Current Affairs Mon Jun 30 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 30-06-2025

தமிழ்நாடு

இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி வழிகாட்டுதல்கள் 2025

® புதிய மின்சார வாகனக் கொள்கையை உலகளாவிய தயாரிப்பாளர்களை ஈர்க்க இந்தியா தொடங்குகிறது . ® ஆண்டுக்கு 8,000 மின்சார நான்கு சக்கர வாகனங்களை 15% குறைக்கப்பட்ட இறக்குமதி வரியுடன் ( 70-100% லிருந்து குறைக்கப்பட்டது ) இறக்குமதி செய்ய அனுமதி . ® தகுதி பெற , விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகளுக்குள் குறைந்தது ₹ 4,150 கோடி ( ~$500 மில்லியன் ) முதலீட்டை உறுதிப்படுத்த வேண்டும் .

2025- ல் இந்திய ர்களின் சராசரி ஆயுட்காலம் 72.48 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது

® உலக சராசரி ஆயுட்காலம் : ~73 ஆண்டுகள் ( 2024) ® மொனாகோ 86.5 ஆண்டுகளுடன் உலகில் முதலிடத்தில் உள்ளது ® இந்தியாவில் பெண்கள் (74.13 ஆண்டுகள் ) ஆண்களை விட ( 70.95 ஆண்டுகள் ) அதிக காலம் வாழ்கிறார்கள் ® சுகாதாரம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளில் முன்னேற்றத்தை இது குறிக்கிறது

2025 தேசிய அனுப வ் விருதுகள் CPSE மற்றும் PSB ஊழியர்களுக்கும் விரிவாக்கம்

® 5 ஓய்வு பெற்றவர்களுக்கு அனுப வ் விருது வழங்கப்பட்டது ; 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன ® முதன்முறையாக , மத்திய அரசு ஊழியர்களுடன் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ( CPSEs) மற்றும் பொதுத்துறை வங்கிகள் ( PSBs) ஊழியர்களும் சேர்க்கப்பட்டனர் ® ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறையால் 2015- ல் ஓய்வு பெறும் ஊழியர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான அனுப வ் இணைய தளம் தொடங்கப்பட்டது ® ஆண்டு விருது திட்டம் , ஓய்வு பெற்றவர்களை தங்கள் அனுபவங்களை எழுதி சமர்ப்பிக்க ஊக்குவிக்கிறது ® இதுவரை , 59 அனுப வ் விருதுகள் மற்றும் 19 பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன

2024–25 நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ₹ 15.77 லட்சம் கோடியை எட்டியது

® 2024–25 நிதியாண்டிற்கான மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ₹ 15.77 லட்சம் கோடியாக இருந்தது , இது திருத்தப்பட்ட ஆண்டு இலக்கில் 100.5% ஆகும் . ® இது 2023–24 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட ₹ 16.54 லட்சம் கோடியை விடக் குறைவு , இது ஆண்டின் மதிப்பீட்டில் 95.3% ஆகும் . ® மொத்தச் செலவு ₹ 46.56 லட்சம் கோடியாக இருந்தது , இது திருத்தப்பட்ட பட்ஜெட்டில் 98.7% ஆகும் . வருவாய் வரவுகள் ₹ 30.36 லட்சம் கோடியாக இருந்தது , இதில் உள்ளடங்கியவை : ® வரி வருவாய் : ₹ 24.99 லட்சம் கோடி ® வரி அல்லாத வருவாய் : ₹ 5.38 லட்சம் கோடி ® நிதிப்பற்றாக்குறை இலக்கு 2024–25 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8% ஆக இருந்தது , மேலும் 2025–26 நிதியாண்டில் 4.4% ஆக குறைக்கப்பட்டது .

முக்கிய தினங்கள்

சர்வதேசப் பாராளுமன்ற தினம் 2025

சர்வதேசப் பாராளுமன்ற தினம் 2025 - ஜூன் 30. இந்த நாள் 1889 ஆம் ஆண்டு பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் (IPU) நிறுவப் பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. தற்போது, இந்த அமைப்பானது 181 தேசிய மற்றும் 15 பிராந்தியப் பாராளுமன்றங்களை ஒன்றிணைக்கிறது. இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘Achieving gender equality, action by action’ என்பதாகும்.

உலக குறுங்கோள் தினம் 2025

உலக குறுங்கோள் தினம் 2025 - ஜூன் 30. இது குறுங்கோள்களின் மோதல்கள் பூமியில் உள்ள உயிர்களில் எவ்வாறு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதைப் பற்றிப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நாள் 1908 ஆம் ஆண்டில் நடைபெற்ற துங்குஸ்கா நிகழ்வை நினைவு கூருகிறது. இந்த மிகப்பெரிய குறுங்கோள் மோதலால் 2,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவிலான சைபீரியக் காடுகள் அழிவுற்றன.

மாநில செய்திகள்

ஜகன்னாத் ரத யாத்திரை 2025

ஜகன்னாத் ரத யாத்திரை என்பது ஒடிசாவில் கொண்டாடப் படும் பிரபலமான இந்துப் பண்டிகையாகும். இது தேர் விழா அல்லது ஸ்ரீ குண்டிச்சா யாத்திரை என்றும் அழைக்கப் படுகிறது. இந்த விழாவானது நிலவின் ஒரு பிரகாசமானக் கட்டத்தின் (சுக்ல பட்சம்) இரண்டாவது நாளான த்விதியா திதியில் நடைபெறுகிறது.

போனலு விழா 2025

போனலு என்பது தெலங்கானாவில், குறிப்பாக ஐதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் கொண்டாடப்படும் ஓர் இந்து பண்டிகையாகும். தெலுங்கு மொழியில் ‘விருந்து’ எனப் பொருள்படும் ‘போனலு’ என்ற வார்த்தை ஆனது தெய்வத்திற்காக தயாரிக்கப்படும் சிறப்பு உணவைக் குறிக்கிறது. இங்கு பக்தர்கள் மகாகாளி தேவிக்கு என்று அரிசி, வெல்லம், தயிர் மற்றும் வேப்பிலை ஆகியவற்றின் கலவையான போனம் என்ற உணவைப் படையலாக வழங்குகிறார்கள். ஆசீர்வாதம் மற்றும் நோய்கள் & பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்காக இந்தப் பிரார்த்தனை வழங்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிளேக் தொற்று உட்பட கடந்த கால துயர சம்பவங்களின் போது மக்களைப் பாதுகாத்ததற்காக அத்தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது.

தேர்தல் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தம் – பீகார்

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஆனது, பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் ஒரு முனைப்பான சிறப்பு திருத்தம் (SIR) ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு, வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் (BLO) மூலம் இது மேற்கொள்ளப்படும். தகுதியுள்ள அனைத்துக் குடிமக்களையும் சேர்த்து, தகுதியற்ற அல்லது போலியான உள்ளீடுகளை அகற்றுவதே இதன் நோக்கமாகும். பீகாரில் கடைசியாக முனைப்பான ஒரு திருத்தம் ஆனது 2003 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது. இந்தத் திருத்தமானது நகரமயமாக்கல், புலம் பெயர்வு மற்றும் பதிவு செய்யப்படாத உயிரிழப்புகள் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்கிறது. 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 326 மற்றும் 16வது பிரிவுகளின் கீழ் கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படும். வாக்காளர் சரிபார்ப்புக்குப் பயன்படுத்தப் படும் ஆவணங்கள் ஆனது அங்கீகரிக்கப் பட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியப் படுத்தும் வகையில் ECINET தளத்தில் இது பாதுகாப்பாக பதிவேற்றப் படும்.

EAGLE - தெலங்கானா

தெலங்கானா மாநில அரசானது தெலங்கானா போதைப்பொருள் எதிர்ப்பு வாரியத்தினை (TGANB) EAGLE எனப் படும் சிறப்பு அமலாக்கப் பிரிவாகத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. EAGLE என்பது போதைப் பொருள் சட்ட அமலாக்கத்திற்கான மேம்பட்ட நடவடிக்கைக் குழு (Elite Action Group for Drug Law Enforcement) என்பதைக் குறிக்கிறது. இது தெலங்கானாவில் கஞ்சா சாகுபடியைக் கண்டறிந்து அழித்தல் மற்றும் மாநில எல்லைகளில் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்ளும்.

சுற்றுச்சூழல் செய்திகள்

இந்தியாவின் முதல் உள்நாட்டு மீன்வளம்

இந்தியாவிலேயே முதன்முறையாக, சிலிக்கா ஏரியில் கழி/சேற்று நண்டு பிடித்தலுக்கு உலகளாவிய ஒரு நிலைத் தன்மை அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன. சிலிக்காவின் கழி நண்டு பிடித்தலுக்கு என கடலோர மேற்பார்வையாளர் சபை (MSC) சான்றிதழைப் பெறுவதற்கான கூட்டு முன்னெடுப்பு தொடங்கியுள்ளது. இந்த மீன்வளமானது, வடகிழக்கு இந்தியாவில் பொருளாதார ரீதியாகவும் சுற்றுச் சூழல் ரீதியாகவும் முக்கியமானதாகும். இது MSC சான்றிதழுக்குப் பரிசீலிக்கப்படும் இந்தியாவின் முதல் உள்நாட்டு மீன் வளம் ஆகும். MSC என்பது ஒரு நிலையான மீன் பிடித்தலை ஊக்குவித்து, சான்றளிக்கும் ஒரு முக்கிய உலகளாவியத் திட்டமாகும். சிலிக்கா ஏரியானது இந்தியாவின் மிகப்பெரிய கடலோரக் காயலாகும் என்பதோடு மேலும் யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப் பட்ட பல்லுயிர்ப் பெருக்க மையம் ஆகும்.

பல்லுயிர்ப் பெருக்கத் தரவு நிதி 2024

2024 ஆம் ஆண்டில், IBAT ஆனது பல்லுயிர்ப் பெருக்கத் தரவுகளில் இதுவரை இல்லாத அளவில் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை (USD) முதலீடு செய்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்ட 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்களில் (USD) இருந்து அதிகரிப்பைக் குறிக்கிறது. ஒருங்கிணைந்தப் பல்லுயிர்ப் பெருக்க மதிப்பீட்டுக் கருவியும் (IBAT) கூட்டணி ஆனது 2008 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது. இது நான்கு முக்கிய உலகளாவிய வளங்காப்பு அமைப்புகளின் கூட்டமைப்பாகும். அதன் உறுப்பினர் அமைப்புகளாவன பேர்ட்லைஃப் இன்டர்நேஷனல், கன்சர்வேஷன் இன்டர்நேஷனல், IUCN மற்றும் UNEP உலக வளங்காப்பு கண்காணிப்பு மையம் (UNEP-WCMC) ஆகியனவாகும். இந்தக் கூட்டணியின் தலைமையகம் ஐக்கியப் பேரரசின் கேம்பிரிட்ஜ் என்னுமிடத்தில் உள்ளது.

கப்பதகுடா வனவிலங்கு சரணாலயம்

கர்நாடகாவில் உள்ள கப்பதகுடா வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றி மத்திய அரசு சுற்றுச்சூழல் தாங்குதிறன் மண்டலத்தினை (ESZ) அறிவித்துள்ளது. அதன் ஒரு தனித்துவமான பல்லுயிர்ப் பெருக்கத்தின் காரணமாக இது பெரும்பாலும் ‘வடக்கு கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள்’ என்று குறிப்பிடப்படுகிறது. இந்தச் சரணாலயத்தில் சுமார் 400 வகையான மருத்துவ தாவரங்கள் உள்ளது மற்றும் பல்வேறு வகையான காய்ந்த புதர்கள் மற்றும் இலையுதிர் தாவரங்களைக் கொண்டு உள்ளது. அதன் சுற்றுச்சூழல் மதிப்பைத் தவிர, இந்த மலைகளில் ஆங்காங்கே காணப்படும் பல பழங்கால கோயில்களின் இடிபாடுகள் அதன் கலாச்சாரப் பாரம்பரியத்தை நன்கு பிரதிபலிக்கின்றதுடன் கப்பதகுடா சரணாலயம் ஒரு வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

ICCON 2025 சந்திப்பு

2025 ஆம் ஆண்டு இந்திய வளங்காப்பு மாநாடு (ICCON) ஆனது, டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் (WII) நடைபெற்று வருகிறது. ICCON ஆனது, இந்தியாவின் அவசர வனவிலங்கு மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் சார்ந்த சவால்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த மாநாடு ஆனது 2023 ஆம் ஆண்டில் புலிகள் வளங்காப்புத் திட்டத்தின் 50வது ஆண்டு விழா மற்றும் சர்வதேசப் பெரும் பூனை இனங்கள் கூட்டணி (IBCA) தொடங்கப் பட்ட போது தொடங்கியது.

நிலையான மின்கல மறுசுழற்சி செயல்முறை

BatX எனர்ஜிஸ் நிறுவனமானது, லித்தியம்-அயனி மின்கல வேதியியலுக்குப் புறம்பான ஒரு பிரத்தியேக குறைந்த வெப்பநிலை, குறைந்த அழுத்த நீர்ப்பகுப்பு உலோகவியல் செயல்முறையை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டமானது, லித்தியம்-அயனி மின்கலங்களுக்கான உள்நாட்டு மின்கல மறு சுழற்சி செயல்முறையை வணிகமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒரு செயல்முறையானது, பயன்படுத்தப்பட்ட சில மின்கலங்களிலிருந்து மின்கல உற்பத்தித் தர லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீஸ் ஆகியவற்றினை மீட்டெடுக்கிறது. அவர்களின் தொழில்நுட்பம் என்பது அனைத்து வகையான லித்தியம்-அயனி மின் கல வேதியியல்களுடனும் செயல்படுகிறது. இந்தச் செயல்முறையானது ஈரப் பதமான மற்றும் உலர்ந்த black mass எனப்படும் ஒரு செயல் முறையின் எஞ்சியப் பொருட்களின் மீட்பு மூலம் 97 – 99% மீட்பு விகிதங்களை அடைகிறது. இது சேகரிப்பு, துண்டாக்குதல், உலோகக் கசிவு மற்றும் சுத்திகரிப்பு என ஒரு முழு சுழற்சியையும் உள்ளடக்கியது. காப்புரிமை பெற்ற இந்தத் தொழில்நுட்பம் ஆனது மிக முழுமையாக இந்தியாவில் உருவாக்கப் பட்டது என்பதால் இது இறக்குமதி செய்யப்பட்ட சில உபகரணங்களின் தேவையைக் குறைக்கிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப செய்திகள்

டீப் மைண்ட் நிறுவனத்தின் ஆல்பாஜீனோம்

டீப் மைண்ட் நிறுவனமானது, ஆல்பாஜீனோம் என்ற ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளது. ஒரு டிஎன்ஏ எழுத்தை மாற்றுவது ஒரு மரபணு வெளிப்பாட்டை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆல்பாஜீனோம் கணித்துள்ளது. மாற்றங்கள் ஆனது ஆர்என்ஏ மற்றும் புரதப் பொருட்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. மற்ற செயற்கை நுண்ணறிவுகள் மரபணுவின் சுமார் 2% (புரதக் குறியீட்டுப் பாகங்கள்) மட்டுமே பகுப்பாய்வு செய்கின்றன. ஒரு முழு மனித மரபணுவையும் பகுப்பாய்வு செய்த முதல் செயற்கை நுண்ணறிவு ஆல்பாஜீனோம் ஆகும்.

சர்வதேச செய்திகள்

ஏழ்மை நிலையில் உள்ள 50 நாடுகள் 2025

தெற்கு சூடான் நாடானது, 251 டாலர் என்ற மதிப்பிலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் உலகின் மிக ஏழ்மையான நாடாக உள்ளது. ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நாடுகள் உலகின் ஏழ்மையான நாடுகளில் அடங்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4வது பெரிய நாடான இந்தியா, 2025 ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகளவில் 50வது இடத்தில் உள்ளது (2,878 டாலர்). இதில் ஆப்கானிஸ்தான், எரித்திரியா, லெபனான், பாகிஸ்தான், இலங்கை, சிரியா, பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை.

GAVI கூட்டணியில் இருந்து வெளியேறும் அமெரிக்கா

தடுப்பூசிகள் மற்றும் நோய்த் தடுப்புக்கான உலகளாவிய கூட்டணியில் (GAVI) இருந்து தனது ஆதரவை அமெரிக்கா விலக்கிக் கொள்கிறது. GAVI என்பது WHO, UNICEF, கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் உலக வங்கி உள்ளிட்ட ஒரு பொது-தனியார் கூட்டாண்மை ஆகும். வழக்கமான நோய்த்தடுப்பு திட்டங்கள் மூலம் சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு இது நிதி வழங்கி, சுமார் 18 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இது உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி பாதுகாப்பு வலையமைப்பு (VSN) என்ற திட்டத்திலும் உறுப்பினராக உள்ளது. அமெரிக்கா ஏற்கனவே WHO அமைப்பு, பாரிஸ் பருவநிலை உடன்படிக்கை, UN மனித உரிமைகள் சபை, UN நிவாரணம் மற்றும் பணிகள் முகமை (UNRWA) போன்ற பல அமைப்புகளிலிருந்தும் விலகியுள்ளது.

தேசிய செய்திகள்

முதல் கடலோர NBFC

கடலோர துறைக்கான நாட்டின் முதல் பிரத்தியேக NBFC சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதற்கு சாகர்மாலா நிதி நிறுவனம் லிமிடெட் (SMFCL) என்று பெயரிடப்பட்டது. இது முன்னர் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனம் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. SMFCL தற்போது இந்திய ரிசர்வ் வங்கியில், வங்கி அல்லாத நிதி நிறுவனமாக (NBFC) அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மினி ரத்னா, முதல் வகை, மத்தியப் பொதுத்துறை நிறுவன அந்தஸ்து வழங்கப் பட்டுள்ளது. SMFCL என்பது துறைமுக மேம்பாடு, கப்பல் போக்குவரத்து மற்றும் பிற கடலோர திட்டங்களுக்கு நிதியளிக்க உதவும்.

அலுவல் மொழித் துறையின் 50 ஆம் ஆண்டு நிறைவு

அலுவல் மொழித் துறையானது அதன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது என்ற நிலையில் இது நிர்வாகத்தில் இந்திய மொழிகளின் பயன்பாட்டினை மேம்படுத்த செய்வதற்கான முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. 1975 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான செயல்பாடுகள் ஆனது, மொழியியல் அதிகாரமளிப்புக்கான கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டினைப் பிரதிபலிக்கிறது. ஏக் பாரத் ஸ்ரேஷ்டா பாரத் போன்ற முன்னெடுப்புகள் கலாச்சாரப் பரிமாற்றம் மூலம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துகின்றன. காசி-தமிழ், காசி-தெலுங்கு மற்றும் சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மொழிகளை நெருக்கமாக ஒருங்கிணைக்கின்றன. பாஷா சங்கத்தின் கீழ், பள்ளிகள் தற்போது 22 பட்டியலிடப்பட்ட மொழிகளில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுமார் 100 சொற்றொடர்களை மாணவர்களுக்குக் கற்பிக்கின்றன.

செயலற்ற அரசியல் கட்சிகள் 2025

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆனது, சுமார் 345 செயலற்ற பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப் படாத அரசியல் கட்சிகளை (RUPPs) பட்டியலில் இருந்து நீக்குவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்தக் கட்சிகள் ஆனது, 2019 ஆம் ஆண்டு முதல் எந்தத் தேர்தலிலும் போட்டியிட வில்லை. சரி பார்ப்பின் போது அவற்றின் அலுவலகங்கள் நேரடியாக அமைந்திருக்கக் கூடியதாக இல்லை. இந்தியாவில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 29A பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட 2,800க்கும் மேற்பட்ட RUPP கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகளில் பல கட்சிகள் வரிச் சலுகைகளைக் கொண்டிருந்தாலும், தேர்தலில் போட்டியிடுவதற்கான அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEO) இந்தக் கட்சிகளுக்குக் ஒரு காரணம் கேட்பு அறிக்கையினை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். இக்கட்சிகள் தங்கள் சூழலை மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் CEO அதிகாரிகள் முன் விளக்கலாம், ஆனால் ECI ஆனது இறுதிப் பட்டியல் நீக்க முடிவை எடுக்கும்.

இந்தியாவின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான புதிய எண்ணிம நடவடிக்கை

இந்தியாவின் கடலோர துறையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசானது, புதிய எண்ணிமத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. அந்த முக்கியத் திட்டங்களில், SAGAR SETU-சாகர் செது - துறைமுகங்களின் வளர்ச்சி மற்றும் அணுகலுக்கான ஒரு தடையற்ற நிர்வாகம் – திறன் மிக்க போக்குவரத்து மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்புக்கான அமைப்பு, சிறப்பு எண்ணிம மையம் (DCoE), DRISHTI கட்டமைப்பு மற்றும் கட்டணங்களின் தகவல் குறித்த ஆவணம் (SOR) ஆகியவை அடங்கும். இந்த முன்னெடுப்புகள் ஆனது துறைமுகங்களை நவீனமயமாக்குவதையும், கப்பல் போக்குவரத்தை மிகவும் திறன் மிக்கதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளன. திறன் மிகு வகையிலான மற்றும் பசுமை சார் துறைமுகச் செயல்பாடுகளை உருவாக்குவதற்காக DCoE ஆனது செயற்கை நுண்ணறிவு (AI), இணைய உலகம் (IoT) மற்றும் தொடர் சங்கிலித் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. வேகமான, நேரடி ஆவணங்களற்ற/காகிதமற்ற ஏற்றுமதி-இறக்குமதி (EXIM) செயல் முறைகளுக்காக SAGAR SETU 80க்கும் மேற்பட்ட துறைமுகங்களையும் 40 பங்குதாரர் நபர்களையும் இணைக்கிறது. DRISHTI ஆனது 2030 ஆம் ஆண்டு கடலோர இந்தியா தொலைநோக்குத் திட்டங்களின் முன்னேற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கிறது. SOR ஆவணங்கள் என்பது வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும் முதலீட்டாளர் நம்பிக்கையை அதிகரிக்கவும் துறைமுகக் கட்டணங்களைத் தரப் படுத்துகிறது. அனைத்து முன்னெடுப்புகளும் 2030 ஆம் ஆண்டு கடலோர இந்தியா தொலைநோக்குத் திட்டம் மற்றும் 2047 ஆம் ஆண்டில் அம்ரித காலம் ஆகியவற்றின் இலக்குகளுடன் ஒத்துப் போகின்றன.

மொழி மேம்பாட்டு நிதியின் நிலை

2014-15 மற்றும் 2024-25 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், சமஸ்கிருத மொழியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசானது 2,532.59 கோடி ரூபாயை செலவிட்டது. தமிழ் மொழி உட்பட மற்ற ஐந்து செம்மொழிகளின் மேம்பாட்டிற்காக மொத்தம் 147.56 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. தமிழுக்கு மட்டும் 113.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சமஸ்கிருதத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியன தலா 0.5 சதவீதத்திற்கு குறைவாகவும், ஒடியா மற்றும் மலையாளம் ஆகியவை தலா 0.2 சதவீதத்திற்குக் குறைவாகவும் நிதி பெற்றுள்ளன. 2008 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மீதமுள்ள இதர நான்கு செம்மொழிகளுக்கான ஒருங்கிணைந்த நிதி ஒதுக்கீடு 34.08 கோடி ரூபாய் ஆகும். 2014-15 மற்றும் 2024-25 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தி, உருது மற்றும் சிந்தி மொழிகளுக்கான ஒருங்கிணைந்த நிதி ஒதுக்கீடு 1,317.96 ரூபாய் ஆகும். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 1.2 பில்லியனில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா மற்றும் கன்னட மொழி பேசுபவர்கள் 21.99% பேர் ஆக உள்ளனர்.

தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் 24 பதிவுசெய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்

தமிழ்நாட்டில் குறைந்தது 24 அரசியல் கட்சிகள் ‘பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப் படாத அரசியல் கட்சிகள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றிற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் காரணம் கேட்பு அறிக்கை அனுப்பப் படுவதற்கான வாய்ப்புள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இவை ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. அரசியல் கட்சிகள் அனைத்தும் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 29A வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு பதிவு செய்வதன் மூலம், அவற்றிற்கு வருமான வரி சட்டத்தின் 13A வது பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு, சின்னங்கள் குறித்த உத்தரவின் 6வது பத்தியின் கீழ் அங்கீகாரம், பொதுவான சின்னம் ஒதுக்கீடு மற்றும் நட்சத்திரப் பிரச்சாரகர்களை பரிந்துரைத்தல் போன்ற பல நலன்கள் கிடைக்கின்றன. இந்த சட்டத்தின் 29A வது பிரிவின் கீழ் ஒரு சங்கத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் நோக்கம், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அந்தப் பகுதியின் பயன்களைப் பெறுவதாகும். அதாவது ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களில் பங்கேற்பதைக் குறிக்கிறது.

சமகால இணைப்புகள்