Current Affairs Thu May 15 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 15-05-2025

தமிழ்நாடு

இந்தியாவின் முதல் யானைப்‌ பாகன்கள்‌ கிராமம் முதுமலை புலிகள் காப்பகத்தில் நிறுவப்பட்டுள்ளது .

® முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தேப்பாக்காடு யானை முகாமில் , இந்தியாவில் முதல் முறையாக யானைப்‌ பாகன்க‌ளுக்காக 44 வீடுகள் கட்டப்பட்டுள்ளன . ® நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் 681 சதுர கி . மீ காடுபகுதியை உள்ளடக்கியது . ® தேப்பாக்காடு யானை முகாம் , பிரிட்டிஷ் காலத்தில் நிறுவப்பட்டது . இது ஆசியாவின் மிகப் பழமையான யானை முகாம் ஆகும் . தற்போது 27 யானைகள் இங்கு வளர்க்கப்படுகின்றன . ® இந்திய யானை முகாம்களில் யானைப்‌ பாகன்க‌ளுக்காக தனி வீடுகள் கட்டப்பட்டது இதுவே முதல் முறை .

சமகால இணைப்புகள்