TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 24-06-2025
தமிழ்நாடு
iGOT கர்மயோகி 1 கோடி பயனர் மைல்கல்லைக் கடந்துள்ளது
® மிஷன் கர்மயோகியின் கீழ் ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சி தளமான iGOT கர்மயோகி , 1 கோடி பதிவுகளைத் தாண்டியுள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது . ® இது ஜனவரி 2023 இல் 3 லட்சம் பயனர்களிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் 30 மடங்கு அதிகரிப்பைக் குறிக்கிறது . ® பயனர் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் ஐந்து மாநிலங்கள் பீகார் , ஆந்திரப் பிரதேசம் , மத்தியப் பிரதேசம் , ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் . ® தேசிய சிவில் சர்வீசஸ் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் ( NPCSCB) கீழ் தொடங்கப்பட்ட iGOT கர்மயோகி , திறமையான , தொழில்முறை மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள சிவில் சேவையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது .
கடல்சார் துறையில் பெண்களின் பங்கை அதிகரிக்கும் வகையில் ‘ சாகர் மெய்ன் சம்மான் ’ கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது
® மே 18 அன்று , கடல்சார் துறையில் சர்வதேச பெண்களுக்கான தினத்தை முன்னிட்டு மையம் ‘ சாகர் மெய்ன் சம்மான் ’ கொள்கையை அறிமுகப்படுத்தியது . ® அதிகாரமளித்தல் , தலைமைத்துவம் , உள்ளடக்கம் , பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் கடல்சார் துறையில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் . ® 2030 ஆம் ஆண்டுக்குள் தொழில்நுட்ப கடல்சார் பாத்திரங்களில் 12% பெண் பிரதிநிதித்துவத்தை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது . ® இந்தியாவில் பெண் கடற்படையினரின் எண்ணிக்கை 341 (2014) இலிருந்து 2,557 (2024) ஆக உயர்ந்துள்ளது .
கோட்டாவில் பிரதான் மந்திரி திவ்யஷா கேந்திரா திறந்து வைக்கப்பட்டது
® ராஜஸ்தானின் கோட்டாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிரதான் மந்திரி திவ்யஷா கேந்திராவை ( PMDK) திறந்து வைத்தார் . ® மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மலிவு விலையில் மற்றும் தரமான உதவி சாதனங்களை வழங்குவதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது . ® தற்போது இந்தியா முழுவதும் மொத்தம் 45 PMDK மையங்கள் செயல்பட்டு வருகின்றன . ® இந்த முயற்சி சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி கழகத்தால் ( ALIMCO) செயல்படுத்தப்படுகிறது .
பொது விநியோக முறையில் ( PDS) புதிய முயற்சிகளை மத்தியரசு தொடங்கியுள்ளது
பொது விநியோக முறையை ( PDS) நவீனமயமாக்குவதற்காக மத்தியரசு மூன்று டிஜிட்டல் கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது : ® டிப்போ தர்பன் - டிப்போ அதிகாரிகளுக்கான சுய மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு இணையத்தளம் . ® அன்னா மித்ரா - பொது விநியோகத் துறை பங்குதாரர்களின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் டிஜிட்டல் தளம் ; தற்போது அசாம் , உத்தரகண்ட் , திரிபுரா மற்றும் பஞ்சாபில் செயலில் உள்ளது . ® அன்னா சஹாயதா - குஜராத் , ஜார்கண்ட் , தெலுங்கானா , திரிபுரா மற்றும் உத்தரபிரதேசத்தை அதன் சோதனை கட்டத்தில் உள்ளடக்கிய குடிமக்களுக்கான குறை தீர்க்கும் தளம் . ® இந்த முயற்சிகள் 81 கோடிக்கும் மேற்பட்ட PMGKAY பயனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன .
இதர செய்திகள்
ஹாலி வால் நட்சத்திரத்தைப் பற்றிய முதல் இந்தியக் கல்வெட்டு குறிப்பு
ஹாலி வால் நட்சத்திரத்தைப் பற்றிய முற்கால இந்தியக் கல்வெட்டு குறிப்பு ஆனது, ஆந்திரப் பிரதேசத்தில் கண்டறியப்பட்ட கி.பி. 1456 காலத்தினைச் சேர்ந்த ஸ்ரீசைலம் செப்புத் தகடு சாசனத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு ஆனது, சமஸ்கிருதம் மற்றும் நாகரி எழுத்து வடிவங்களில் உள்ளது. இது விஜயநகர மன்னர் மல்லிகார்ஜுனனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது. இது ஹாலியின் வால் நட்சத்திரத்தின் தோற்றத்தையும் அதன் விளைவாக ஏற்பட்ட ஒரு விண்கல் பொழிவு குறித்தத் தகவலையும் கொண்டுள்ளது. கி.பி 1456 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி திங்கட்கிழமையன்று, வால் நட்சத்திரம் மற்றும் விண்கல் பொழிவினால் ஏற்பட்ட ஒரு பேரழிவைத் தணிக்க ஒரு மத மானியம் வழங்கப்பட்டதாக இந்த சாசனம் கூறுகிறது. இந்தக் கல்வெட்டு ஆனது, வால் நட்சத்திரத் தோற்றங்களை, எதிர் காலத்தில் அடுத்து வரவிருக்கும் துரதிர்ஷ்டம் மற்றும் சில பேரழிவுகளுடன் தொடர்புபடுத்தும் பாரம்பரிய நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கிறது.
மாநில செய்திகள்
இராஜ நாகங்களின் மறு அறிமுகம் - மத்தியப் பிரதேசம்
மங்களூர் மிருகக்காட்சிசாலையில் இருந்து மத்தியப் பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்ட இரண்டு இராஜ நாகங்களில் ஒன்று வான் விஹார் தேசியப் பூங்காவின் பாம்புகள் காப்பகத்தில் உயிரிழந்தது. இராஜ நாகம் ஆனது அந்த மாநிலத்தில் காணப்படும் இனம் அல்ல. உலகின் மிகவும் நீளமான விஷப் பாம்பான இராஜ நாகம் 15 அடி நீளம் வரை வளரக் கூடியது. இது மிக ஈரப்பதமான, அடர்ந்த அடிமரங்களுடன் கூடிய இருண்ட காடுகள், குளிர்ந்த சதுப்பு நிலங்கள் மற்றும் பல்வேறு வாழ்விடங்களில் உள்ள சில மூங்கில் திட்டுகளில் வாழ்கிறது. அவை உயர்ந்த பசுமை மாறா காடுகள் மற்றும் பகுதியளவு பசுமை மாறா காடுகள் முதல் அதிக மழைப் பொழிவு கொண்ட கழிமுக சதுப்பு நிலங்கள் வரையிலான பல பகுதிகளில் பரவிக் காணப்படுகின்றன. இந்தியாவில், இராஜ நாகத்தின் வாழ்விட வரம்பில் மேற்குத் தொடர்ச்சி மலைகள், வட இந்திய தராய் (தாழ் நிலம்) மண்டலம், வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடற்கரைகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் சில பகுதிகள் ஆகியவை அடங்கும். இராஜ நாகங்கள் அவற்றின் மிகத் தனித்துவமான கூடு கட்டும் நடத்தைக்குப் பெயர் பெற்றவை. இருப்பினும், அவை செயற்கையாக அடைக்கப்பட்டிருக்கும் இடங்களில் ஒரு சரியான முறையில் / நன்றாக இனப்பெருக்கம் செய்யாது.
சுற்றுச்சூழல் செய்திகள்
இந்தியாவில் உள்ள அயல் இனங்கள்
கடந்த 60 ஆண்டுகளில் ஊடுருவும் அயல் இனங்களால் இந்தியா 127.3 பில்லியன் டாலர் (830 கோடி ரூபாய்) இழந்துள்ளதாக 2022 ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகில் ஊடுருவும் அயல் உயிரினங்களால் நிதி ரீதியாக மிக அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியாவினை இடம் பெறச் செய்கிறது. ஆனால் இந்தத் தரவானது, இந்தியாவில் அறியப்பட்ட 2,000+ அயல் உயிரினங்களில் இருந்து 10 ஊடுருவல் அயல் உயிரினங்களின் கணக்கிடப்பட்ட செலவுகளிலிருந்து மட்டுமே வருகிறது. ஆனால் மிகவும் பழமைவாத முறையிலான மதிப்பீடுகள் ஆனது, சுமார் 173 ஊடுருவல் தாவரங்களையும், 157 ஊடுருவல் விலங்குகளையும் குறிப்பிடுகின்றன. இந்தியாவில், இந்த அயல் உயிரினங்களை ஊடுருவல் இனமாக அறிவிப்பது 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (2022 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது) கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
பொருளாதாரச் செய்திகள்
அந்நிய நேரடி முதலீடு சரிவு - 2024
2025 ஆம் ஆண்டு உலக முதலீட்டு அறிக்கையானது வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த ஐக்கிய நாடுகளின் மாநாட்டினால் வெளியிடப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மூலதன உருவாக்கத்தில் 2.3% ஆனது அந்நிய நேரடி முதலீடு (FDI) வரவுகள் ஆகும். 2024 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 27.6 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்தது என்ற நிலையமையில் இது 2023 ஆம் ஆண்டில் பதிவானதை விட 1.8% குறைவாகும். இது 2020 ஆம் ஆண்டில் பதிவான தொகையை விட பாதிக்கும் குறைவாகும். தென்காசியாவில், பிராந்தியத்தின் அந்நிய நேரடி முதலீட்டில் இந்தியாவானது சுமார் 80% பங்கினைக் கொண்டுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் இந்திய நிதிகள் 2024
சுவிஸ் வங்கிகளில் 2024 ஆம் ஆண்டில், இந்திய நிதிகள் மூன்று மடங்கு அதிகரித்து 3.5 பில்லியன் சுவிஸ் ப்ராங்க் (CHF) ஆக (37,600 கோடி ரூபாய்) உயர்ந்தது. பெரும்பாலான இவ்வதிகரிப்பானது தனிப்பட்ட வாடிக்கையாளர் கணக்குகளிலிருந்து இல்லாமல் சில வங்கிசார் வழிகள் மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்கள் வைத்திருந்த நிதிகளிலிருந்து வந்தது. சுவிஸ் வங்கிகளில் மொத்த இந்தியப் பணம் 3.83 பில்லியன் CHF மதிப்பினை எட்டிய 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு இது மிக உயர்ந்த அதிகரிப்பாக உள்ளது. சுவிஸ் வங்கிகளில் உள்ள மொத்த இந்தியப் பணம் ஆனது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.83 பில்லியன் CHF மதிப்பினை எட்டியது. சுவிஸ் வங்கிகளில் உள்ள நிதிகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு 67வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது உலகளவில் 48வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
தேசியச் செய்திகள்
ஒரு தேசம், ஒரே நேரம்
இந்தியச் சீர் நேரத்தினை (IST) மிகவும் பிரத்தியேகமாகப் பயன்படுத்தச் செய்வதைக் கட்டாயமாக்குவதன் மூலம் நேரக் கணக்கீட்டைத் தரப்படுத்துவதற்கு என அரசாங்கம் புதிய விதிகளை முன்மொழிந்துள்ளது. சட்டமுறை அளவியல் (இந்திய நிலையான நேரம்) விதிகள், 2024 வரைவு ஆனது, சீர் முறை நேர நடைமுறைகளுக்கான ஒரு சட்டப்பூர்வக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சட்ட, நிர்வாக, வணிக மற்றும் பல அதிகாரப்பூர்வ ஆவணங்களுக்காக வேண்டி ஒரே அங்கீகரிக்கப்பட்ட நேரக் குறிப்பாக IST இருக்கும். தொலைத்தொடர்பு, வங்கி, பாதுகாப்பு, 5G மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கியமான உள்கட்டமைப்பில் ஒரு துல்லியமான நேரக் கணக்கீட்டை இந்தத் திட்டம் ஆதரிக்கிறது. அரசாங்கத்தின் முன்கூட்டிய ஒரு ஒப்புதலுடன் வானியல், வழி செலுத்துதல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கு சில விதிவிலக்குகள் அளிக்கப்படும்.
ஐந்தாவது தேசிய இரசவு வழங்கலுக்கான நேர மதிப்பீட்டு ஆய்வு (NTRS)
மத்திய அரசானது, ஐந்தாவது தேசிய இரசவு வழங்கலுக்கான நேர மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையினை (NTRS) வெளியிட்டுள்ளது. இரசவு வழங்கலுக்கான நேர மதிப்பீட்டு ஆய்வு (TRS) ஆனது, அனுமதி வழங்கீட்டுச் செயல்முறையின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக சரக்குப் பொருள்களுக்கான ஒரு இரசவு வழங்கலுக்கு எடுக்கும் நேரத்தை அளவிடுகிறது. இது துறைமுகங்கள், விமானச் சரக்கு வளாகங்கள் (ACC), உள்நாட்டுக் கொள்கலன் கிடங்குகள் (ICD) மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் (ICP) ஆகியவற்றில் எடுக்கும் நேரத்தைப் பகுப்பாய்வு செய்கிறது. இறக்குமதிகளில் சராசரி அனுமதி வழங்கீட்டு நேரம் (ART) 2023 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் துறைமுகங்களில் (~6 மணிநேரம்), ACC வளாகங்களில் (~5 மணிநேரம்) மற்றும் ICP சாவடிகளில் (~18 மணிநேரம்) குறைந்துள்ளது. ஆனால் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளில் ~12 மணி நேர அதிகரிப்பு பதிவாகி உள்ளது. ICP சாவடிகளில், 93.33% இறக்குமதிச் சரக்குகளானது 48 மணி நேர NTFAP 3.0 இலக்கை எட்டியது.
யோகா சங்கம் & யோகா பந்தன்
11வது சர்வதேச யோகா தினமானது ஜூன் 21 ஆம் தேதியன்று ‘Yoga for One Earth, One Health’ என்ற கருத்துருவுடன் அனுசரிக்கப்பட்டது. இதில் ‘யோகா சங்கம்’ என்ற பெருமளவில் மக்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியானது இந்தியா முழுவதும் 1,00,000 இடங்களில் நடைபெற்றது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்தியக் கலாசார உறவுகள் சபையானது (ICCR) 191 நாடுகளில் பல்வேறு யோகா நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது. கூடுதலாக, ICCR ‘யோகா பந்தன்’ நிகழ்வினையும் நடத்தியது. இது ஆயுஷ் அமைச்சகத்தின் கீழான ஒரு முதன்மையான சர்வதேசத் திட்டமாகும்.
தமிழ்நாட்டுச் செய்திகள்
TPS 5 நெல் வகை
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI), சம்பா மற்றும் தாளடி பயிர்ப் பருவங்களுக்கு என பிராந்தியம் சார்ந்த, குறைந்த உள்ளீடுகள் தேவைப்படும் நெல் வகைகளைப் பயன்படுத்தி முன்கூட்டியே திட்டமிடச் செய்யுமாறு விவசாயிகளை வலியுறுத்தியுள்ளது. டெல்டாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நெல் வகையான TPS 5 என்பது, மற்ற இடங்களில் 100 நாட்களில் முதிர்ச்சியடைகிறது, ஆனால் டெல்டா பகுதிகளில் இதற்கு 125 நாட்கள் ஆகிறது. இது தாமதமான அறுவடைகள், அதிகமான அளவு பூச்சி தாக்குதல் மற்றும் அதிகரித்த செலவினங்களை ஏற்படுத்துகிறது. ADT 53, 55, 56, மற்றும் 57 போன்ற குறுவை சாகுபடி நெல் வகைகளை இதற்காக TRRI பரிந்துரைத்தது. ADT 57 என்பது நேரடி விதைப்புக்கு ஏற்றது மற்றும் ADT 55 பாக்டீரியா இலை கருகல் (BLB) பாதிப்பிற்கு எதிரான தாங்குதிறனையும் கொண்டுள்ளது. ADT 53 ஆனது புழுங்கல் அரிசி வகைக்கான ஒரு நல்ல மாற்றாகவும், மேலும் ADT 59 ரகமானது இட்லி அரிசிக்கு விரும்பத் தக்கதாகவும் உள்ளன. உப்பு நீர் மற்றும் கடலோரப் பகுதிகளின் முனை பகுதிகளுக்கு, TRY (திருச்சி அரிசி) 1 முதல் 5 வரையிலான வகைகள் சிறந்தவையாக உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்படும் டெல்டா பகுதிகளுக்கு, CR1009 என்ற துணை 1 ரகமானது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மூன்று சக்கர மின்சார வாகனப் பயன்பாட்டினை ஏற்றல்
2025 ஆம் ஆண்டில் இதுவரையில் தமிழ்நாட்டில் மூன்று சக்கர மின்சார வாகன (EV) பயன்பாட்டின் பரவல் 2024 ஆம் ஆண்டிற்கான எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் ஒட்டு மொத்தம் 2,802 மூன்று சக்கர மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த வாகன விற்பனையில் மின்சார வாகன விற்பனையின் சதவீதமாக அளவிடப்படும் EV பயன்பாட்டு ஏற்பானது 2025 ஆம் ஆண்டில் 16.07% ஆக இருந்தது. இது 2024 ஆம் ஆண்டில் 3.92% ஆக இருந்தது.
163 ஆண்டுகள் பழமையான சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடம்
1862 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட சென்னை உயர் நீதிமன்றம் ஆனது 163 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இது 1892 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. தற்போது, அதன் சில பகுதிகளைப் புதுப்பிப்பதற்காக நீதிபதிகள் R. சுப்பிரமணியன், R. சுரேஷ் குமார், P.T. ஆஷா மற்றும் N. மாலா ஆகியோர் தலைமையில் ஒரு பிரத்தியேக குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மதராஸ் உயர்நீதிமன்றம் உலகில் லண்டன் நகரத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம் ஆகும்.