TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 01-04-2025
தமிழ்நாடு
51- வது G7 உச்சிமாநாடு 2025 கனடாவில் நடைபெற உள்ளது ; இந்தியா பங்கேற்காது
® 51- வது G7 உச்சிமாநாடு ஜூன் 15-17, 2025 ஆம் தேதிகளில் கனடாவின் அல்பர்ட்டா மாநிலத்தில் உள்ள கானாஸ்கிஸ் நகரில் நடைபெற உள்ளது . 2002- க்கு பிறகு இரண்டாவது முறையாக இந்த நகரம் ஹோஸ்ட் செய்கிறது . ® இந்த உச்சிமாநாடு முதல் G7 கூட்டத்தின் 50- வது ஆண்டுவிழாவை குறிக்கிறது . ® கனடாவுடனான நடப்பு வெளியுறவுப் பதட்டங்கள் காரணமாக , 2019 முதல் ஒவ்வொரு உச்சிமாநாட்டிலும் பங்கேற்ற இந்தியா இந்த முறை பங்கேற்காது . ® முந்தைய உச்சிமாநாடுகள் ஜெர்மனி ( 2022), ஜப்பான் ( 2023), மற்றும் இத்தாலி ( 2024) ஆகிய நாடுகளில் நடைபெற்றன . ® G7 உறுப்பு நாடுகள் : கனடா , பிரான்ஸ் , ஜெர்மனி , இத்தாலி , ஜப்பான் , இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா .
நிலக்கரி மத்திய அமைச்சகம் ‘C CARES
2.0’ இணைய த்தளத்தை தொடங்கியது
® நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் நிலக்கரி தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய சேவைகளை எளிதாக்கும் வகையில் C CARES பதிப்பு 2.0 எனும் மேம்படுத்தப்பட்ட இணைய த்தளத்தை தொடங்கியுள்ளது . ® நிலக்கரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( CMPFO) வழங்கும் சேவைகளுக்கான இந்த மேம்படுத்தப்பட்ட தளத்தின் முக்கிய அம்சங்கள் : நிகழ்நேர கண்காணிப்பு , நேரடி நன்மை பரிமாற்றம் ( DBT), மொபைல் வழியாக அணுகல் ® CMPFO 1948- ல் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் நிலக்கரி தொழிலாளர்களின் ஓய்வூதிய நலன்களை நிர்வகிக்கும் பொருட்டு நிறுவப்பட்டது .
தபால் துறையின் ’ து ருவா ’: இந்தியாவின் டிஜிட்டல் முகவரி உள்கட்டமைப்பு
® இந்திய தபால் துறை ( Department of Posts - DoP) ’ த்ருவா ’ (DHRUVA - Digital Hub for Reference and Unique Virtual Address) க்கான கொள்கை கட்டமைப்பை வெளியிட்டுள்ளது . ® து ருவா ஒரு தேசிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ( DPI), இது ஜியோ - கோடட் கட்டமைப்பை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்துவமான டிஜிட்டல் முகவரியை வழங்குகிறது . து ருவாவின் அமைப்பு : ® டிஜிட்டல் தபால் குறியீட்டு எண் ( DIGIPIN): ® 10- இலக்க எண் - எழுத்து குறியீடு , இது புவியியல் ஆயங்களை அடிப்படையாகக் கொண்டது . ® இந்தியாவை 4x4 மீட்டர் சீரான கட்டங்களாக பிரிக்கிறது . டிஜிட்டல் முகவரி அடுக்கு : ® பயனர் - மையம் மற்றும் சம்மத அடிப்படையிலான அமைப்பு . ® DIGIPIN- உடன் இணைக்கப்பட்ட தனிப்பயன் முகவரி லேபிள்களை அனுமதிக்கிறது
ஜ ன் ஔச தி கேந்திரா ( JAK) அனுபவக் கற்றல் திட்டம் 2025 தொடங்கப்பட்டது
® ’ சேவா சே சீகேன் – செய்வதன் மூலம் கற்றல் ’ பிரச்சாரத்தின் கீழ் இந்திய அரசு ஜ ன் ஔச தி கேந்திரா அனுபவக் கற்றல் திட்டம் 2025- ஐ தொடங்கியுள்ளது . ® சமூக பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் இளைஞர்களின் திறன் வளர்ச்சி இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் . ® ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஜ ன் ஔச தி கேந்திராவில் ஐந்து இளைஞர் தன்னார்வலர்கள் பணியமர்தப்படுவார்கள் . ® ஜ ன் ஔச தி கேந்திராக்கள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் , தரமான ஜெனரிக் மருந்துகளை வழங்குகின்றன . ® இந்த முயற்சி நடைமுறை அனுபவத்தை வழங்கும் மற்றும் பொது சுகாதார சேவைகளை ஆதரிக்கும் .