TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 04-07-2025
தமிழ்நாடு
ஏ . டி . பி - யின் 10 பில்லியன் டாலர் நகர்ப்புற உள்கட்டமைப்பு முன்முயற்சி ( இந்தியா )
® ஆசிய வளர்ச்சி வங்கி ( ADB) இந்தியாவில் நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த 10 பில்லியன் டாலர் மதிப்பிலான 5- ஆண்டு திட்டத்தை தொடங்கியுள்ளது . நிதி உதவியின் பயன்பாடுகள் : ® மெட்ரோ விரிவாக்கம் ® புதிய பிராந்திய விரைவு போக்குவரத்து தடங்கள் ® நகர்ப்புற சேவைகளின் மேம்பாடு ® ADB இந்த முதலீட்டில் மூன்றாம் தரப்பு மூலதனத்தை ஈர்க்க நோக்கம் கொண்டுள்ளது . முந்தைய பணிகள் : ® 22 மாநிலங்களில் 110+ நகரங்களில் ® தண்ணீர் விநியோகம் , சுகாதாரம் , வீடமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற துறைகளில் பணியாற்றியது . இந்தியாவின் ஜி . டி . பி வளர்ச்சி கணிப்பு : ® 2025-26 ல் 6.7% ® 2026-27 ல் 6.8% ® வளர்ந்து வரும் ஆசிய பொருளாதாரங்களின் சராசரியை விட ~2% அதிகம் ADB பற்றிய தகவல்கள் : ® நிறுவப்பட்டது : 1966 ® உறுப்பு நாடுகள் : 69 ( இதில் 50 ஆசிய - பசிபிக் நாடுகள் ) ® இந்தியாவில் செயல்பாடுகள் : 1986 முதல்
இந்தியாவில் பால் உற்பத்தி 2023-24
® 1998 முதல் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா தொடர்கிறது . ® உலக பால் உற்பத்தியில் 25% பங்களிப்பு . ® 2023-24 ல் இந்தியாவில் ஒரு நபரின் தினசரி சராசரி பால் நுகர்வு 471 கிராம் . ® உலக சராசரி 322 கிராம் என்பதை விட கணிசமாக அதிகம் . பால் உற்பத்தி வளர்ச்சி : ® 2014-15 ல் 146.3 மில்லியன் டன்கள் ® 2023-24 ல் 239.2 மில்லியன் டன்கள் (63.56% வளர்ச்சி ) முன்னணி மாநிலங்கள் : ® உத்தரப்பிரதேசம் ( மொத்த உற்பத்தியில் 16.21%) ® வேகமான வளர்ச்சி : மேற்கு வங்காளம் கால்நடைத் தொகை : ® உலகின் மிகப்பெரிய கால்நடைத் தொகை (536.76 மில்லியன் ) பால் தொழிலின் முக்கியத்துவம் : ® இந்தியாவின் மிகப்பெரிய வேளாண் பொருள் ® தேசிய பொருளாதாரத்தில் 5% பங்களிப்பு ® 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நேரடி வேலைவாய்ப்பு
உலக சுற்றுசூழல் தினம் 2025 - இந்தியாவின் முக்கிய முன்முயற்சிகள்
® தேதி : 5 ஜூன் 2025 ® கருப்பொருள் : ” ஒரு நாடு , ஒரு பணி : நெகிழி மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் ” ® பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் ஒரு மரக்கன்று நடுவதன் மூலம் ’ ஒரு பேட் மா கே நாம் ’ பிரச்சாரத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கினார் . ® இந்தியா முழுவதும் 10 கோடி மரக்கன்றுகள் நடுவதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம் . ® தேசிய நெகிழி கழிவு அறிக்கை மையம் தொடங்கப்பட்டது . ® பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கம் . ® அரசு முன்முயற்சிகள் மற்றும் ஒரு முறை பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கான சூழல் நட்பு மாற்றுகள் குறித்த வெளியீடுகள் வெளியிடப்பட்டன . ® தேசிய நெகிழி மாசுபாட்டைக் குறைப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டது . ® புலிகள் காப்பகங்கள் , நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள் , அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் . ® சூழல் நட்பு மாற்றுகள் கண்காட்சி நடைபெற்றது . ® 150- க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள் மற்றும் மறுசுழற்சி நிறுவனங்களின் புதுமைகள் காட்சிப்படுத்தப்பட்டன . ® நெகிழி மாசுபாட்டை எதிர்கொள்வதற்கான முக்கிய அம்சங்கள் : ® திட்டம் LiFE ( வாழ்க்கைத் தரத்திற்கான வாழ்க்கை முறை ) ® உற்பத்தியாளர் பொறுப்புரிமை ( EPR) வழிகாட்டுதல்கள் ® புதுமை , நடத்தை மாற்றம் மற்றும் கூட்டு நடவடிக்கை
இந்தியாவின் சுற்றுசூழல் புள்ளிவிவரங்கள் 2025: சிஎஸ்இ வெளியிட்ட அறிக்கை
® அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் ( CSE ) இந்தியாவின் சுற்றுசூழல் நிலை குறித்த புள்ளிவிவர அறிக்கை 2025 ஐ வெளியிட்டுள்ளது . ® முக்கிய கண்டறிவுகள் : ® 36 மாநிலங்கள் மற்றும் யூடிகளை 48 குறிகாட்டிகள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது மதிப்பீட்டிற்கான நான்கு தலைப்புகள் : ® சுற்றுசூழல் மேலாண்மை ® வேளாண்மை ® பொது சுகாதாரம் ® மனித மேம்பாடு மாநில செயல்திறன் : ® சுற்றுசூழல் மேலாண்மையில் ஆந்திரப் பிரதேசம் முதலிடம் ® பொது சுகாதாரத்தில் கோவா முன்னணி ® சிக்கிம் மற்றொரு பிரிவில் சிறப்பாக செயல்பட்டுள்ளது ® எந்த மாநிலமும் அனைத்து துறைகளிலும் சீரான செயல்திறன் காட்டவில்லை குறைந்த தரவரிசை மாநிலங்கள் : ® உத்தரப் பிரதேசம் ® மகாராஷ்டிரா ® பீகார் ® மேற்கு வங்காளம் சுற்றுசூழல் பிரச்சினைகள் : ® இந்தியாவின் பசுமை இல்ல வாயு உமிழ்வு உலகளாவிய மொத்த உமிழ்வில் 7.8% ஆக உள்ளது ® 1970 க்கு பிறகு இதுவே அதிகபட்ச பங்கு
இதரச் செய்திகள்
குல்லாய் குரங்குகளின் கருத்தடைத் திட்டம்
• கேரள மாநிலத்தின் வனத்துறையானது, குல்லாய் குரங்குகளின் அதிகரித்து வரும் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக என, குல்லாய் குரங்கு (போனட் மக்காக்) குரங்குகளைப் பெருமளவில் கருத்தடை செய்யும் பணியைத் தொடங்க உள்ளது. • வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள பயிர்கள் சேதமடைவதைவயும் விவசாயிகளுடன் ஏற்படும் மோதலையும் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். • இந்தக் குல்லாய் குரங்கு ஆனது, 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழான I பட்டியலில் உள்ள இனமாக இருப்பதால், மாநில அரசானது இதற்காக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். • இந்த முயற்சியானது, மனித-வனவிலங்கு மோதலைச் சமாளிப்பதற்கான 10 அம்சத் திட்டமான ‘குல்லாய் குரங்குகளின் கருத்தடைத் திட்டத்தின்’ ஒரு பகுதியாகும். • குல்லாய் குரங்கு ஆனது தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது மற்றும் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் ‘எளிதில் பாதிக்கப்படக் கூடிய’ ஒரு இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் செய்திகள்
கழிவுகளிலிருந்து ஆற்றலை உருவாக்கும் விதிகளில் திருத்தம் - MNRE
• புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) ஆனது, கழிவுகளிலிருந்து ஆற்றலை உருவாக்குவது (WtE) குறித்த அதன் வழிகாட்டுதல்களைத் திருத்தியுள்ளது. • திட்டச் செயல்திறனை மேம்படுத்தவும் நிதி உதவியை எளிதாக்கவும் தேசிய உயிரி ஆற்றல் திட்டத்தின் கீழ் இது வெளியிடப் பட்டுள்ளது. • பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்கள் (MSME), அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG), உயிரி எரிவாயு மற்றும் கழிவுகளிலிருந்து மின்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த ஆலைகளை உருவாக்குவதை எளிதாக்குவதே இதன் நோக்கமாகும்.
உயிரிப் பொருட்கள் தொடர்பான விதிகளை தளர்வு- MNRE
• புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் (MNRE) ஆனது, 2021–26 ஆம் ஆண்டிற்கான தேசிய உயிரி எரிசக்தித் திட்டத்தின் (NBP) கீழான அதன் வழி காட்டுதல்களை புதுப்பித்துள்ளது. • இது தூய்மையான ஆற்றலை ஊக்குவிப்பதற்கும் வணிகச் செயல்முறைகளை மிகவும் நன்கு எளிதாக்குவதற்குமானதாகும். • இந்தப் புதிய விதிகள் ஆனது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் (MSME) உயிரி எரிசக்தி துறையில் எளிதாக இணைய உதவும். • செயல்திறன் அடிப்படையில் மத்திய நிதி உதவி (CFA) ஆனது வழங்கப்படும். • 80 சதவீதத்திற்கு மேலான செயல்திறன் கொண்டு இயங்கும் ஆலைகளுக்கு முழு நிதி ஆதரவும், அதற்குக் கீழே உள்ள ஆலைகளுக்குப் பகுதியளவு நிதி ஆதரவும் வழங்கப் படும். • டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் தேசியத் தலைநகரப் பிராந்தியம் (NCR) போன்ற சில பகுதிகளில் உள்ள உயிரி எரிபொருட்கள் உற்பத்தியாளர்கள் MNRE அல்லது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து (CPCB) இவற்றுள் எது அதிகப் பலன் வழங்குகிறதோ அதனிடமிருந்து நிதி ஆதரவைப் பெறுவதை தேர்வு செய்யலாம். • இந்த சில மாற்றங்களானது பயிர்த் தாளடி எரிப்பதைக் குறைத்தல், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், தூய்மையான ஆற்றலை ஊக்குவித்தல் மற்றும் வணிகங்கள் உயிரி எரிசக்தித் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மரம் வெட்டுவதற்கான புதிய விதிகள்
• மரப் பொருட்கள் அடிப்படையிலான வணிகங்கள் வளர உதவும் வகையில் வேளாண் நிலங்களில் மரங்களை வெட்டுவதற்கான சில புதிய விதிகளை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. • இந்த விதிகள் ஆனது மர வளர்ப்பை (வேளாண் காடுகள்) ஆதரிக்கின்றன மற்றும் அதன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உள்ளூர் மர உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. • இது இறக்குமதி செய்யப்பட்ட மரங்களின் மீதான தேவையைக் குறைக்கவும், அம்மரப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும். • வேளாண் காடுகள் வளர்ப்பை ஊக்குவித்தல் மற்றும் மரப் பொருட்கள் சார்ந்த சில எளிதான விதிகளை உருவாக்குவதற்கு மாநில அளவிலான ஒரு குழு மாநிலங்களுக்கு வழிகாட்டும். • விவசாயிகள் மற்றும் வணிகர்கள் நிலம், மர இனங்கள் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யப் பட்ட காலம் போன்ற விவரங்களுடன் தங்கள் தோட்ட வளர்ப்பு குறித்து தேசிய மர மேலாண்மை அமைப்பு (NTMS) தளத்தில் பதிவு செய்ய வேண்டும். • இந்த முன்னெடுப்பானது வேளாண் வருமானத்தை இரட்டிப்பாக்குவதையும் நிலத்தின் நிலையான பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கரியாச்சல்லி தீவு
• தூத்துக்குடி அருகே மன்னார் வளைகுடாவில் உள்ள கரியாச்சல்லி தீவை மீட்டெடுக்க தமிழக அரசு 50 கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது. • கடல் மட்ட உயர்வு மற்றும் பவளப்பாறை சேதங்கள் காரணமாக இந்தத் தீவு அதன் பரப்பில் 71 சதவீதத்திற்கும் அதிகமாக இழந்துள்ளது. • 1969 ஆம் ஆண்டில் சுமார் 20.85 ஹெக்டேராக இருந்த அதன் பரப்பு, 2018 ஆம் ஆண்டில் தற்போது 5.97 ஹெக்டேர் ஆக மட்டுமே இருந்தது. • இது புயல் மற்றும் சுனாமிகளுக்கு எதிராக ஒரு இயற்கையான கேடயமாகச் செயல் படுகிறது என்பதோடு குறிப்பாக 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது இந்த முக்கிய ஒரு நடவடிக்கையானது அறியப் பட்டது. • இந்தத் திட்டமானது TN SHORE (தமிழ்நாடு அரசின் கடல் வளங்களை மிக நிலையான முறையில் பயன்படுத்துதல்) திட்டத்தின் ஒரு பகுதியாகும். • இந்தத் தீவின் கடற்கரையைப் பாதுகாக்கவும் கடல்வாழ் உயிரினங்களை மிக நன்கு மீளுருவாக்கம் செய்யவும் அங்கு சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினால் வடிவமைக்கப்பட்ட 8,500 செயற்கையான பவளப்பாறைத் தொகுதிகள் நிலை நிறுத்தப்பட உள்ளன. • இந்த ஒரு முயற்சியானது மீன்பிடி வாழ்வாதாரம் மற்றும் பருவநிலை மீள்தன்மையை ஆதரிப்பத்தோடு சேர்த்து, 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தத் தீவு மறைந்து போவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
ISS நிலையத்தில் பரிசோதனை
• குழுத் தலைவர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) அறிவியல் பரிசோதனையை மேற்கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையினைப் பெற்று உள்ளார். • அவரது முதலாவது ஆய்வானது, நீண்ட கால விண்வெளிப் பயணங்களில் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ள நுண் ஈர்ப்பு விசை காரணமான “மயோஜெனிசிஸ்” எனப்படும் தசை திசுவாக்க செயல்முறையில் தசை இழப்பு குறித்து ஆராய்கிறது. • இந்தக் கண்டுபிடிப்புகள் ஆனது, எதிர்காலத்தில் நிலவு/செவ்வாய்களுக்கு பயணம் மேற்கொள்ளும் எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு உதவக் கூடும் என்பதோடு மேலும் பூமியில் தசை நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் பயனளிக்கும். • விண்வெளியில் மனித மூளையில் உள்ள ரத்த ஓட்டத்தையும் அந்தக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்ற ஒரு நிலையில் இது பூமியில் பக்கவாதம் மற்றும் இரத்த அழுத்தச் சிகிச்சைகளுக்கு உதவும்.
உலகின் முதல் 2D சிலிக்கான் அல்லாத கணினி
• அமெரிக்காவின் பென் ஸ்டேட் ரிசர்ச் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் சிலிக்கான் இல்லாமல், இரு பரிமாண (2D) பொருட்களால் முழுமையாக தயாரிக்கப்பட்ட முதல் கணினியை உருவாக்கியுள்ளனர். • இந்தக் கண்டுபிடிப்பு ஆனது எதிர்காலத்தில் குறைந்த மின்னாற்றல் நுகரும், உயர் செயல்திறன் கொண்ட கணினிகளை உருவாக்க வழிவகுக்கும். • இந்த கணினியானது CMOS (நிரப்பு உலோக-ஆக்சைடு குறைக்கடத்தி) என்ற தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. • இது இரண்டு வெவ்வேறு 2D பொருட்களைப் பயன்படுத்துகிறது: o p-வகை டிரான்சிஸ்டர் எனும் திரிதடையங்களுக்கான டங்ஸ்டன் டைசெலனைடு o n-வகை திரிதடையங்களுக்கான மாலிப்டினம் டைசல்பைடு
பொருளாதாரச் செய்திகள்
2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவின் பண வரவில் அதிகரிப்பு
• 2024-25 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் 135.46 பில்லியன் டாலர் பணத்தை தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பியுள்ளதை அடுத்து இந்தியாவின் பண வரவில் இதுவரை இல்லாத அளவிலான வரவு பதிவாகியுள்ளது என்பதோடு இது கடந்த ஆண்டை விட 14% அதிகமாகும். • 2024 ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் சுமார் 129.4 பில்லியன் டாலரை இந்தியாவிற்கு அனுப்பினர் என்பதோடு இது அனைத்து நாடுகளை விட மிக அதிகமாகும். • இந்தியாவானது பண வரவு சார்ந்த வருவாயில் மெக்ஸிகோ (68 பில்லியன் டாலர்) மற்றும் சீனா (48 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகளை விட முன்னணியில் உள்ளது. • 1990 ஆம் ஆண்டில் சுமார் 6.6 மில்லியனாக இருந்த வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் சுமார் 18.5 மில்லியனாக அதிகரித்தது. • புலம் பெயர்ந்த இந்தியர்களில்/இந்திய குடியேறிகளில் சுமார் பாதி பேர் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர். • அமெரிக்க நாட்டின் வரைவு மசோதாவானது இந்தியாவினைச் சேர்ந்த தொழிற்துறை நிபுணர்களுக்கான பணம் அனுப்புதல் மீதான வரியை 5 சதவீதத்திலிருந்து 1% ஆகக் குறைத்து, இந்தியாவிற்கான பணப் பரிமாற்றங்களை எளிதாக்கியது.
சர்வதேசச் செய்திகள்
புதிய உலகளாவிய வரி விதி
• G7 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் ஒரு புதிய “side-by-side” (அந்த நாட்டின் சொந்த வரி அமைப்பு மற்றும் உலகளாவிய வரி அமைப்பினையும் ஒரே நேரத்தில் பின்பற்றல்) என்ற உலகளாவிய வரி முறையை ஒப்புக் கொண்டுள்ளன. • அமெரிக்க மற்றும் ஐக்கியப் பேரரசு நிறுவனங்களுக்கு கூடுதலான ஒரு உலகளாவிய குறைந்தபட்ச வரியிலிருந்து (15%) விலக்கு அளிக்கப்படும். • அமெரிக்க நிறுவனங்கள் தற்போது உள்நாட்டு மற்றும் சர்வதேச இலாபங்களுக்கு அமெரிக்காவில் மட்டுமே வரி செலுத்தும். • இந்த ஒரு ஒப்பந்தமானது தற்போதுள்ள அமெரிக்க உள்நாட்டுக் குறைந்தபட்ச வரிச் சட்டங்களை அங்கீகரிக்கிறது. • இந்த நடவடிக்கையானது பழைய OECD உலகளாவிய வரித் திட்டத்தின் கீழ் top-up வரி என்ற குறைந்தபட்ச வரி விகிதம் மற்றும் மொத்த வருவாய் மீதான சராசரி வரி விகிதத்திற்கு இடையிலான ஒரு வித்தியாசம் அடிப்படையிலான வரி விதிகளுக்கு ஒரு மாற்றாக உள்ளது. • இந்த ஒப்பந்தத்தினை இறுதி செய்வதற்காக உதவிய சர்ச்சைக்குரிய வரி விதியை (பிரிவு 899) அமெரிக்கா கை விட்டது.
தேசியச் செய்திகள்
SPREE திட்டம்
• சில பதிவு செய்யப்படாத முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களை ESI சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) ஆனது SPREE திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. • SPREE என்பது முதலாளிகள்/பணியாளர்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான முக்கியத் திட்டத்தைக் குறிக்கிறது. • புதுப்பிக்கப்பட்ட SPREE திட்டம் ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூலை 01 முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை செயலில் இருக்கும். • தற்காலிக, முறைசாரா மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தானாக முன்வந்து பதிவு செய்வதற்கான ஒற்றை வாய்ப்பை இது வழங்குகிறது. • பதிவு செய்பவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பதிவு தேதி அல்லது உண்மையில் அவர்கள் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து காப்பீடு பெறுவார்கள். • இது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 01 முதல் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் 2025 ஆம் ஆண்டு நிலுவை வரித் தாக்கல்களையும் செலுத்துவதற்கான ஒரு அவகாசத் திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியது. • இது முதலாளிகள் பழைய வழக்குகளைத் தீர்த்து வைக்கவும் பல சட்ட சிக்கல்களைக் குறைக்கவும் வழி வகுக்கிறது. • முதல் முறையாக, நிலுவை வரி செலுத்தல் கால அவகாசச் சட்டமானது வட்டி மற்றும் இழப்பீடுகளுடன் கூடிய வழக்குகளை உள்ளடக்கியுள்ளது என்பதோடு அந்த நிலுவைத் தொகைகள் செலுத்தப்பட்டால் நீதிமன்ற வழக்குகளைத் திரும்பப் பெறச் செய்யவும் அனுமதிக்கிறது. • தாமதமான கொடுப்பனவுகளுக்கு ஆண்டிற்கு சுமார் 25% வரை என்ற பழைய அபராத விகிதங்களுக்கு மாற்றாக ஒரு புதிய விதியானது சுமார் 1% மாதாந்திர அபராதத்தை நிர்ணயிக்கிறது. • ESIC ஆனது அதன் மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய ஆயுஷ் கொள்கையையும் அங்கீகரித்தது.
இந்தியாவில் எந்தத் தடுப்பூசியையும் பெறாத குழந்தைகள் விகிதம் குறைவு
• இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் 0.11% ஆக இருந்த எந்தத் தடுப்பூசியையும் பெறாத குழந்தைகளின் பங்கு ஆனது 2024 ஆம் ஆண்டில் 0.06% ஆகக் குறைந்தது. • எந்தத் தடுப்பூசியையும் பெறாத குழந்தைகள் என்பவர் முதலாவது DTP தடுப்பூசிகளை (டிப்தீரியா - டெட்டனஸ்-பெர்டுசிஸ் — தொண்டை அழற்சி நோய் - இரணஜன்னி கக்குவான் இருமல் ஆகிய நோய்க்கான தடுப்பூசி) பெறாத குழந்தைகள் ஆவர். • குழந்தை மற்றும் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு இறப்பு குறித்த 2024 ஆம் ஆண்டு புதிய தகவல் பதிவுகளில், குழந்தை ஆரோக்கியத்தில் இந்தியா ஓர் பெரும் உலகளாவிய எடுத்துக்காட்டாக இருப்பதாக ஐ.நா. சபையின் பல்வேறு அறிக்கைகள் பாராட்டின. • 2023 ஆம் ஆண்டு லான்செட் அறிக்கையில் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் கொண்ட (சுமார் 1.44 மில்லியன்) இரண்டாவது நாடாக இந்தியாவை பட்டியலிட்ட பிறகு இது பதிவாகியுள்ளது. • அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 26 மில்லியன் குழந்தைகளுக்கும் 29 மில்லியன் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இலவச தடுப்பூசிகளை வழங்குகிறது. • 11 மாநிலங்களில் உள்ள சுமார் 143 மாவட்டங்களில், தடுப்பூசி போடுவதற்கு மிகவும் சிரமப்படும் மற்றும் தயங்கும் சமூகங்களில் உள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசிகளை கொண்டு சேர்ப்பதற்காக எந்தத் தடுப்பூசியையும் பெறாத குழந்தைகளுக்காக ஒரு சிறப்புத் தடுப்பூசி வழங்கீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. • உலக சுகாதார அமைப்பு மற்றும் UNICEF (2023) ஆகியவற்றின் படி, இந்தியாவின் DTP-1 தடுப்பூசி வழங்கீட்டின் பரவல் 93% ஆக இருந்தது என்பதோடு இது நைஜீரியாவின் 70 சதவீதத்தினை விட அதிகமாகும். • DTP-1 முதல் DTP-3 வரையிலான தடுப்பூசிப் பெறுதலில் உள்ள இடைநிற்றல் விகிதம் 7 சதவீதத்திலிருந்து (2013) 2% (2023) ஆக குறைந்து மேம்பட்டது. • தட்டம்மை தடுப்பூசி வழங்கீட்டுப் பரவலும் 2013 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 83 சதவீதத்திலிருந்து 93% ஆக உயர்ந்தது.
தமிழ்நாட்டுச் செய்திகள்
அவசரநிலை நடைமுறையில் இருந்த போது ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை
• 1975-76 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநிலத்தின் கருத்தடை அறுவை சிகிச்சை பதிவு என்பது இந்திய அரசு நிர்ணயித்த கருத்தடை இலக்குகளை விட அதிகமாக இருந்தது. • 1975-76 ஆம் ஆண்டில் 2,11,300 கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற இலக்கிற்கு மாறாக 2,70,691 கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டன. • 1976-77 ஆம் ஆண்டில், ஐந்து லட்சம் என்ற இலக்கிற்கு மாறாக சுமார் 5,69,756 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. • 1976-77 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசு நிர்ணயித்த ஐந்து லட்சம் இலக்கை மாநில அரசு ஆறு லட்சமாக உயர்த்தியது.
‘வெற்றி நிச்சயம்’ திட்டம்
• சென்னையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் 3 ஆண்டு கால நிறைவின் மீதான ஒரு கொண்டாட்டத்துடன் சேர்த்துத் தமிழக முதல்வர் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தையும் தொடங்கி வைத்தார். • இந்தத் திட்டமானது, பள்ளி/கல்லூரி படிப்பினை இடை நிறுத்திய 18 முதல் 35 வயது உடைய இளையோர்களுக்கு இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கும். • தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட மையங்கள் மூலம் 38 துறைகளில் 165 படிப்புகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. • பயிற்சி செலவினங்களை அரசாங்கமே வழங்கும் மற்றும் தகுதியான வேலைவாய்ப்பு ஆர்வலர்களுக்கு 12,000 ரூபாய் ஊக்கத் தொகையையும் அரசு வழங்கும். • தொலைதூர இடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச விடுதி மற்றும் உணவு வசதி வழங்கப் படும். • இது பல்வேறு விளிம்பு நிலைச் சமூகங்கள் - பழங்குடியின இளையோர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினர், இலங்கைத் தமிழர்கள் மற்றும் பல பிரிவினர் மீது கவனம் செலுத்துகிறது. • சர்வதேச வேலை வாய்ப்புகளுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு மொழிகளில் (எ.கா., ஜெர்மன்) சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். • “ஸ்கில் வாலட்” எனும் புதிய செயலியானது மாணவர்கள் தங்களுக்கான படிப்புகளைத் தேர்ந்தெடுத்து வேலைகளுக்கு எளிதாக விண்ணப்பிக்க உதவுகிறது.