Current Affairs Thu Jul 03 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 03-07-2025

சுற்றுச்சூழல்

புதிய பிகோனியா இனங்கள்

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிகோனியாவின் புதிய இனமான பிகோனியா நைஷியோரம் கண்டறியப்பட்டுள்ளது. வனங்களின் வளங்காப்பில் அவற்றின் முக்கியப் பங்கிற்காக என்று இதற்கு நிஷி சமூகத்தின் பெயரிடப்பட்டது. இது தனித்துவமான சிவப்பு, சதைப்பற்றுள்ள, விளிம்பு (லேசினேட்) ஓர இலைக்காம்பு இதழ்களைக் கொண்டுள்ளது. அதன் குழுவின் ஆசிய பிகோனியாக்களில் இதற்கு முன் கண்டிராத இந்த அம்சங்கள் உள்ளன. இந்த இனமானது அதன் மிகவும் நெருங்கிய ஒரு உயிரினமான பிகோனியா கெகர்மோனியன்ஜென்சிஸ் இனத்திலிருந்து உருவவியல் ரீதியாக வேறுபட்டது. இந்த தாவரமானது தற்போது IUCN அமைப்பின் வழிகாட்டுதல்களின் கீழ் “போதுமான தரவு இல்லாத இனமாக” பட்டியலிடப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

தொலைதூரப் புறக்கோள் TWA 7b

TWA 7 எனப்படும் புதிதாக உருவான ஒரு இளம் நட்சத்திரத்தினைச் சுற்றி வரும் TWA 7b என்ற புதிய புறக்கோளினை நாசா கண்டறிந்துள்ளது. ஒளிர்வு மிகு பொருட்களின் பொலிவினைக் குறைத்து ஒளிர்வு குறைந்த பொருட்களை படம் பிடித்தல் எனப்படும் நுட்பம் மூலம் வெப்ப சமிக்ஞைகளைப் பயன்படுத்தி இந்த கோள் ஆனது கண்டறியப்பட்டது. TWA 7b ஆனது புவியிலிருந்து சுமார் 111 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது சனியைப் போன்ற நிறை கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பதோடு இது வியாழனின் நிறையி (சுமார் 100 பூமி நிறை) விட 0.3 மடங்கு அதிகமாகும். இந்த புறக் கோளானது, புவியானது சூரியனிலிருந்து உள்ள தொலைவினை விட, அதன் நட்சத்திரத்திலிருந்து தோராயமாக 50 மடங்கு தொலைவில் உள்ளது. ஓர் இளம் மற்றும் குளிர்ந்த கோளான இதனை வழக்கமான முறைகளால் கண்டறிவது கடினமாகும்.

SatSure மற்றும் துருவா ஸ்பேஸ் குழு

பெங்களூருவைச் சேர்ந்த புவிக் கண்காணிப்பு (EO) புத்தொழில் நிறுவனமான SatSure மற்றும் ஐதராபாத்தில் உள்ள துருவா ஸ்பேஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து புவிக் கண்காணிப்புச் சேவை (EOaaS) தீர்வுகளை வழங்குவதற்காக கூட்டு சேர்ந்துள்ளன. பாதுகாப்பு, வேளாண்மை, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆகியவற்றில் வணிக பயன்பாட்டிற்கான விண்வெளி அடிப்படையிலான தீர்வுகளை அந்த நிறுவனங்கள் உருவாக்க உள்ளன. இதில் SatSure நிறுவனத்தின் துணை நிறுவனமான KaleidEO, EO சாதனங்கள் மற்றும் பகுப்பாய்வுத் தளங்களை வழங்கும். துருவா ஸ்பேஸ் நிறுவனமானது, சிறிய செயற்கைக் கோள்கள், ஏவுதல்கள் மற்றும் நிலக் கட்டுப்பாட்டு நிலையத்தின் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவத்தை வழங்கும். இரு நிறுவனங்களும் இணைந்து ஒன்றாக, விரைவான பணி நிறைவுக் காலக் கெடுவுடன் நம்பகமான மற்றும் விரைவான முதன்மை EO சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வயதாகும் தன்மையினை விரைவுபடுத்தும் அதீத வெப்பம்

ஒரு புதிய ஆராய்ச்சியானது, தீவிர வெப்பம் என்பது உடலின் மூலக்கூறு நிலைகளில் வயதாகும் தன்மையினை எந்த வித அறிகுறியுமின்றி நன்கு விரைவுபடுத்தக் கூடும் என்பதைக் காட்டுகிறது. அறிவியலாளர்கள் வெப்பத்தின் தாக்கத்தினைப் புகைபிடித்தல் மற்றும் அதிக மது அருந்துதல் போன்ற முக்கிய ஆபத்து காரணிகளுடன் ஒப்பிட்டனர். இந்த ஆய்வு ஆனது டிஎன்ஏவில் ஏற்படும் சில மாற்றங்களை அளவிடும் கருவிகள் “எபிஜெனெடிக் கடிகாரங்கள் எனும் வயது அளவிடல் கருவிகளை” பயன்படுத்தியது. இந்தக் கடிகாரங்கள் ஆனது டிஎன்ஏ மெத்திலேற்றத்தினை கண்காணிக்கின்றன. இது சுற்றுச்சூழலால் பாதிக்கப் படுகின்ற, மரபணுக்களை இயக்கவோ அல்லது அணைக்கவோ கூடிய ஒரு செயல்முறையாகும். ஆண்டிற்கு 140க்கும் மேற்பட்ட வெப்பமான நாட்கள் (90°F அல்லது 32.3 செல்சியசுக்கு மேல்) உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களில் 14 மாதங்கள் வரை உயிரியல் ரீதியாக கூடுதல் வயதானதாக பதிவானது. வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார வேறுபாடுகளைக் கருத்தில் கொண்ட பிறகும் இந்த வயது அதிகரிப்பு விளைவு நீடித்தது. விலங்குகளில் வெப்பம் ஆனது டிஎன்ஏவில் நீண்டகால மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டுகின்றன என்பத்டு இது மிகவும் தவறான தகவமைப்பு கொண்ட எபிஜெனெடிக் நினைவகம் என்று அழைக்கப்படுகிறது. பருவநிலை மாற்றம் ஆனது விரைவான உயிரியல் வயது அதிகரிப்பு மூலம் எவ்வாறு நீண்டகால ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது குறித்தக் கவலைகளை இந்த கண்டுபிடிப்புகள் எழுப்புகின்றன.

தேசிய செய்திகள்

GoIStats செயலி

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSO) ஆனது 2025 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் தினத்தன்று GoIStats கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலியானது அனைத்துக் குடிமக்களும் அதிகாரப் பூர்வ புள்ளி விவரங்களை எளிதாக அணுகவும், புரிந்து கொள்ளவும், பயன்படுத்தவும் உதவும் ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவை குறித்த சில காட்சிகளுடன் கூடிய “முக்கியப் போக்குகள்” அடங்கிய ஒரு முகப்பு பக்கத்தினைக் கொண்டு ள்ளது. NSO அலுவலகத்தின் அறிக்கைப் பட்டியலின் அடிப்படையில் பயனர்கள் ஒரு நிகழ்நேர அடிப்படையில் புதியத் தகவல்களைப் பெறுகிறார்கள்.

இந்திய எரிசக்தி தரவுக் கோப்பு

மின்சார அமைச்சகமானது, 2025 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று இந்திய எரிசக்தி தரவுக் கோப்பினை (IES) உருவாக்குவதற்காக வேண்டி ஒரு பணிக் குழுவைத் தொடங்கியது. IES என்பது எரிசக்தித் துறைக்கு ஒரு மிகப் பாதுகாப்பான, ஒருங்கிணைந்த எண்ணிம அமைப்பாக இருக்கும். இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, மின் விநியோக திறன் மற்றும் நுகர்வோர் சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பானது நுகர்வோர், எரிசக்தி கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு பரிவர்த்தனைகளுக்கான ஒரு தனித்துவமான அடையாளத்தினை உள்ளடக்கியதாக இருக்கும். இது பல்வேறு தளங்களில் நிகழ்நேர, ஒப்புதல் அடிப்படையிலான தரவுப் பகிர்வை அனுமதிக்கிறது. இது மும்பை, குஜராத் மற்றும் டெல்லியில் உள்ள மின் விநியோக நிறுவனங்களுடன் (DISCOM) இணைந்து 12 மாத காலத்தில் சோதனைத் திட்டமாக செயல்படுத்தப்படும்.

வரலாறு மற்றும் கலாச்சாரம்

பண்டைய கீழடி சமூகத்தினரின் முக வடிவமைப்பு

தென்னிந்தியாவில் மிக முதன்முறையாக, சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கண்டு எடுக்கப் பட்ட சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடுகளிலிருந்து அந்தப் பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் முகங்களை ஆராய்ச்சியாளர்கள் மீளுருவாக்கி உள்ளனர். இந்த முயற்சியை மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மற்றும் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை முன்னெடுத்து மேற்கொண்டன. கீழடியில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள கொந்தகை புதைவிடத்தில் இருந்து மண்டை ஓடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. மண்டை ஓடுகளின் மேல் பகுதிகளை எண்ணிம முறையில் மீளுருவாக்குவதற்காக வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவு (CT ஸ்கேன்கள்) என்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டன; கிடைக்கப்பெறாத தாடை எலும்புகள் நிலையான பற்சீரமைப்பு முறைகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டன. அந்தச் சமூகத்தினரின் முக அம்சங்கள் தென்னிந்திய, மேற்கு யூரேசிய மற்றும் ஆஸ்ட்ரோ-ஆசிய மனிதர்களின் பண்புகளைப் பிரதிபலிக்கின்றன. நவீன தென்னிந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட திசுக்களின் தடிமன் குறித்த தரவு ஆனது தசைகள், தோல் மற்றும் கொழுப்பு படிவு அடுக்குகளை மீளுருவாக்க உதவியது. தோல், முடி மற்றும் கண் வண்ணங்களை மதிப்பிடுவதற்கு ஒரு புகைப்பட தரவுத்தளம் பயன்படுத்தப்பட்டது. மரபணு வம்சாவளி மற்றும் புலம்பெயர்வு முறைகளைக் கண்டறிவதற்காக வேண்டி புதைவிடங்களிலிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ ஆனது தற்போது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கீழடியின் காலவரிசையானது, கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலாகும். மேலும் இந்தக் காலவரிசையானது தமிழ்நாடு தொல்பொருள் துறைக்கும் இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறைக்கும் (ASI) இடையே விவாதத்திற்குட்பட்டதாக உள்ளது.

தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் – ஜூன் 2025

மேட்டூர் அணையானது (ஸ்டான்லி நீர்த்தேக்கம்) 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மீண்டும் அதன் முழு மட்டமான 120 அடியை எட்டியது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அணையானது அதன் முழு அளவை எட்டுவது இது இரண்டாவது முறையாகும். மேலும், அதன் 92 ஆண்டு கால வரலாற்றில் அணை முழு கொள்ளளவை எட்டுவது இது 44 வது முறையாகும். ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை கடைசியாக முழு அளவை எட்டியது என்பது 68 ஆண்டுகளுக்கு முன்னதாக 1957 ஆம் ஆண்டில் தான் ஆகும்.

திருநர்கள் மற்றும் ஊடு பாலினத்தவர்களுக்கான கல்வித் திட்டங்கள்

தமிழ்நாடு அரசானது திருநர்கள் மற்றும் ஊடு பாலினத்தவர்களை உள்ளடக்கும் வகையில் பின்வரும் இரண்டு கல்வி ஆதரவுத் திட்டங்களை அந்தப் பிரிவினருக்கு விரிவுபடுத்தியுள்ளது. o புதுமைப் பெண் திட்டம் o தமிழ்ப் புதல்வன் திட்டம் இரண்டு திட்டங்களும் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் (6 முதல் 12 ஆம் வகுப்பு) உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதத்திற்கு 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்குகின்றன. தற்போது, திருநர்கள் மற்றும் ஊடு பாலினத்தவர் ஆகிய இரு பிரிவினரும் அந்த இரண்டு திட்டங்களின் கீழ் பலன் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டங்களின் கீழ் பயன் பெற திருநர்கள் மற்றும் ஊடுபாலினத்தவர்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தமிழ்நாடு திருநர்கள் நல வாரியத்திடமிருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். உயர்கல்விக்காக மிகவும் சமமான ஒரு அணுகலை ஊக்குவிப்பதையும், விளிம்புநிலை சமூகங்களை ஆதரிப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாக உள்ளது.

முதல்வரின் காலை உணவு திட்டம் - 2025 மேம்பாடு

தமிழக அரசானது, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த உள்ளது. இதன் மூலம், இந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது. K. காமராஜின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஜூலை 15 ஆம் தேதியன்று இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் தொடங்கப்படும். தொடக்கக் கல்வி இயக்குநரகம் ஆனது பெரும்பாலும் நகர்ப்புற உதவி பெறும் பள்ளிகளை உள்ளடக்கிய சுமார் 1,416 பள்ளிகளை இந்தத் திட்டத்தில் சேர்ப்பதற்காகப் பட்டியலிட்டுள்ளது. தற்போது, 34,987 பள்ளிகளில் 17.53 லட்சம் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள். இந்தத் திட்டமானது, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப் பட்டது. 2024–25 ஆம் கல்வியாண்டில், கிராமப் புறத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப் பட்டது.

Water Bell திட்டம்

தமிழ்நாடு கல்வி அமைச்சர் பள்ளிகளில் Water Bell திட்டத்தைத் தொடங்கி வைத்து உள்ளார். இது மாணவர்கள் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடித்து மிக நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டு தொடங்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டமானது 2025 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று செயல்படுத்தப்பட்டது. அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளும் இதைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளன. ஒரு சிறப்புத் தண்ணீர் இடைவேளை மணியானது காலை 11 மணி, பிற்பகல் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு என ஒரு நாளைக்கு மூன்று முறை ஒலிக்கும். இந்த மணி ஓசையானது, வழக்கமான பள்ளி இடைவேளை மணிகளிலிருந்து நன்கு வேறுபட்டதாக இருக்கும். மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் தண்ணீர் குடிக்க 2-3 நிமிடங்கள் வழங்கப்படும். தண்ணீர் இடைவேளை நேரத்தில் வெளியே செல்லக் கூடாது. மாணவர்கள் தங்கள் சொந்தத் தண்ணீர் குடுவைகளைக் கொண்டு வர வேண்டும். கேரள மாநில அரசானது கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்தியது.

வால்பாறை சட்டமன்றத் தொகுதி 2025

வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் T.K. அமுல் கந்தசாமியின் மறைவைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு சட்டமன்றச் செயலகம் கடந்த வாரம் வெளியிட்டது. இது 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16வது தமிழ்நாடு சட்ட மன்றத்தில் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாவது இடம் ஆகும். இதற்கு குறுகிய கால அவகாசம் இருப்பதால், இடைத் தேர்தல் நடத்தப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தமிழ்நாடு

டி . குகேஷ் நோர்வே செஸ் 2025- ல் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்

® உலக சாம்பியன் டி . குகேஷ் , உலகின் முதல்வராகிய மாக்னஸ் கார்ல்சனை நோர்வே செஸ் 2025 போட்டியில் வீழ்த்தினார் ® கார்ல்சனுக்கு எதிராக குகேஷின் முதல் கிளாசிக்கல் வெற்றி . ® 19 வயதில் , இந்த போட்டியில் கார்ல்சனை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் ஆனார் ( முதல் இந்தியர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா )

சமகால இணைப்புகள்