TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 27-06-2025
தமிழ்நாடு
’ ஐடியாஸ் 4 லைஃப் ’ முன்முயற்சியின் வெற்றியாளர்கள்
® சுற்றுச்சூழல் , வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ( MoEFCC), UNICEF YuWaah- உடன் இணைந்து நடத்திய ’ ஐடியாஸ் 4 லைஃப் ’ முன்முயற்சியின் கீழ் 21 வெற்றியாளர்களை அறிவித்துள்ளது . ® மிஷன் லைஃப் - இன் 7 கருப்பொருள்களில் புதுமையான யோசனைகள் தேடப்பட்டன : ® ஆற்றலை சேமி , தண்ணீரை சேமி , ஒரு முறை பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர் , நிலையான உணவு முறைகள் , கழிவை குறை , மின் கழிவை குறை , ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஏற்க . ® காஞ்சிபுரம் பச்சையப்பா கல்லூரி ( ஆண்கள் ) , ’ ஆற்றலை சேமி ’ வகையில் 3- வது பரிசை பெற்றது . ® கோயம்புத்தூர் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி , ’ ஒரு முறை பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர் ’ வகையில் 1- வது பரிசையும் , ’ நிலையான உணவு முறைகளை ஏற்க ’ 2- வது பரிசையும் வென்றது .
CEIR வலைத்தளம் நிலை
® திருடப்பட்ட அல்லது தொலைந்த கைபேசி களைத் தடுக்க மற்றும் கண்டறிய , தொலைதொடர்பு துறை ( DoT) CEIR வலைத்தளத் தை உருவாக்கியுள்ளது . ® தெலங்கானா , 78,114 சாதனங்களை மீட்டெடுத்து , இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது
தொலைதொடர்பு துறை நிதி மோசடி அபாயக் குறியீட்டை ( FRI) அறிமுகப்படுத்தியது
® தொலைதொடர்பு துறை ( DoT), அதிகரித்து வரும் சைபர் மோசடி மற்றும் நிதி குற்றங்களை எதிர்கொள்வதற்காக நிதி மோசடி அபாயக் குறியீட்டை ( FRI) அறிமுகப்படுத்தியுள்ளது . ® FRI, மொபைல் எண்களை ’ நடுத்தர ’, ’ அதிக ’ அல்லது ’ மிக அதிக ’ அபாயம் என வகைப்படுத்துகிறது . ® வங்கிகள் , UPI சேவை வழங்குநர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் நிகழ்நேர பகிர்வை இது எளிதாக்குகிறது . ® ’ மிக அதிக ’ அபாய FRI எண்களுடன் இணைக்கப்பட்ட பரிவர்த்தனைகளை UPI தளங்கள் நிராகரிக்கலாம் அல்லது கொடியிடலாம் .
பெண்கள் ஆரோக்கியத்திற்கான உலக நாள் 2025
® பெண்கள் ஆரோக்கியத்திற்கான உலக நாள் , மே 28, 2025- இல் கடைப்பிடிக்கப்பட்டது . ® பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் ஆரோக்கியம் , குடும்பங்கள் , சமூகங்கள் மற்றும் நாடுகளின் நல்வாழ்விற்கு முக்கியமானது என்பதை இந்த நாள் வலியுறுத்துகிறது . ® 2025 கருப்பொருள் : ” ஒற்றுமையில் நாம் எதிர்க்கிறோம் : எங்கள் போராட்டம் , எங்கள் உரிமை !”
இதரச் செய்திகள்
அம்புபாச்சி மேளா 2025
அசாமின் குவகாத்தியில் உள்ள காமக்யா என்ற ஒரு கோவிலில் அம்புபாச்சி மேளா என்ற சமய விழா நடைபெற்றது. ‘நீரோட்டம்’ என்றும் ஒரு பொருள்படும் ‘அம்புபாச்சி’ என்பது பருவமழை மற்றும் வேளாண்மையின் புதுப்பித்தலுடன் நிகழ்வை இணைக்கிறது. ஜூன் மாதத்தில் கொண்டாடப் படும் இந்த முக்கியப் பண்டிகையானது தாந்த்ரீக சக்தி மார்க்கத்தில் ஒரு முக்கியச் சடங்காகும்.
பிரபலமானவர்கள், விருதுகள், மற்றும் நிகழ்வுகள்
JCB இலக்கிய விருது நிறுத்தம்
எதிர்கால விருதுகள் எதுவும் திட்டமிடப்படாததுடன், இலக்கியத்திற்கான JCB பரிசு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்தப்பட்டுள்ளது. மொழியியல் பன்முகத் தன்மையை ஊக்குவிப்பதற்காகவும் மொழிபெயர்ப்புகளை இனி நன்கு அங்கீகரிப்பதற்காகவும் இந்தப் பரிசு வழங்கப்பட்டது. இது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. JCB இந்தியா நிறுவனம் நிதியுதவி வழங்கி வந்த இந்தப் பரிசானது, இலாப நோக்கற்ற அமைப்பான JCB இலக்கிய அடக்கத்தளையால் நிர்வகிக்கப்படுகிறது. இது ஆங்கில மொழியில் எழுதப்பட்ட புனைவுக் கதை அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்ட இந்திய மொழிப் படைப்புகளைக் கௌரவித்தது. 2018 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் இந்த விருது வென்ற ஏழு வெற்றியாளர்களில், ஐந்து பேர் மலையாளம், தமிழ் மற்றும் உருது போன்ற சில மொழிகளில் உள்ள படைப்புகளை மொழிபெயர்த்தனர்.
மாநிலச் செய்திகள்
திருநர் சமூகத்திற்கு OBC அந்தஸ்து
அசாம் மாநிலத்தில் திருநர் சமூகத்திற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் நலத்திட்டங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் மேற்பார்வையாளர்-நிலை போன்ற பதவிகளில் சுமார் 50% என்ற அளவானது அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒதுக்கப் படும். இந்த மேற்பார்வையாளர் பணி நிலைகள் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் (ICDS) திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு தற்போதைய அடிமட்ட நிலை பதவிகளில் இருந்து வரும் நபர்களுக்குப் பதவி உயர்வு வழங்குகின்றன.
திரிபுரா - முழு கல்வியறிவு நிலை
ULLAS - நவ பாரத் சாக்ஷார்த்த காரியக்ரம் திட்டத்தின் கீழ் திரிபுரா முழு கல்வியறிவு நிலையைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிசோரம் மற்றும் கோவாவிற்குப் பிறகு ஒரு முழு கல்வியறிவு நிலையை எட்டிய இந்தியாவின் மூன்றாவது மாநிலம் இதுவாகும். 1961 ஆம் ஆண்டில் வெறும் 20.24% ஆக இருந்த மாநிலத்தின் கல்வியறிவு விகிதமானது, தற்போது 95.6% ஆக உயர்ந்துள்ளது. ULLAS என்பது 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாகும். இந்த முக்கியத் திட்டமானது, கல்வியறிவு இல்லாத இளையோர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர் (15+ வயது) ஆகியோரை மேம்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டு உள்ளது. இது அடிப்படைக் கல்வியறிவு, எண்ணறிவு மற்றும் மிகவும் முக்கியமான வாழ்க்கைத் திறன்களில் கவனம் செலுத்துகிறது.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
WMO அமைப்பின் ஆசியாவில் பருவநிலை குறித்த தகவல் அறிக்கை 2024
2024 ஆம் ஆண்டானது பரவலான, நீடித்த வெப்ப அலைகளுடன் ஆசியாவில் பதிவான வெப்பமான ஆண்டாகும். 2024 ஆம் ஆண்டில் உலகளாவியச் சராசரி வெப்பநிலை 1850 – 2024 வரை மிக அதிகமாக இருந்தது. இது 2023 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 1.45°C வெப்பநிலையினைத் தாண்டியது. ஆசியாவில், உலகச் சராசரியை விட சுமார் இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைந்த கடல் மேற்பரப்பு வெப்பநிலை இதுவரை இல்லாத அளவிலான உச்சத்தை எட்டியது. ஆசியாவின் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் கடற்கரைகளில் கடல் மட்ட உயர்வு உலகச் சராசரியை விட அதிகமாக இருந்தது. இமயமலை மற்றும் தியான் ஷானில் கண்காணிக்கப்பட்ட 24 பனிப்பாறைகளில் 23 அதன் பனிப் பரவலை இழந்தது என்பதோடு இது பனிப்பாறை ஏரி வெடிப்பினால் ஏற்படும் வெள்ளம் (GLOF) மற்றும் நிலச்சரிவு அபாயங்களை அதிகரித்தது. 2024 ஆம் ஆண்டில், கடல்சார் வெப்ப அலைகள் பெரும்பாலான ஆசியப் பெருங்கடல் பகுதிகளைப் பாதித்தன. ஐக்கிய அரபு அமீரகத்தில், 24 மணி நேரத்தில் 259.5 மிமீ மழைப் பொழிவு பதிவானது என்பதோடு இது 1949 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிகவும் கடுமையான சில நிகழ்வுகளில் ஒன்றாகும். 2024 ஆம் ஆண்டில் இந்திய நாடு முழுவதும் மின்னல் தாக்கியதில் சுமார் 1,300 பேர் கொல்லப் பட்டனர் என்ற நிலையில் ஜூலை 10 ஆம் தேதியன்று 72 பேர் உயிரிழந்தனர். சீனாவில் ஏற்பட்ட வறட்சி ஆனது சுமார் 4.8 மில்லியன் மக்களைப் பாதித்தது மற்றும் நேரடியாக 2.89 பில்லியன் சீன யுவான் (CNY) மதிப்பிலான இழப்பினை ஏற்படுத்தியது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
இஸ்ரோவிலிருந்து SSLV தொழில்நுட்பப் பரிமாற்றம்
இஸ்ரோவிலிருந்து SSLV தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கான ஏலத்தினை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் கைப்பற்றியது. இதன் மூலம் இந்நிறுவனமானது சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் (SSLV) ஒரே உற்பத்தியாளராகிறது. இதன் முழு தொழில்நுட்பப் பரிமாற்றச் செயல்முறை நிறைவடைய சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும். SSLV என்பது இஸ்ரோ நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய மற்றும் செலவு குறைந்த ஏவுகலம் ஆகும். இது சிறிய செயற்கைக் கோள்களை புவி தாழ் மண்டலச் சுற்றுப்பாதையில் விரைவாக உட்செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவசர செயற்கைக் கோள், குறிப்பாகப் பாதுகாப்புப் பயன்பாட்டிற்கான செயற்கைக் கோள்களின் ஏவுதல் தேவைகளைப் பூர்த்தி செய்ய SSLV உதவுகிறது.
பொருளாதாரச் செய்திகள்
அதிகரிக்க உள்ள மாநிலங்களின் மூலதனச் செலவினம்
2025 ஆம் நிதியாண்டில் 8.7 டிரில்லியன் ரூபாயாக இருந்த 26 இந்திய மாநிலங்களின் மூலதனச் செலவினமானது, 2026 ஆம் நிதியாண்டில் சுமார் 10.2 டிரில்லியன் ரூபாயாக அதிகரிக்கும். இந்த மொத்த மூலதனச் செலவில் ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சுமார் 50% என்ற அளவில் அதன் பங்கினைக் கொண்டிருக்கும். மொத்த மூலதனச் செலவில் உத்தரப் பிரதேசம் மட்டும் 16.3% பங்கினைக் கொண்டு இருக்கும். 2025 ஆம் நிதியாண்டில், மிகவும் அதிகப் பங்கினை கொண்ட முதல் ஐந்து மாநிலங்கள் உத்தரப் பிரதேசம் (16.9%), மகாராஷ்டிரா (10.9%), குஜராத் (8.1%), மத்தியப் பிரதேசம் (7.5%) மற்றும் ஒடிசா (6.4%) ஆகியனவாகும். நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகியவை 2026 ஆம் நிதியாண்டில் மூலதனச் செலவினத்தில் 0.4% மட்டுமே பங்களிக்கும். 26 மாநிலங்களின் மொத்த வருவாய் ஆனது 2026 ஆம் நிதியாண்டில் சுமார் 69.4 டிரில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் நிதியாண்டினை விட 10.6% அதிகமாகும். வருவாய் வரவுகளானது 12.3% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மூலதன வரவானது 6.6% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் இராஜஸ்தான் ஆகியவை தலா 5.9% என்ற ஒரு அளவிற்குப் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் நிதியாண்டில் மிகவும் அதிகப் பங்களிப்பை வழங்கிய தமிழ்நாடு, 2026 ஆம் நிதியாண்டில் முதல் ஐந்து இடங்களில் இடம் பெறாது.
எண்ணிமப் பண வழங்கீட்டு புலனாய்வு தளம் (DPIP)
முக்கியமான இந்திய வங்கிகள் ஆனது, எண்ணிமப் பண வழங்கீட்டு கண்காணிப்பு/ புலனாய்வுத் தளத்தினை (DPIP) உருவாக்குவதற்காக என்று இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்படுகின்றன. நிகழ்நேரப் புலனாய்வுப் பகிர்வு மூலம் எண்ணிமப் பண வழங்கீட்டு மோசடிகளைக் குறைப்பதே இதன் குறிக்கோள் ஆகும். பாதுகாப்பானப் பரிவர்த்தனைகளுக்கான எண்ணிமப் பொது உள்கட்டமைப்பாக DPIP செயல்படும். இந்திய ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையம் (RBIH) ஆனது, 5 முதல் 10 வங்கிகளுடன் இணைந்து இதற்கான முன்மாதிரியை உருவாக்கி வருகிறது. மோசடியைக் கண்டறிந்து தடுக்க என்று இந்தத் தளம் செயற்கை நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும். 2025 ஆம் நிதியாண்டில், வங்கி மோசடிகளில் சிக்கிய மொத்தத் தொகை 36, 014 கோடி ரூபாயாக உயர்ந்தது என்ற நிலையில் இது 2024 ஆம் நிதியாண்டில் பதிவான 12, 230 கோடி ரூபாயை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
தேசியச் செய்திகள்
NAVYA திட்டம்
மத்திய அரசானது, உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ராவில் NAVYA (இளைய வளரிளம் பருவப் பெண்களுக்கான தொழில் பயிற்சி மூலம் ஊக்கத்தைத் தூண்டுவது) என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு பயின்ற 16 முதல் 18 வயது வரையிலான சிறுமிகளுக்கு தொழில் பயிற்சி அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய தொழில் முறை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக என்று மரபுசாரா வேலை வாய்ப்புகளில் பெண்களுக்குப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. NAVYA திட்டம் ஆனது, பெண்கள் தலைமையிலான மேம்பாட்டினை ஊக்குவிப்பதன் மூலம் விக்ஸித் பாரத்@ 2047 திட்டத்தின் தொலைநோக்கு திட்டமிடலை ஆதரிக்கிறது. இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (MWCD) மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE) ஆகியவற்றின் ஒரு கூட்டு சோதனை முன்னெடுப்பாகும். இந்தத் திட்டமானது வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சில இலட்சிய நோக்கமுள்ள மாவட்டங்கள் மற்றும் பகுதிகள் உட்பட 19 மாநிலங்களில் உள்ள 27 மாவட்டங்களை உள்ளடக்கும்.
SC/ST ஆர்வலர்களுக்கான சிறப்பு PhD சேர்க்கை இயக்கம்
டெல்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது படியலிடப்பட்டச் சாதியினர் (SC) மற்றும் படியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பிரிவுகளைச் சேர்ந்த PhD ஆர்வலர்களுக்கான முதல் சிறப்பு சேர்க்கை இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது. முனைவர் மீதான படிப்பில் தொடர்ந்து நிலவி வரும் SC/ST மாணவர்களுக்கான சேர்க்கை இடப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த முக்கிய முன்னெடுப்பின் நோக்கமாகும். அரசாங்க இடஒதுக்கீடு விதிகளின் படி, இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் உயர்கல்வி சேர்க்கையில் SC பிரிவினருக்கு 15% இடங்களையும் ST பிரிவினருக்கு 7.5% இடங்களையும் ஒதுக்க வேண்டும். இருப்பினும், டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தரவு, PhD கல்வி நிலையில் பதிவான உண்மையான SC/ST சேர்க்கையானது இந்த இலக்குகளை விட குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. 2015 - 16 முதல் 2024- 25 ஆம் ஆண்டு வரை, SC சேர்க்கை 8.88 சதவீதத்திலிருந்து 9.69% ஆகவும், ST சேர்க்கை 0.97 சதவீதத்திலிருந்து 3.28% ஆகவும் உயர்ந்துள்ளது.
e-Rakt Kosh
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமானது இந்திய அரிய ரத்தத் தானம் செய்பவர்கள் பதிவேட்டை (RDRI), e-Rakt Kosh எனும் தேசிய இரத்த வங்கி மேலாண்மை தளத்துடன் ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது. e-Rakt Kosh ஆனது தேசிய சுகாதாரத் திட்டத்தின் (NHM) கீழ் உருவாக்கப்பட்டது. இது இரத்த வங்கிகள், இரத்தம் கிடைக்கும் தன்மை மற்றும் இரத்த தான முகாம்கள் பற்றிய நிகழ்நேரத் தகவல்களை வழங்குகிறது. இரத்தக் குழுவானது, மிகவும் இணக்கமான நன்கொடையாளர்களுக்கான அணுகலை எளிதாக்குவதன் மூலம் பாம்பே, Rh-null மற்றும் P-Null போன்ற சில அரிய இரத்த வகைகளைக் கொண்ட மக்களுக்குப் பயனளிப்பதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது. RDRI ஆனது இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையின் தேசிய குருதிக் கோளாறு சார்-தடுப்பாற்றலியல் நிறுவனம் (NIIH) மற்றும் நான்கு கூட்டு நிறுவனங்களால் உருவாக்கப் பட்டது.
பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (ToT) திட்டம் 2025
பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சகமானது, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் (ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்) கீழ் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (ToT) என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியது. பஞ்சாயத்துகளுக்காக என சொந்த ஆதார வருவாயை (OSR) உருவாக்கும் ஒரு திறனை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்துகிறது. இந்தத் திட்டம் ஆனது இராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் அபியான் (RGSA) திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் (IIM) இணைந்து இது நடத்தப்படும். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் மீதான நிதி சார் அதிகாரமளிப்பு மூலம் அடித்தள நிலையிலான நிர்வாகத்தினை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டுச் செய்திகள்
புதிய வகை பருப்பு விதைகள்
விதை தரச் சான்றிதழ் மற்றும் இயற்கை முறை வேளாண் சார் சான்றிதழ் துறை ஆனது, கான்பூர் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்ட புதிய வகை பருப்பு விதைகளைச் சீர்படுத்தியுள்ளது. மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்கள் குறித்த அச்சம் இல்லாமல், பச்சைப்பயறு மற்றும் உளுந்து சாகுபடியை மேற்கொள்வதற்கு வேண்டி விவசாயிகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. LGG 600 எனும் பச்சைப் பயறு வகையானது, நன்றாக வளர்ந்து 28வது நாளில் சீரான வளர்ச்சியுடன் பூக்கும் நிலையை எட்டியுள்ளது. கோட்டா 5 என்ற உளுந்துப் பயறு வகையானது, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகக் கண்டறியப் பட்டது.
புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்
புதிதாக புணரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தினைத் தமிழக முதல்வர் சமீபத்தில் திறந்து வைத்தார். வள்ளுவர் கோட்டம் ஆனது செம்மொழி தமிழ் கவிஞர் தத்துவஞானி வள்ளுவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இது தென்னிந்தியப் பாரம்பரியக் கட்டிடக் கலைஞரான V. கணபதி ஸ்தபதியால் வடிவமைக்கப் பட்டது.