TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 25-06-2025
தமிழ்நாடு
2024–25 நிதியாண்டில் நிகர FDI வரவு கடுமையான சரிவு
® இந்தியாவில் நிகர FDI வரவு , 2024–25 நிதியாண்டில் 96% வீழ்ச்சியடைந்து $0.4 பில்லியனாக குறைந்துள்ளது . 2023–24 நிதியாண்டில் இது $10.1 பில்லியனாக இருந்தது . ® நிகர FDI வீழ்ச்சி இருந்தாலும் , மொத்த உள்நாட்டு FDI 13.7% உயர்ந்து $81 பில்லியனை எட்டியுள்ளது . FY23 மற்றும் FY24- இல் இது $71 பில்லியனாக இருந்தது . ® FY22- இல் , இந்தியா $84.83 பில்லியன் FDI வரவுகளை பெற்றது . ® நிகர வெளிநாட்டு FDI (OFDI), ஆண்டுக்கு 75% உயர்ந்து FY25- இல் $29.2 பில்லியனாக அதிகரித்தது . ® OFDI அதிகரித்த முக்கிய இலக்குகளில் சிங்கப்பூர் , அமெரிக்கா , UAE, மொரிசியஸ் மற்றும் நெதர்லாந்து அடங்கும் . ® திருப்பி அனுப்புதல்கள் மற்றும் முதலீட்டு திரும்பப் பெறுதல்கள் 15.7% உயர்ந்து $51.5 பில்லியனை தொட்டுள்ளது . FY23- இல் இது $44.5 பில்லியனாக இருந்தது . ® அதிகரித்த மொத்த வரவுகள் இருந்தும் , வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் திரும்பப் பெறுதல்கள் அதிகரித்ததால் நிகர FDI குறைந்துள்ளது .
மிசோரம் இந்தியாவின் முதல் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டது
® ULLAS ( சமூகத்தில் அனைவருக்கும் வாழ்நாள் கற்றலைப் புரிந்துகொள்வது ) முயற்சியின் கீழ் அதிகாரப்பூர்வமாக முழு எழுத்தறிவு பெற்றதாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மாநிலமாக மிசோரம் மாறியுள்ளது . ® 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலம் 91.33% எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டிருந்தது , இது நாட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது . ® PLFS 2023–24 இன் படி , மிசோரம் இப்போது 98.2% எழுத்தறிவு விகிதத்தை அடைந்துள்ளது , இது இந்த மைல்கல் அங்கீகாரத்திற்கு வழிவகுத்தது .
மேம்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்புக்காக புதுப்பிக்கப்பட்ட பல நிறுவன மையம் ( MAC) தொடங்கப்பட்டது
® புலனாய்வுப் பணியகத்தின் ( IB) கீழ் செயல்படும் புதுப்பிக்கப்பட்ட பல நிறுவன மையம் ( MAC), இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்த புதுதில்லியில் திறக்கப்பட்டது . ® 2001 ஆம் ஆண்டு கார்கில் போருக்குப் பிறகு முதலில் கருத்தியல் ரீதியாக உருவாக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பதிப்பு , இப்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து காவல் மாவட்டங்களையும் ஒரு பாதுகாப்பான நெட்வொர்க் மூலம் இணைக்கிறது . ® RAW, ஆயுதப்படைகள் மற்றும் பல்வேறு மாநில காவல் பிரிவுகள் உட்பட 28 முகமைகளை உள்ளடக்கிய ஒரு மையப்படுத்தப்பட்ட உளவுத்துறை பகிர்வு தளமாக MAC செயல்படுகிறது . ® இந்த மேம்படுத்தப்பட்ட அமைப்பு பாதுகாப்பு நிறுவனங்களிடையே நிகழ்நேர ஒருங்கிணைப்பு மற்றும் உளவுத்துறை பகிர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது .
அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் மறுமேம்பாடு
® 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் , 18 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 86 மாவட்டங்களில் 103 மறுமேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைத்தார் . ® இந்தத் திட்டம் 1,300 நிலையங்களை நவீன ” நகர மையங்களாக ” மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது . ® உத்தரப் பிரதேசம் ( 157), மகாராஷ்டிரா ( 132), மற்றும் மேற்கு வங்கம் ( 101) ஆகியவை அதிக எண்ணிக்கையிலான நிலையங்களை அடையாளம் கண்டுள்ளன . தமிழ்நாட்டில் ஒன்பது ரயில் நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மறுமேம்படுத்தப்பட்டன : ® செயிண்ட் தாமஸ் மவுண்ட் ( சென்னை பிரிவு ) ® சமல்பட்டி ( சேலம் பிரிவு ) ® ஸ்ரீரங்கம் ( திருச்சி பிரிவு ) - ரங்கநாத சுவாமி கோயிலால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு ® திருவண்ணாமலை - திராவிட கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டது ® போளூர் , சிதம்பரம் , விருத்தாசலம் , மன்னார்குடி மற்றும் குளித்துறை ( கன்னியாகுமரி )
முக்கிய தினங்கள்
சர்வதேச ஒலிம்பிக் தினம் 2025 - ஜூன் 23
இந்தத் தினமானது நவீன கால ஒலிம்பிக் போட்டிகளின் மீதான ஒரு தோற்றத்தினை நினைவு கூர்கிறது. இந்த நாள் முதன்முதலில் 1948 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. 1894 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதியன்று சர்வதேச ஒலிம்பிக் குழு நிறுவப்பட்டதை நினைவு கூரும் விதமாக இத்தினம் நிறுவப்பட்டது. 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Let’s Move?’ என்பதாகும்.
உலக நீர் நிலையியல் தினம் 2025 - ஜூன் 21
இந்தத் தினமானது பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் ஆறுகள் போன்ற பல்வேறு நீர் நிலைகளின் புவியியல் அம்சங்களைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை நன்கு வலியுறுத்துகிறது. இந்தத் தினமானது, நீர்நிலையியல் குறித்த உலகளாவிய பெரும் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இத்தினமானது சர்வதேச நீர் நிலையியல் அமைப்பு (IHO) நிறுவப்பட்டதன் ஆண்டு நிறைவை நினைவு கூர்கிறது. பாதுகாப்பான வழிசெலுத்தல் மற்றும் பெருங்கடல் வளங்காப்பினை ஆதரிப்பதற்காக IHO ஆனது முதலில் 1921 ஆம் ஆண்டில் சர்வதேச நீர் நிலையியல் வாரியமாக நிறுவப்பட்டது. 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Seabed Mapping: Enabling Ocean Action’ என்பதாகும்.
சர்வதேச யோகா தினம் 2025 - ஜூன் 21
அன்றாட வாழ்வில் யோகா பயிற்சி செய்வதன் பல நன்மைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையானது இந்த ஒரு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வடக்கு அமரிக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாளாக உள்ள இந்த ஜூன் 21 ஆம் தேதியானது சர்வதேச யோகா தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Yoga for One Earth, One Health’ என்பது ஆகும்.
கோடைகாலச் சங்கராந்தி 2025 - ஜூன் 21
பூமியின் வட துருவம் ஆனது சூரியனுக்கு மிக அருகில் சாய்ந்து காணப்படும் போது கோடைகாலச் சங்கிராந்தி ஏற்படுகிறது. இந்த நிலையில் சூரியன் வானத்தின அதன் மிக உயர்ந்த உச்ச நிலையை அடைகிறது. ‘சங்கராந்தி’ என்ற ஒரு சொல்லானது, சூரியன் தனது திசையை மாற்றுவதற்கு முன்பு வானத்தில் அதன் இயக்கம் இடை நிறுத்தப்படும் புள்ளியைக் குறிக்கிறது. தோராயமாக 23.5 டிகிரி அளவில் சாய்ந்த புவியின் அச்சில், வடக்கு அமரிக்கோளம் ஆனது அதன் நேரடி கோணத்தில் அதிக சூரிய ஒளியைப் பெறுகிறது. மேலும், குளிர்காலத்தில் நுழைகின்ற தெற்கு அமரிக்கோளம், அதன் குறுகிய பகல் மற்றும் நீண்ட இரவை எதிர்கொள்கிறது.
உலக அகதிகள் தினம் 2025 - ஜூன் 20
அகதிகள் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்துவதையும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கான ஒரு புரிதலையும் அதற்கான ஆதரவையும் ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. அகதிகளின் முதன்மையான நிலை தொடர்பான 1951 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2001 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று இந்தத் தினமானது முதன்முதலில் உலகளவில் அனுசரிக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Solidarity with Refugees’ என்பதாகும்.
உலகப் பொழுதுபோக்கு நடை தினம் 2025 - ஜூன் 19
இந்தத் தினமானது, மக்கள் தங்கள் வேலையில் இருந்து சற்று இடைவெளியை எடுத்து சற்று மெதுவாக செயல்படுவதை நினைவூட்டுவதற்கானதாகும். இந்த நாள் ‘சாண்டரிங்’ என்ற சொல்லினால் குறிப்பிடப்படும் நிதானமாக நடக்கும் ஒரு பழக்கத்தினைப் பேணுமாறு அனைவரையும் ஊக்குவிக்கிறது. ஓட்டப் பயிற்சி (ஜாகிங்) பிரபலமடைந்து வருவதற்கு மறுமொழியாக, 1970 ஆம் ஆண்டு W.T. ரேப் அவர்களால் இத்தினம் உருவாக்கப்பட்டது.
தேசிய வாசிப்பு தினம் 2025 - ஜூன் 19
வாசிப்புப் பழக்கத்தையும் வாழ்நாள் முழுவதுமான கற்றலையும் ஊக்குவிப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தினமானது புதுவையில் நாராயண பணிக்கர் அவர்களை (P.N. பணிக்கர்) கெளரவிக்கிறது. அவர் கேரளாவில் ‘நூலகம் மற்றும் எழுத்தறிவு இயக்கத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். இந்தத் தினமானது, 2017 ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமரால் அதிகாரப்பூர்வமாகத் தேசிய அளவிலான அனுசரிப்பாக அறிவிக்கப்பட்டது.
மோதல்களில் பாலியல் வன்முறையினை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் 2025 - ஜூன் 19
மோதல்கள் அதிகம் நிகழும் மண்டலங்களில் பாலியல் வன்முறை தொடர்பான கடும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக இத்தினமானது 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் நிறுவப்பட்டது. மோதல்களில் நிகழும் பாலியல் வன்முறையை அகற்ற வேண்டியதன் ஒரு அவசியம் மற்றும் அமைதி மற்றும் பாதுகாப்பில் அதன் பேரழிவுகரமான தாக்கம் குறித்து ஒரு உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘Breaking the Cycle, Healing the Scars: Addressing the Intergenerational Effects of Conflict-Related Sexual Violence’ என்பதாகும்.
உலக சிறுநீரகப் புற்றுநோய் தினம் 2025 - ஜூன் 12
இது உலகில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது. இத்தினமானது, இந்த நோயைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக என சர்வதேச சிறுநீரகப் புற்றுநோய் கூட்டணியால் (IKCC) உருவாக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Show your kidneys some love’ என்பது ஆகும்.
மாநில செய்திகள்
இராஜஸ்தானின் Cash Plus மாதிரியின் சாதனைகள்
இராஜஸ்தானின் Cash Plus மாதிரி, புதிய குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களிடையே ஆரம்பகாலத் தாய்ப் பால் வழங்கல் விகிதத்தையும், பல்வேறு உணவு உட்கொள்ளும் தன்மையையும் அதிகரித்தது. இது நேரடிப் பலன் பரிமாற்றங்களை (DBT) நடத்தை மாற்றத்திற்கான தகவல் தொடர்பு உடன் இணைக்கும் இந்தியாவின் முதல் மாநில அரசின் சோதனைத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, தாய் மற்றும் சேய் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து, குடும்பம் சார்ந்த மற்றும் குழு ஊட்டச்சத்து ஆலோசனை வழங்கப்படுகிறது. ஒரு ஆய்வு அறிக்கையின்படி, 80% பெண்கள், மலிவு விலையிலான மற்றும் சத்தான உணவுக்கான அணுகல் மேம்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
உலகளாவிய வறட்சிக் கண்ணோட்டம் - 2025
இந்த முக்கிய அறிக்கையானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பினால் (OECD) வெளியிட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டிலிருந்து, உலகின் சுமார் 37% நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க அளவில் மண்ணின் ஈரப்பதம் குறைந்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் பல்வேறு மனிதச் செயல்பாடுகள் காரணமாக சமீபத்திய தசாப்தங்களில் புவியின் 40% பகுதியானது அடிக்கடி கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளது. பருவநிலை மாற்றமானது 2022 ஆம் ஆண்டு ஐரோப்பிய வறட்சியை சுமார் 20 மடங்கு அதிகரிக்கச் செய்தது மற்றும் தற்போதைய வட அமெரிக்க வறட்சியை சுமார் 42% அதிகரித்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகள் நீர் மின் நிலையங்களின் பல செயல்பாடுகளில் நீர் சார்ந்த இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும். சராசரி வறட்சிப் பாதிப்பின் காரணமாக பொருளாதாரச் செலவினம் ஆண்டிற்கு 3% - 7.5% வரை அதிகரிக்கிறது.
அரசியலில் பெண்கள் 2025 உண்மைத் தகவல் அறிக்கை
இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பால் வெளியிடப்பட்டது. 2025 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதி நிலவரப்படி, 27 நாடுகளில் 31 பெண்கள் அரசு மற்றும்/அல்லது அரசாங்கத் தலைவர்களாகப் பணியாற்றுகின்றனர். ஒற்றை அல்லது கீழ் அவைகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் 27.2 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் ஆவர் என்ற நிலையில் இது 1995 ஆம் ஆண்டில் 11 சதவீதமாக இருந்தது. ஆறு நாடுகளில் மட்டுமே ஒற்றை அவை அல்லது கீழ் அவைகளில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ருவாண்டா (64%), கியூபா (56%), நிகரகுவா (55%), அன்டோரா (50%), மெக்சிகோ (50%) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (50%) ஆகிய நாடுகள் மிகச் சிறப்பான செயல்திறனைக் கொண்டுள்ளன. உள்ளாட்சிப் பிரதிநிதி அமைப்புகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் (35.5 சதவீதம்) பெண்கள் ஆவர். இரண்டு நாடுகள் மட்டுமே அரசியலில் பெண்களின் பங்கேற்பில் 50 சதவீதத்தை எட்டி உள்ளது.
அணு ஆயுதம் குறித்த அறிக்கை 2025
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) வருடாந்திர முக்கியத் தகவல் புத்தகம் ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது. உலகளவில் சுமார் 12,241 அணு ஆயுதங்களும், இராணுவ இருப்புக்களில் ~ 9,614 அணு ஆயுதங்களும் உள்ளன. உலகளாவிய போர் ஆயுதங்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை ரஷ்யா (5,459) மற்றும் அமெரிக்கா (5,177) ஆகிய நாடுகள் கொண்டுள்ளன. 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாத நிலவரப்படி, இந்தியாவில் 180 அணு ஆயுதங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாத நிலவரப்படி, பாகிஸ்தானின் அணு ஆயுத கையிருப்பு 170 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் 600 அணு ஆயுதங்கள் உள்ளன என்பதோடு இது 2023 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டிற்கு ~100 என்ற அளவில் அதிகரித்து வருகிறது. உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒன்பது நாடுகள் - அமெரிக்கா, ரஷ்யா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆகும்.
சுற்றுச்சூழல் செய்திகள்
டிராவிடோகெக்கோ குன்னூர் - புதிய மரப் பல்லி வகை
குன்னூரைச் சுற்றி மட்டுமே இருப்பதாக நம்பப்படும் ஒரு புதிய வகை மரப் பல்லி ஆனது, தமிழ்நாட்டின் நீலகிரியில் கண்டறியப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல் மட்ட நீலகிரியின் குன்னூர் மலைகளில் உள்ள இந்தத் தனித்துவமான டிராவிடோகெக்கோ இனத்தின் ஒரு அதிகாரப் பூர்வப் பெயர் டிராவிடோகெக்கோ குன்னூர் ஆகும். இப்புதிய மரப் பல்லி வகை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மொத்த இனங்கள் தற்போது ஒன்பது ஆக உள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
குவாண்டம் 5G FWA
BSNL நிறுவனமானது, ஐதராபாத்தில் குவாண்டம் 5G என்ற நிலையான கம்பி வடம் சாராத இணைப்பு அணுகலை (FWA) பெருமளவு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்குப் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, SIM எதுவும் இல்லாத 5G FWA சேவையாகும் என்பதோடு இது 5G ரேடியோ வழியாக கம்பிவடம் சார்ந்த சேவை போன்ற இணைய வேகத்தை வழங்குகிறது. இதன் மூலம், உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி SIM எதுவும் இல்லாத 5G சேவையினை வழங்கும் முதல் இந்திய இணையதள சேவை வழங்குநராக BSNL மாறுகிறது.
சூரிய சக்தியால் இயங்கும் இந்தியாவின் புதிய சாதனம்
பெங்களூருவில் உள்ள நுண் மற்றும் மென் ரக பொருள் அறிவியல் மையத்தின் (CeNS) அறிவியலாளர்கள் அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான பசுமை ஹைட்ரஜன் சார்ந்த சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இது சூரிய சக்தி மற்றும் பூமியில் நிறைந்து காணப்படும் சில பொருட்களை மட்டுமே பயன்படுத்தி நீர் மூலக்கூறுகளைப் பிரிக்கிறது. இந்தச் செயல்முறையானது புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் மிக விலையுயர்ந்த வளங்கள் இல்லாதது. இதுவரை அறியப்பட்ட தூய்மையான எரிபொருட்களில் ஒன்றான பசுமை ஹைட்ரஜன் ஆனது, தொழிற்சாலைகளை கார்பன் நீக்கம் செய்யவும், வாகனங்களுக்கு ஆற்றல் அளிக்கவும் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேமிக்கும் திறனும் கொண்டது.
சர்வதேசச் செய்திகள்
ரேடாருக்குப் புலப்படாத குண்டுவீச்சு விமானம் B-2 ஸ்பிரிட்
அமெரிக்க விமானப்படையானது, ஈரானின் அணுசக்தித் தளங்களில் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்வதற்காக B-2 ஸ்பிரிட் எனப்படும் ரேடாருக்குப் புலப்படாத குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது, மிகப் பெரிதும் பலப்படுத்தப்பட்ட ஃபோர்டோ யுரேனிய வள இருப்பு மையம் உட்பட மூன்று இடங்களைக் குறி வைத்தது. ஃபோர்டோ ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் ‘கிரீடம்’ என்று அழைக்கப்பட்டது. B-2 ஆனது எரிபொருள் நிரப்பாமல் 6,000 கடல் மைல்களுக்கும் (11,000 கிலோ மீட்டர்) அதிகமான தூரத்திற்குச் செயல்படும் ஒரு திறனைக் கொண்டுள்ளது என்பதோடு இது அமெரிக்காவிலிருந்து நீண்ட தூர தாக்குதல்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இது 40,000 பவுண்டுகளுக்கும் (18,144 கிலோ) அதிகமான சுமையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதில் வழக்கமான மற்றும் அணு ஆயுதங்கள் ஆகிய இரண்டும் அடங்கும். அமெரிக்காவின் அணுசக்தி ஆயுத மும்மூர்த்தி அமைப்பின் ஒரு பகுதியாக B-2 ஆனது 16 B83 அணு குண்டுகளை ஏவக் கூடியது.
ஒட்டாவா ஒப்பந்தம் – பின்லாந்து
எஸ்டோனியா, லிதுவேனியா, லாட்வியா மற்றும் போலந்து ஆகியவற்றிற்குப் பிறகு ஒட்டாவா கண்ணிவெடி தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் 5வது ஐரோப்பிய நாடாக பின்லாந்து மாறுகிறது. பின்லாந்து நாடானது 2012 ஆம் ஆண்டில் ஒட்டாவா ஒப்பந்தத்தில் இணைந்தது. இந்த ஒட்டாவா ஒப்பந்தம் ஆனது, 1997 ஆம் ஆண்டில் கைகெழுத்திடப்பட்டு 1999 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. மனிதர்களுக்கு எதிரான கண்ணிவெடிகள் தடை உடன்படிக்கை (ஒட்டாவா ஒப்பந்தம்) ஆனது, மனிதர்களுக்கு எதிரான கண்ணிவெடிகளின் பயன்பாடு, இருப்பு, உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தைத் தடை செய்கிறது. தற்போது இது 164 ஒப்பந்த தார நாடுகளைக் கொண்டுள்ளது.
இஸ்ரேலின் சாம்சன் விருப்பத் தேர்வு
இஸ்ரேலின் ‘கடைசி முயற்சிச் சூழல்’ ஆனது சில நேரங்களில் ‘சாம்சன் விருப்பத்தேர்வு’ என்று குறிப்பிடப்படுகிறது. இந்தச் சொற்றொடர் ஆனது 1960 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இஸ்ரேலியத் தலைவர்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இஸ்ரேல் அதன் அதிகார இருப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தலை எதிர்கொண்டால் அணு சக்தி சார்ந்த பதில் நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதே இந்தக் கொள்கையாகும். ஒரு கோட்பாட்டளவில், இஸ்ரேல் அணுசக்தி பெறாத நாட்டிடமிருந்து கூட அதிகார இருப்பிற்கான அச்சுறுத்தலாக கருதும் ஒரு இராணுவத் தோல்வியை எதிர்கொண்டால் சாம்சன் விருப்பத் தேர்வு பொருந்தும். இஸ்ரேல் அமெரிக்கா தயாரித்த F-15, F-16 மற்றும் F-35 விமானங்களைக் கொண்டுள்ளது என்பதோடு இவை அனைத்தும் அணு குண்டுகளை இயக்கும் விமானங்களாக மாற்றி அமைக்கக் கூடியவை ஆகும். இஸ்ரேல் 750 முதல் 1,110 கிலோ வரை புளூட்டோனியத்தைக் கொண்டுள்ளது என்ற ஒரு நிலையில் இது சுமார் 187 முதல் 277 அணு ஆயுதங்களை உருவாக்கப் போதுமானதாக இருக்கும்.
தேசியச் செய்திகள்
இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பதற்கான SOP
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆனது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) சரிபார்ப்பதற்கான அதன் முக்கியச் சீர்தரச் செயல்பாட்டு நடைமுறையினைப் (SOP) புதுப்பித்துள்ளது. இதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்த வேட்பாளர்கள் EVM மீதான சரி பார்ப்புகளைக் கோர அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து இந்தப் புதுப்பிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட SOP ஆனது, வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதையும் தேர்தலின் நேர்மை தன்மையினை நிலை நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வேட்பாளர்கள் தற்போது தேர்தலில் பயன்படுத்தப்படும் EVM இயந்திரங்களில் சுமார் 5% வரையிலான சரிபார்ப்பைக் கோரலாம். இந்தச் செயல்முறையில் ஒரு இயந்திரத்திற்கு 1,400 வாக்குகள் வரையிலான மாதிரி வாக்கெடுப்பு அடங்கும். EVM முடிவுகள் VVPAT சீட்டுகளுடன் பொருந்தினால், இயந்திரம் சரிபார்க்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டுச் செய்திகள்
தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களின் சிறப்பம்சங்கள்
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 448 கிலோ மீட்டர் நீளமுள்ள நான்கு வழிச் சாலைகளுக்கு 3,858 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே திட்டத்தின் கீழ் சுமார் 1,681 கிலோ மீட்டர் நீளமுள்ள இரு வழிச் சாலைகளுக்கு 2,207 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 9,620 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைத் திட்டங்களுக்கு மொத்தம் 17,154 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆனது 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.