐ) அட்டை வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. பள்ளி மாணவர் களுக்கு 2,000 மடிக்கணினி நன்கொடை, 800 பேருக்கு செயற்கை கால் பொருத்துவதற்கான 50 நாட்கள் முகாம், வேளாண் துறை உபகரணங்கள் வழங்குதல், டிரினிடாட்-டொபேகோ வெளியுறவு அமைச்சக தலைமைக்க மேற்காக மில் குரியமின் சக்தி கட்டமைப்பு நிறுவனத் துடன் ஏற்பட்ட இந்திய உதவி கடன் தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

சமகால இணைப்புகள்