Current Affairs Sun Jun 08 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 08-06-2025

தமிழ்நாடு

இந்திய இராணுவம் உத்தராகண்டத்தில் முதல் FM வானொலி நிலையத்தை தொடங்கியது

® பி த் தோராகர் மாவட்டத்தில் ’ ஆபரேஷன் சத்பாவனா ’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது ® ’ பஞ்ச்சுல் பல்ஸ் ’ என்ற பெயரில் 88.4 FM அலைவரிசையில் ஒலிபரப்பு ® இராணுவத்திற்கும் எல்லைப்புற சமூகங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே நோக்கம் ® உள்ளூர் வரலாறு , கலாச்சாரம் , வேளாண்மை , வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சாதனைகள் பற்றிய ஒலிபரப்புகள் ® இராணுவ பொது பள்ளி , பஞ்ச்சுல் பிரிகேடில் இருந்து 12 கிமீ ஆரம் வரை ஒலிபரப்பு

நிலையான வேளாண்மைக்கு FCO- யின் கீழ் 35 உயிரி ஊக்கி கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

® 1985 உரங்கள் கட்டுப்பாட்டு உத்தரவு ( FCO) கீழ் வேளாண்மை அமைச்சகத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது . ® இந்தியாவில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட உயிரி ஊக்கி க ளின் எண்ணிக்கை 45- ஐத் தாண்டியுள்ளது ( மே 2024- ல் முதல் 11 பதிவானது ). ® நோக்கம் : தாவரங்களின் எதிர்ப்புத் திறன் , ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் விளைச்சலை காலநிலை அழுத்தத்தில் மேம்படுத்துதல் . ® முக்கிய வகைகள் : கடற்பாசி சாறுகள் , ஹியூமிக் அமிலங்கள் , புரத ஹைட்ரோலைசேட்டுகள் , நொதி பொருட்கள் . ® நிலையான வேளாண்மையை ஆதரித்து , உலகளாவிய உயிரி ஊக்கி கள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கிறது .

நுவாக்சோவிட் கோவிட் -19 தடுப்பூசி அமெரிக்க FDA- ஆல் அங்கீகரிக்கப்பட்டது

® நோவாவாக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ; புரதம் - அடிப்படையிலான ( mRNA அல்லாத ) தடுப்பூசி . ® SARS-CoV-2 வைரஸின் JN.1 வகையினை இலக்காகக் கொண்டது . ® நோய்தொற்று ஏற்படுத்தாத கதிர் வடிவ புரதத்தை பயன்படுத்தி நோயெதிர்ப்பு வினையைத் தூண்டுகிறது . ® கோவிட் -19 தடுப்பூசிக்கு மாற்று முறையை வழங்குகிறது .

SKUAST- ஜம்முவில் CRISPR ஐப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் மரபணு திருத்தப்பட்ட செம்மறி உருவாக்கப்பட்டது

® ஷேர் - இ - காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ( SKUAST), ஜம்மு , CRISPR-Cas9 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் மரபணு திருத்தப்பட்ட செம்மறி ஆடுகளை உருவாக்கியுள்ளது . ® உள்ளூர் மெரினோ ஆட்டுக்குட்டியில் மயோஸ்டாடின் மரபணுவை விஞ்ஞானிகள் திருத்தினர் , இதன் விளைவாக ஐரோப்பிய டெக்சல் செம்மறி ஆடுகளுடன் ஒப்பிடக்கூடிய தசை நிறை 30% அதிகரித்தது . ® இது கால்நடை மரபியல் மற்றும் துல்லியமான இனப்பெருக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது . ® இதே குழு முன்னதாக 2012 இல் இந்தியாவின் முதல் பஷ்மினா ஆடு ’ நூரி ’ யை குளோன் செய்தது .

சமகால இணைப்புகள்