Current Affairs Thu Mar 06 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 06-03-2025

தமிழ்நாடு

இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படும் பகுதியளவு மீக்குளிர்‌ நிலையிலான ஏவுகல இயந்திரத்தினை அக்னிகுல் காஸ்மோஸ் வெற்றிகரமாக சோதித்தது

® சென்னையை தளமாகக் கொண்ட தனியார் விண்வெளிநுட்பம்‌ சார்‌ புத்தொழில்‌ நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் , இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படும் பகுதியளவு மீக்குளிர்‌ நிலையிலான ஏவுகல இயந்திரத்தினை வெற்றிகரமாக சோதித்துள்ளது . ® இது இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் ஒரு முக்கிய தொழில்நுட்ப மைல்கல்லைக் குறிக்கிறது , இது உள்நாட்டு உந்துவிசை திறன்களை மேம்படுத்துகிறது . ® பகுதியளவு மீக்குளிர்‌ நிலையிலான ஏவுகல இயந்திரத்தி கள் திரவ ஆக்ஸிஜன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்துகின்றன , இது வழக்கமான இயந்திரங்களை விட மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது .

ISRO இந்திய விண்வெளி சூழ்நிலை மதிப்பீட்டு அறிக்கை ( ISSAR)

2024 ஐ வெளியிட்டது

® ISRO இந்திய விண்வெளி சூழ்நிலை மதிப்பீட்டு அறிக்கை ( ISSAR) 2024 ஐ வெளியிட்டுள்ளது , இது விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வில் ( SSA) முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது . ® SSA விண்வெளி சூழலைக் கண்காணித்தல் , சாத்தியமான மோதல் அச்சுறுத்தல்களை மதிப்பிடுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது . ® 2024 ஆம் ஆண்டில் , விண்வெளி குப்பைகள் மற்றும் பிற பொருட்களிலிருந்து இந்திய செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க ISRO 10 மோதல் தவிர்ப்பு முயற் சிகளை ( CAM கள் ) நடத்தியது . உலகளாவிய விண்வெளி செயல்பாடு ( 2024): ® 254 வெற்றிகளுடன் 261 ஏவுதல் முயற்சிகள் ® உலகளவில் 2578 செயல்பாட்டு செயற்கைக்கோள்கள் சேர்க்கப்பட்டன இந்தியாவின் விண்வெளி இருப்பு ( 2024 இறுதி வரை ): ® 136 விண்கலங்கள் ஏவப்பட்டன ® குறைந்த பூமி சுற்றுப்பாதையில் ( LEO) 22 செயல்பாட்டு செயற்கைக்கோள்கள் ® புவி ஒத்திசைவற்ற சுற்றுப்பாதையில் ( GEO) 31 செயல்பாட்டு செயற்கைக்கோள்கள்

இந்தியா AMCA- வை அங்கீகரித்தது : உள்நாட்டு 5- வது தலைமுறை நுட்பம்‌ சார்ந்த ரேடாருக்குப்‌ புலப்படாத போர் விமான திட்டம்

® இந்திய அரசு மேம்பட்ட நடுத்தர போர் விமானம் ( AMCA) திட்டத்தை அங்கீகரித்துள்ளது - இது 5- வது தலைமுறை நுட்பம்‌ சார்ந்த ரேடாருக்குப்‌ புலப்படாத போர் விமான திட்டம் . ® இந்தத் திட்டம் பாதுகாப்பு அமைச்சகத்தின் DRDO- வின் கீழ் உள்ள வானூர்தி மேம்பாட்டு முகமையால் ( ADA)- ஆல் உருவாக்கப்பட்டு வருகிறது . ® AMCA என்பது 25 டன் எடையுள்ள , இரட்டை எஞ்சின் , பல்நோக்கு மறைநிலை போர் விமானமாகும் , இது மேம்பட்ட ஏவியோனிக்ஸ் , சென்சார் இணைவு மற்றும் அதிநவீன மறைநிலை வடிவமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது . ® இந்தத் திட்டம் இந்திய விமானப்படையை ( IAF) உலகளாவிய அடுத்த தலைமுறை போர் சக்திகளில் அமெரிக்கா , ரஷ்யா மற்றும் சீனாவுடன் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது . ® செயல்பாட்டிற்கு வந்ததும் , AMCA இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் வான் மேன்மைத் திறன்களை கணிசமாக அதிகரிக்கும் .

அரிவாள் உயிரணு நோய்க்கான இந்தியாவின் முதல் மதிப்பீட்டு அளவுகோல் ( ISSSI)

® இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR) அரிவாள் உயிரணு நோய்க்கான இந்தியாவின் முதல் மதிப்பீட்டு அளவுகோ லை உருவாக்கியுள்ளது , இது ICMR-SCD Stigma Scale for India (ISSSI) என பெயரிடப்பட்டுள்ளது . ® இது இந்தியாவில் முதல் முறையாகவும் , உலகளவில் நான்காவது முறையாகவும் , இந்தியாவின் மாறுபட்ட சமூக சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது . ® துணை - சஹாரா ஆப்பிரிக்காவிற்குப் பிறகு அரிவாள் உயிரணு நோயின் இரண்டாவது மிக உயர்ந்த சுமையை இந்தியா கொண்டுள்ளது . ® இந்த நோயுடன் தொடர்புடைய சமூக களங்கத்தை நன்கு புரிந்துகொள்ளவும் நிவர்த்தி செய்யவும் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளில் இந்த அளவுகோல் பயன்படுத்தப்படும் .

இந்தியா

நான்காவது

பெரிய

பொருளாதார

நாடாக

மாறும்

®     

PHD வர்த்தக

மற்றும்

தொழில்துறை

சபையின் (PHDCCI) அறிக்கையின்படி , 2026 ஆம்

ஆண்டுக்குள்

ஜப்பானை

விஞ்சி , இந்தியா

உலகின்

நான்காவது

பெரிய

பொருளாதாரமாக

மாறும்

என்று

எதிர்பார்க்கப்படுகிறது .

®     

இந்தியாவின்

மொத்த

உள்நாட்டு

உற்பத்தி

வளர்ச்சி FY25 இல் 6.8% ஆகவும் , FY26

இல்

7.7% ஆகவும்

இருக்கும்

என்று

கணிக்கப்பட்டுள்ளது .

®     

FY26 க்கான

இந்தியாவின்

மொத்த

உள்நாட்டு

உற்பத்தி

®     

CRISIL ரேட்டிங்ஸ்

லிமிடெட்

அறிக்கையின்படி , FY26 இல்

இந்தியாவின்

மொத்த

உள்நாட்டு

உற்பத்தி 6.7% ஆக

வளரும்

என்று

எதிர்பார்க்கப்படுகிறது .

பாரத்

ரன்பூமி

தரிசனம்

தொடங்கப்பட்டது

®     

  இந்திய

குடிமக்களுக்கு

வரலாற்று

முக்கியத்துவம்

வாய்ந்த

பகுதிகளைத்

திறப்பதற்காக

பாரத்

ரன்பூமி

தரிசனம்

முயற்சி

தொடங்கப்பட்டுள்ளது .

®     

  இந்த

முயற்சியின்

கீழ்

ஜம்மு & காஷ்மீரில் 11 மற்றும்

அருணாச்சலப்

பிரதேசத்தில் 21 இடங்கள்

உட்பட 77 தளங்களை

அரசாங்கம்

அடையாளம்

கண்டுள்ளது .

விங்கட்

ரைடர்

பயிற்சி

®     

இந்திய

ராணுவமும்

இந்திய

விமானப்படையும்

கிழக்குப்

பகுதியில்

ஒரு

கூட்டு

இராணுவப்

பயிற்சியான ” விங்கட்

ரைடர் ”- ஐ

வெற்றிகரமாக

நடத்தின .

®     

இந்தப்

பயிற்சி

சிறப்பு

வான்வழி

நடவடிக்கைகளில்

கவனம்

செலுத்தியது .

எக்குவேரின் ’ கூட்டுப்

பயிற்சி

தொடங்கியது

®     

இந்திய

இராணுவம்

மற்றும்

மாலத்தீவு

தேசிய

பாதுகாப்புப்

படை

இடையேயான

கூட்டு

இராணுவப்

பயிற்சியின் 13 வது

பதிப்பு ” எக்குவெரின் ” என்ற

பெயரில்

மாலத்தீவில்

தொடங்கியது .

®     

” எக்குவேரின் ” என்ற

சொல்லுக்கு

திவேஹி

மொழியில் ” நண்பர்கள் ” என்று

பொருள் .

®     

  இந்தியாவும்

மாலத்தீவும் 2023 ஆம்

ஆண்டில்

மாலத்தீவில்

நடந்த ’ கதா ’ பயிற்சி   போன்ற

இராணுவப்

பயிற்சியையும்

நடத்தின .

சமகால இணைப்புகள்