Current Affairs Sat Jun 21 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 21-06-2025

தமிழ்நாடு

தேர்தல் ஆணையம் ‘ ECINET’ ஒருங்கிணைந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துகிறது

® இந்திய தேர்தல் ஆணையம் ( ECI), பங்குதாரர்களுக்கு தேர்தல் சேவைகளுக்கான ஒற்றை - புள்ளி அணுகலை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த இணையதளமான ‘ ECINET’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது . ® இந்த இணையத்தளம் 40 க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் வலைத்தளங்களை ஒருங்கிணைத்து , தேர்தல் தொடர்பான செயல்முறைகளை நெறிப்படுத்துகிறது . ® தற்போதைய சட்டமன்ற இடைத்தேர்தல்கள் மற்றும் வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது ECINET செயல்படும் . ® தேர்தல் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை , செயல்திறன் மற்றும் மின்னியல் நிர்வாகத்தை மேம்படுத்துவதை இந்த தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது .

பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீட்டு ( PAI)

2.0 வலைத்தளம் அறிமுகம்

® பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் , 2023–24 நிதியாண்டிற்கான பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீட்டு ( PAI) 2.0 வலைத்தளம் மற்றும் உள்ளூர் குறிகாட்டி கட்டமைப்பு ( LIF) புத்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது . ® PAI 2.0, 2.5 லட்சத்திற்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகளின் செயல்திறன் மற்றும் முன்னேற்றத்தை , நிலைத்தன்மை வளர்ச்சி இலக்குகளின் உள்ளூர்மயமாக்கல் ( LSDGs) உடன் இணைந்து , 9 கருப்பொருள் பகுதிகளில் மதிப்பிடுவதற்கான பல்துறை மதிப்பீட்டு கட்டமைப்பாகும் . ® LIF புத்தகம் , தரவு சேகரிப்பு , சரிபார்ப்பு மற்றும் அறிக்கை செயல்முறைகளுக்கான ஒரு நிலையான செயல்முறை ( SOP) வழிகாட்டியை வழங்குகிறது

தேர்தல் ஆணையம் கைபே சி ஒப்படைப்பு வசதி மற்றும் பிரச்சார விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது

® இந்திய தேர்தல் ஆணையம் ( ECI), வாக்குச்சாவடிகளுக்கு அருகில் கைபே சி ஒப்படைப்பு வசதி மற்றும் பிரச்சார விதிமுறைகளை பகுத்தறிவுபடுத்த புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது . ® இந்த வழிகாட்டுதல்கள் , 1951- ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1961- ஆம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதிகளுடன் இணைகின்றன . புதிய விதிகளின் கீழ் : ® வாக்குச்சாவடியில் 100 மீட்டர் வரை மட்டுமே கைபே சி கள் அனுமதிக்கப்படும் , மேலும் அவை அணைக்கப்‌ பட்ட நிலையில்‌ இருக்க வேண்டும் . ® தேர்தல் நடத்தை விதி 49M, வாக்களிப்பின் இரகசியத்தை உறுதி செய்கிறது . இது கண்டிப்பாக அமல்படுத்தப்படும் . ® கைபே சி ஒப்படைப்பு வசதி , தடங்கல்களைத் தடுக்கவும் , வாக்காளர்களின் வசதியை மதித்து மென்மையான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டது .

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு : கே . உமாதேவி Vs தமிழ்நாடு அரசு – மகப்பேறு விடுப்பு ஒரு பேறுகால உரிமை

® ஒரு முக்கிய தீர்ப்பில் , உச்ச நீதிமன்றம் ” மகப்பேறு விடுப்பு ஒரு பெண்ணின் இனப்பெருக்க உரிமையின் அத்தியாவசிய பகுதி ” என்று தீர்ப்பளித்துள்ளது . இது அரசியலமைப்பின் பிரிவு 21 ( வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திர உரிமை ) கீழ் வருகிறது . ® தமிழ்நாட்டின் அடிப்படை விதி 101(a)- இன் கீழ் மகப்பேறு நலன்கள் மறுக்கப்பட்டதால் இந்த வழக்கு எழுந்தது . இந்த விதி , முதல் இரண்டு உயிருடன் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு நலன்களை வழங்குகிறது . ® நீதிமன்றம் , இத்தகைய கட்டுப்பாடு ஒரு பெண்ணின் மகப்பேறு கால தன் னியக்க உரிமையை மீறுகிறது என்று தீர்ப்பளித்தது . தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட பிற அரசியலமைப்புப் பிரிவுகள் : ® விதி 42 – நியாயமான மற்றும் மனிதாபிமான வேலை நிலைமைகள் மற்றும் மகப்பேறு உதவிகளை வழங்குவதற்கான கட்டளை . ® விதி 51(c) – அரசு , சர்வதேச சட்டம் மற்றும் ஒப்பந்தக் கடமைகளை மதிக்க வேண்டும் . ® மகப்பேறு நலன் சட்டம் , 1961 (2017- இல் திருத்தப்பட்டது ) இந்தியாவில் மகப்பேறு விடுப்புக் கொள்கைகளை நிர்வகிக்கிறது . இதில் நீட்டிக்கப்பட்ட நலன்கள் மற்றும் பணியிடப் பாதுகாப்புகள் அடங்கும் .

இதரச் செய்திகள்

போபால் நகரில் ரிண்டர்பெஸ்ட் காப்பு மையம்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் தேசிய அளவில் அதிகப் பாதுகாப்பு நடவடிக்கை தேவைப்படும் விலங்கு நோய் ஆய்வு நிறுவனமானது (ICAR-NIHSAD) A வகை ரிண்டர்பெஸ்ட் வைரஸ் காப்பு மையமாக நியமிக்கப்பட்டுள்ளது. விலங்கு சுகாதாரத்திற்கான உலக அமைப்பு (WOAH) மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகியவற்றினால் இது நியமிக்கப்பட்டுள்ளது. பாரிசில் நடைபெற்ற WOAH அமைப்பின் 92வது பொது அமர்வின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரிண்டர்பெஸ்ட் ஆனது இதற்கு முன்னதாக ‘கால்நடைகளின் மீதான பிளேக்’ என்று அழைக்கப் பட்டது. 2011 ஆம் ஆண்டில் உலகளவில் அழிக்கப் படுவதற்கு முன்பு இது ஓர் அழிவுகரமான கால்நடை நோயாக இருந்தது.

பிரபலமானவர்கள், விருதுகள், மற்றும் நிகழ்வுகள்

பான் பருவநிலை மாற்ற மாநாடு 2025

ஐக்கிய நாடுகளின் பருவ நிலையின் மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மீதான ஒரு உடன்படிக்கையின் (UNFCCC) ஜூன் பருவநிலைக் கூட்டங்கள் ஆனது ஜெர்மனியின் பான் எனுமிடத்தில் நடைபெற்றது. இது துணை அமைப்புகளின் 62வது கூட்டம் (SB 62) என்றும் அழைக்கப்படுகிறது. UNFCCC கட்டமைப்பில் இரண்டு நிரந்தரத் துணை அமைப்புகள் உள்ளன, அமலாக்கத்திற்கான துணை அமைப்பு (SBI) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக்கான துணை அமைப்பு (SBSTA). UNFCCC என்பது 1992 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட பருவநிலை குறித்தப் பேச்சு வார்த்தைகளுக்கான ஓர் அடிப்படையை வழங்கிய ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.

மாநிலச் செய்திகள்

கன்ஹா புலிகள் வளங்காப்பகம் 2025

உத்தரகாண்டின் டெஹ் ராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆனது, ‘இந்தியாவின் புலிகள் வாழ்விடங்களில் உள்ள குளம்பு கால் கொண்ட இனங்களின் நிலை’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கன்ஹா புலிகள் வளங்காப்பகம் (KTR) ஆனது, அங்கிலேட்டுகளின் அல்லது குளம்புக் கால்கள் கொண்ட தாவரம் உண்ணும் இனங்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் பெரும் முன்னணிப் புலி வாழ்விடமாக உருவெடுத்துள்ளது. இந்த ஒரு அறிக்கையின்படி, ‘கன்ஹா புலிகள் வளங்காப்பகம் ஆனது இந்தியாவின் முக்கியப் புலிகள் வளங்காப்பகங்களில் அதிக அங்கிலேட்டுகளின் எண்ணிக்கையை (1,02,485) கொண்டுள்ளது.’ மொத்த உயிரினங்களின் நிறையானது 12.6 மில்லியன் கிலோகிராம்களைத் தாண்டி உள்ளது என்பதோடு இது கன்ஹா வளங்காப்பகத்தின் நாட்டின் மிகவும் இறை வளம் நிறைந்த புலி வாழ்விடமாக மாற்றுகிறது.

அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்

QS அமைப்பின் உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2026

உலகளவில், அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (MIT) ஆனது இந்த ஆண்டும் 14வது முறையாக ‘உலகின் சிறந்த ஒரு கல்வி நிறுவனம்’ என்ற இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த ஆண்டு தர வரிசையில், 12 இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழக நிறுவனங்கள் (IIT) உட்பட மொத்தம் 54 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. எட்டு பல்கலைக்கழகங்கள் புதிதாக இடம் பெற்றுள்ளன. இந்தியா தற்போது இந்தத் தரவரிசையில் அதிகப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்ற நான்காவது நாடாக உள்ளது. அமெரிக்கா (192), ஐக்கியப் பேரரசு (90), மற்றும் சீனா (72) ஆகியவை மட்டுமே இந்தத் தர வரிசையில் இந்தியாவை விடவும் மிகவும் அதிக எண்ணிக்கையிலான பல்கலைக் கழகங்களைக் கொண்டுள்ளன. டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (123) மற்றும் மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (129) ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவில் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (180) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சுற்றுச்சூழல் செய்திகள்

ஆரவல்லி மலையில் போர்துலாகா பாரத்

இராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு பாறை பாங்கான மற்றும் பகுதியளவு வறண்ட நிலப்பரப்பில் போர்துலாகா பாரத் என்ற புதிய பூக்கும் வகை தாவர இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது, இது IUCN வகைப்பாட்டின் கீழ் போதியத் தரவுகள் இல்லாத இனமாக வகைப் படுத்தப் படுள்ளது. போர்துலாகா பாரத் என்பது போர்துலாகா இனத்தைச் சேர்ந்தது. இந்தப் போர்துலாகா பேரினமானது நான்கு உள்ளூர் இனங்கள் உட்பட இந்தியாவில் 11 அறியப் பட்ட இனங்களுடன், உலகளவில் சுமார் 153 இனங்களைக் கொண்டுள்ளது.

இரண்டு புதிய மண் புழு இனங்கள்

காஞ்சூரியா திரிபுராசயென்சிஸ் மற்றும் காஞ்சூரியா பிரியசங்கரி ஆகிய இரண்டு புதிய மண் புழு இனங்கள் ஆனது திரிபுராவில் கண்டறியப் பட்டுள்ளன. வடகிழக்கு இந்தியாவில் மட்டுமே காணப்படும் காஞ்சூரியா இனத்தில், இந்தப் புதிய சேர்க்கைகளுடன் தற்போது 10 இனங்கள் உள்ளன. இது திரிபுராவில் பதிவு செய்யப்பட்ட மெகாட்ரைல் வகை புழு இனங்களின் மொத்த எண்ணிக்கையை 38 ஆக அதிகரிக்கிறது. மண் புழு வகைப்பாட்டில் பிரியாசங்கர் சௌத்ரியின் வாழ்நாள் பணிக்காக வேண்டி காஞ்சூரியா பிரியசங்கரி என்று இதற்கு பெயரிடப்பட்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

சாதாரண பருப்பொருளைக் கண்டறிதல்

முதன்முறையாக, விரைவு ரேடியோ அலை உமிழ்வு (Fast Radio Bursts-FRB) எனப்படும் ஆற்றல் வாய்ந்த சில அண்ட சமிக்ஞைகளைப் பயன்படுத்தி பேரண்டத்தின் இதுவரை தவறு விட்ட சாதாரணப் பருப்பொருளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது வரை, பேரண்டத்தின் சாதாரண அல்லது பேரியானிக் பொருளில் குறைந்தது பாதி கணக்கிடப்படவில்லை என்பதை அறிவியலாளர்கள் அறிவர். கரும்பொருள் மற்றும் இருண்ட ஆற்றல் என்பது பேரண்டத்தின் மிகப் பெரும்பகுதியை நிரப்பி உள்ளன. ஆனால் பேரண்டத்தின் மீதமுள்ள பகுதியானது அண்ட பேரியான்கள் அல்லது மிகவும் சாதாரணப் பருப்பொருளால் ஆனது.

வெப்ப அடிப்படையிலான புற்றுநோய்ச் சிகிச்சை

இந்திய ஆராய்ச்சியாளர்கள் நுண்ணிய அளவிலான துகள்களை ஒரு தனித்துவமானக் கோப்பை போன்ற வடிவத்துடன் ஒருங்கிணைப்பதற்காக என்று புதுமையான ஒரு படி நிலை முறையை உருவாக்கியுள்ளனர். இந்த நுட்பம் ஆனது, மிகப் பொதுவாக நுண் கோப்பைகள் என்று அழைக்கப்படுகின்ற PEGylated என்ற பகுதியளவு கவசமுடைய நுண் துகள்களை உருவாக்குவதை மிகவும் எளிதாக்குகிறது. வெப்ப அடிப்படையிலான ஒரு சிகிச்சை மூலம் புற்றுநோய் செல்களை எரிக்க இதைப் பயன்படுத்தலாம்.

SPArc சிகிச்சை

ஒரு நோயாளியின் அடினாய்டு சிஸ்டிக் கார்சினோமா (ACC) சிகிச்சைக்கு அமெரிக்கா மிகவும் முதன்முறையாக படிநிலையிலான பாதிப்பிட ஆய்வு மற்றும் ஒரு நெகிழ்வான புரோட்டான் கற்றை உட்செலுத்து சிகிச்சை (step-and-shoot spot-scanning proton arc therapy- SPArc) என்ற நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது. சுற்றியுள்ளத் திசுக்களைச் சேதமாக்காத வகையில், புரோட்டான் கற்றைகள் மூலம் கட்டிகளை குறி வைப்பதன் மூலம் SPArc நுட்பம் செயல்படுகிறது. ACC என்பது பொதுவாகவே உமிழ்நீர்ச் சுரப்பிகள் அல்லது தலை மற்றும் கழுத்தின் பிற பகுதிகளில் உருவாகின்ற ஒரு அரிதான புற்றுநோயாகும். ஆனால் இந்தத் தொழில்நுட்பங்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால் ஒரு சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.

சர்வதேசச் செய்திகள்

இந்தியா மற்றும் G7 உச்சி மாநாடு 2025

கனடாவின் கனானாஸ்கிஸ் எனுமிடத்தில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்றார். ‘ஆற்றல் பாதுகாப்பு: மாறி வரும் உலகில் அணுகல் மற்றும் மலிவு விலையை உறுதி செய்வதற்கான பல்வகைப் படுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு’ என்ற அமர்வில் அவர் உரையாற்றினார். 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக புதிய உயர் ஆணையர்களை நியமிக்க இந்தியாவும் கனடாவும் ஒப்புக் கொண்டுள்ளன. இதனுடன் சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு நான்கு நாட்கள் அளவிலான சுற்றுப் பயணத்தையும் பிரதமர் மேற்கொண்டார்.

தமிழ்நாட்டுச் செய்திகள்

தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி 2025

இந்த ஆண்டு ஆறாவது முறையாக நமது மாநிலத்தில் காற்றாலை மின் உற்பத்தி 100 மில்லியன் அலகு (Mu) குறியீட்டை (113.09) தாண்டியது. 2024 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நேதியன்று அதிகபட்ச தினசரி உற்பத்தி 111.174 Mu ஆக பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மாநிலமானது, 11,361 MW என்ற ஒரு அளவிலான நிறுவப்பட்ட காற்றாலை மின்சார உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது மற்றும் ஆண்டுதோறும் சுமார் 13,000 Mu மின்சாரத்தின் உற்பத்தி செய்கிறது.

சமகால இணைப்புகள்