Current Affairs Sat Jul 05 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 05-07-2025

மாநிலச் செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்

பொதுமக்கள் குறைகளைக் கேட்டறியும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை வரு கிற ஜூலை 15-ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்ப ரத்தில் முதலவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறியும் பணி கள் தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவரது அறிவிப்பின்படி, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நகர்ப் புற மற்றும் ஊரகப் பகுதிகளில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் மொத்த 10 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டத்தின்கீழ் நடத்தப் படும் முதல் முகாம், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி யில் ஜூலை 15-ஆம் தேதி முதல் வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். திட்டத்தின் நோக்கம்: தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களும், அவர்கள் அண் டம அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை வழங்கும் பகுதி க்கே சென்று வழங்கு வது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறப் பகுதி களில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில், 6,232 முகாம்களும் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகா மக்கு வரும் மக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்கும் முகாம்களும் நடத்தப்படும். வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகளை வழங்கும் பணி வரும் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் தொடங்கப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழர் விருது’

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீனுக்கு, ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கப்படும் என்று முதலவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்கான தனது வாழ்நாளெல்லாம் உழைத்து வருபவர், கே.எம்.காதர் மொகிதீன். நிக ழாண்டுக்கான ‘தகைசால் தமிழர் விருது’ அவருக்கு வழங்கப்படுகிறது. ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் அடங்கிய விருது சுதந்திர தின விழாவின்போது முதலவர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும். ‘தகைசால் தமிழர் விருது’ கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வழங்கப் பட்டு வருகிறது. இடதுசாரி கட்சித் தலைவர்களான என். சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முதுபெரும் காங் கிரஸ் தலைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப் பட்டது.

2021 – ந. சங்கரையா (சுதந்திரப் போராளி, மார்க்சிஸ்ட் தலைவர்)

2022 – ஆர். நல்லக்கண்ணு (மூத்த சிபிஐ தலைவர், சமூக செயற்பாட்டாளர்)

2023 – கி. வீரமணி (திராவிட இயக்க தலைவர், கல்வி மற்றும் சமத்துவ போராளி)

2024 – குமரி ஆனந்தன் (மூத்த காங்கிரஸ் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ/எம்.பி, காந்தியவாதி)

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தை முதலவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக புதிய திட்டத்தை அவர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். ஊட்டச்சத்து வேளாண்மை திட்டத்தின்படி, பயறு வகைகள், சிறு தானியங்கள் பெறும் பங்களிப்புற்றன. ஊட்டச்சத்து வழங்கும் விளை பொருட்கள் உற்பத்தி செய்யும்திறனை அதிகரிப்பதும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ், 15 லட்சம் காய்கறி விதை தொகுப்புகளும், 9 லட்சம் பழச்செடி தொகுப்புகளும் வழங்கப்பட உள்ளன.

கடலூர் துறைமுகத்தை இயக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

கடலூர் துறைமுகத்தை இயக்குவதற்கு தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது. கடலூர் துறைமுகம் தனியார் பங்களிப்புடன் இயக்குவதற்கு தமிழ்நாடு கடல்சார் வாரியத்தால் இணையவழி ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டன. இதில் தகுதி உள்ள நிறுவனமாக மகதி இன்பரா சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடல்சார் வாரியம் வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அலையாத்தி காடுகளை உருவாக்கி சாதனை

“பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 16 லட்சம் அலையாத்தி தாவரங்களை நட்டு 707 ஹெக்டேர் அலையாத்தி பரப்பளவை மீட்டுள்ளோம். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 1,350 ஹெக்டேர் அளவுக்குப் புதிய அலையாத்திக் காடுகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அலையாத்தி காடுகள் என்றால் என்ன? அலையாத்தி காடுகள் (Mangrove Forests) என்பவை வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடற்கரைப் பகுதிகளில், உவர் நீர் மற்றும் கடல் நீர் கலக்கும் முகத்துவாரப் பகுதிகளில் வளரும் தனித்துவமான மரங்கள் மற்றும் புதர்களின் தொகுப்பாகும். இவை உப்பு நிறைந்த சதுப்பு நிலங்கள் மற்றும் ஆற்று முகத்துவாரங்களில் வாழும் சிறப்புத் தகவமைப்புகளைக் கொண்டுள்ளன.

முக்கிய அலையாத்தி காடுகள் உள்ள பகுதிகள்: பிச்சாவரம் (கடலூர் மாவட்டம்): இது உலகின் இரண்டாவது பெரிய அலையாத்தி காடாகவும், தெற்காசியாவில் மிக முக்கியமான அலையாத்தி சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்): இதுவும் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க அலையாத்தி காடுகளில் ஒன்றாகும், இது காவிரி டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. பாயிண்ட் கலிமேர் (நாகப்பட்டினம் மாவட்டம்): மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் (இராமநாதபுரம் மாவட்டம்): மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகள்.

பசுமை தமிழ்நாடு இயக்கம்: இத்திட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 16 லட்சம் அலையாத்தி தாவரங்கள் நடப்பட்டுள்ளன. பரப்பளவு மீட்பு: இதன் மூலம் 707 ஹெக்டேர் அலையாத்தி காடுகளின் பரப்பளவு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் பங்களிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 1,350 ஹெக்டேர் அளவுக்குப் புதிய அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசச் செய்திகள்

தலிபான் அரசுக்கு அங்கீகாரம்

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு அங்கீகாரம் அளித்துள்ள முதல் நாடாக ரஷ்யா ஆகியுள்ளது. தலிபான் ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட புதிய தூதரை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த அங்கீகாரத்தை ரஷ்ய அரசு வழங்கியுள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலிபான் அரசை அங்கீகரிப்பதன் மூலம் ரஷ்யாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பல வேறு துறைகளில் ஆக்கப்பூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படும்’ என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து வெளியேறியது மைக்ரோசாஃப்ட்

உலகின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் தனது அலுவலகத்தை மூடிவிட்டு முழுமையாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் மோசமான பொருளாதார சூழலால் தொடர்ந்து அந்நாட்டில் செயல்பட வேண்டாம் என்ற முடிவை மைக்ரோசாஃப்ட் எடுத்துள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இருந்து 9,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நீக்கப்பட இருப்பதாக இரு நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் பாகிஸ்தானில் உள்ள அலுவலகம் நிரந்தரமாக மூடப்படுகிறது. பாகிஸ்தானில் மைக்ரோசாஃப்ட் சுமார் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

பிரதமர் மோடிக்கு ட்ரினிடாட்-டொபேகோவின் உயரிய விருது

டிரினிடாட்-டெபேகோவின் உயரிய ‘தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட்-டெபேகோ’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பிரதமரின் உலகளாவிய தலைமைத்துவம், இந்திய வம்சாவளியினர் உடனான அவரது ஆழமான தொடர்புகள், கொரோனா காலகட்டத்தில் அவரது மனிதாபிமான முயற்சிகளை கௌரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டதாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி அண்மையில் கானா, டிரினிடாட்-டெபேகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு ஒரு வார கால சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். கானா பயணத்தை முடித்து, வியாழக்கிழமை டிரினிடாட்-டெபேகோவின் தலைநகர் போர்ட் ஆஃப் ஸ்பெயினை அவர் வந்தடைந்தார். அங்கு, அந்நாட்டின் பிரதமர் கீத் ரோவ்லி, வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் நேரடியாக வரவேற்றனர். 1999-ஆம் ஆண்டுக்குப் பிறகு டிரினிடாட்-டெபேகோவுக்கு வருகை தந்த முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார். தங்கும்காலத்தில், கொலம்பஸ் நகரம் மற்றும் குமாரகாடியா உள்ளிட்ட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இந்த உயரிய விருதை டிரினிடாட்-டெபேகோவின் குடியரசுத் தலைவர் கிறிஸ்டின் கேங்லூ (Christine Kangaloo) அவர்கள் வழங்கினார்.

டிரினிடாட்-டெபேகோ தலைநகர்: போர்ட் ஆஃப் ஸ்பெயின் (Port of Spain) குடியரசுத் தலைவர்: கிறிஸ்டின் கேங்லூ (Christine Kangaloo) பிரதமர்: கீத் ரோவ்லி (Keith Rowley)

அமெரிக்க வரிச் சலுகை, குடியேற்ற மசோதா நிறைவேற்றம்

அமெரிக்காவின் வரிச் சலுகை மற்றும் குடியேற்ற மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கெனவே அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த மசோதா கீழவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘ஒலிம்பிக் யுனிபைட் பில்’ என்ற வரிச் சலுகை, செலவினக் குறைப்பு மற்றும் குடியேற்ற மசோதாவை அதிபர் டிரம்ப் அரசு அறிமுகம் செய்தது. இந்த மசோதா கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை டிரம்பின் முதலாவது அதிபர் பதவிக் காலத்தில், அந்நாட்டு அரசு அளித்த 4.5 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.384 லட்சம் கோடி) வரிச் சலுகைகளை நிரந்தரமாக்குகிறது. அத்துடன் அந்நாட்டு தேசியப் பாதுகாப்பு, அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துக் குடியேறியவர்களைத் தடுத்தல், நிதி நடவடிக்கைகளில் இருந்து தவறு படும் குடிமக்களைத் தடுத்தல், அமெரிக்காவை பாதுகாப்பதன் மற்றும் மற்ற நடவடிக்கைகளுக்கு சுமார் 350 பில்லியன் டாலர் (சுமார் ரூ.30 லட்சம் கோடி) ஒரு சேமிப்பை போன்ற அச்சுறுத்தும் மசோதாவால் இடம்பெற்றுள்ளன. இந்த மசோதாவால் நாட்டில் ஒரு கோடிக்கும் மேலான குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு மருத்துவ மற்றும் பல சலுகைகள் கிடைக்கும். இவர்களுக்கு குடிநீர், உணவுப் பொருள்கள் விநியோகத்திலும் சலுகைகள் கிடைக்கும்.

இந்த மசோதா மூலம், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டவர்கள் தங்கள் தாயகத்துக்கு அனுப்பும் பணத்துக்கு 1 சதவீதம் வரி விதிக்கப்படும். முன்பு அந்தப் பணத்துக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அதிக அளவு பணம் அனுப்பியதில் இந்தியர்கள் முதலிடத்தில் இருந்தனர். அந்த ஆண்டு அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொகை 137.7 பில்லியன் டாலராகும் (சுமார் ரூ.11.77 லட்சம் கோடி). அதில் 38 பில்லியன் டாலரை (சுமார் ரூ.3.24 லட்சம் கோடி) அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அனுப்பினர். இந்த மசோதாவுக்கு ஆதரவு 218 எம்.பி.க்களும், எதிராக 214 எம்.பி.க்களும் வாக்களித்தனர். எதிராக வாக்களித்தோரின் எண்ணிக்கை 2 எம்.பி.க்கள் அதிகம்.

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய பளுதூக்குதல்: இந்தியாவுக்கு வெள்ளி

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய யூத் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பங் குனி தாரா வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டியின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, யூத் மகளிர் 44 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட அவர், ஸ்னாட்ச் பிரிவில் 60 கிலோ, கிளீன் & ஜெர்க் பிரிவில் 81 கிலோ என மொத்தமாக 141 கிலோ எடையைத் தூக்கினார். இதையடுத்து, மொத்த எடைக்காக வெள்ளிப் பதக்கமும், கிளீன் & ஜெர்க் பிரிவில் தூக்கிய எடைக்காக தனியே தங்கப் பதக்கமும் பங்குகுனி தாராவுக்குக் கிடைத்தன.

தேசியச் செய்திகள்

கடற்படையின் முதல் பெண் போர் விமானியாக லெப்டினன்ட் புனியா தேர்வு

இந்திய கடற்படையின் போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, கடற்படையின் போர் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியை அவர் பெற்றுள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய கடற்படையின் இரண்டாவது அடிப்படை போர் பயிற்சி பாத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை விமான தளம் ஐஎன்எஸ் டேகாலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் லெப்டினன்ட் அஸ்தா குமார் மற்றும் துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா ஆகியோர் கடற்படையின் துணைத் தலைமை தளபதி (விமானப் படை பிரிவு) ஜகத் பேவாலிடம் இருந்து ‘தங்கச் சிறகுகள்’ விருது பெற்றனர். இதையடுத்து, இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா தேர்வாகி சாதனை படைத்துள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

சமகால இணைப்புகள்